Wednesday, July 8, 2009

திருக்குறள்: 34

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

34


மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர, பிற.


பொழிப்புரை (Meaning) :
மனத்தின் கண் மாசு இல்லாது ஆகுதலே, அனைத்துமான அறனாகும்; மற்றவை யாவும் வெறும் ஆரவாரங்களே.


விரிவுரை (Explanation) :
மனத்தில் மாசு அற்று அதாவது தூய்மையாக இருத்தலே முழுமையான அறமாகும். அன்றில் ஒழுகும் அறமானது மேலோட்ட மானதுமாயும், போலியானதாகவும், பிறருக்கு மாயத் தோற்றம் தரும் வெளிவேடமாகவும் இருப்பதால் உண்மையில் ஒருவனுக்கு அவை நன்மை பயக்காது. அவை வெற்று ஆரவாரமாக அதாவது இரைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைத் தாராது.

மாறாக தூய்மையான மனது, முழுமையான அறமாகி, அமைதியையும், நிம்மதியையும், நன் விழுமியத்தையும் தர வல்லது.


குறிப்புரை (Message) :
மாசிலா மனம் கொள்வதே முழுமையான அறமாகும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆகுலம் - ஆரவாரம், ஒலி, கலக்கம், துன்பம், வருத்தம்
நீர - குணத்தையுடையன

ஒப்புரை (References) :

ஔவையார். மூதுரை: 1
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்.

ஔவையார். நல்வழி: 23
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.

ஔவையார். நல்வழி: 33
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.



***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...