Thursday, August 13, 2009

திருக்குறள்: 70

அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 70
Chapter : 7

Children

Thirukkural

: 70


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ‘இவன் தந்தை
என் நோற்றான் கொல்’ எனும் சொல்.

பொழிப்புரை :
மகன் தந்தைக்குச் செய்ய வேண்டிய உதவி, ’இந்த மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ’ என்று உலகம் சொல்லுமாறு செய்வித்தல்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
ஒரு மகன் தன் தந்தைக்கு செய்யக் கூடிய உதவியானது, ‘இந்த மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ’ என்று ஊரும் உலகமும் மெச்சும்படி சொல்ல வைப்பதாகும். அவ்வளவே!

’இந்த மகனைப்பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ’ என்று எல்லோரும் மெச்சும்படி என்றால் அவன் அனைத்துக் காரியங்களையும் செய்தாக வேண்டும். பெற்றோரைப் பேணுவது, சமுதாயத்தைப் பேணுவது, நல் வழியில் நிற்பது, நற் காரியங்கள் ஆற்றுவது, இல்லறம் ஓம்பி நன் மக்களைப் பெறுவது, பழிக்கஞ்சி வாழுவது, புகழ் தரும் காரியங்களை ஆற்றுவது, உயர்ந்து நிற்பது என்று அதில் அனைத்தும் அடங்கி விடும்.

அது, தனது பிறப்பிற்குக் காரணமாகி, அன்பையும் அறிவையும் ஒருங்கே தந்து, தன்னை ஆளாக்கி மனிதனாக்கிய தன் தந்தைக்குக் காட்டும் கைம்மாறு அன்றில் நன்றி கூட இல்லை முக்கியமாக ”உதவி” என்கின்றார். கைம்மாறு என்பது கடனே என்று திருப்பிச் செய்வதாகிவிடக் கூடாது என்பாதாலே உதவி என்றார். அவ் உதவியின் பால் கிட்டும் நன்மை தந்தை வழியாக, குடும்ப நற்பெயராக மீண்டும் உன்னையே சாரும் என்பது நுட்பம். அது மகனிற்கும் அவனது வாரிசுகளுக்கும் நீண்ட நிலைத்த புகழை நவிலும்.

தந்தை, தாயின் வளர்ப்பிற்கு நன்றி தெரிவித்தல் தான் இயலுமா? பெற்ற கடன், வளர்த்த கடன் என்பவை தீராக் கடன்களே. இவ் வாழ்வு முன்னர் சொன்னதுபோல் அவரவர் செய்த முன் வினைகளுக்கேற்ப அமைந்ததே. எனவே அவற்றில் சில உதவிகளை மட்டுமே இவ்வாறாகச் செய்து அதிலும் தானே பயன்பெற இயலும் என்பதும் சொல்லப்படாத மறை பொருள். கணக்குத் தீர்த்தல் என்றால் பெற்றோருக்குத் தான் பெற்றோராகும் ஒரு வாழ்வை வாழக் கிடைத்தால் மட்டுமே இயலும். எனவேதான் பெற்ற மக்களிற்கு தந்தை தாய் பெயர் சூட்டி, அவர்களின் பெயரன், இன்னாரின் பெயர்த்தி என்று சொல்லி, பாவித்து வளர்க்கும் விதத்தைக் கொண்டார்கள். அவர்களின் வளர்ப்பில் தாய், தந்தைக்குச் செய்யும் பணியாய் நினைத்து ஒழுகி அவர்களும் இதை உணர்ந்து தொடரும் வகை செய்தல் வேண்டும் என்பதே வளர்ப்பு முறை ஆகும். தென்புலத்தாரை, மூதாதையரை நினைந்து மக்கள் தெய்வமென வணங்குதலும் இத்தகைய காரணங்களுக்காகவே.

எனவே தந்தையையும், தன்னையும், தன் வாரிசையும் புகழ வைக்கும் ஒரே வழி, நல்ல மகன், குடிமகன், சான்றோன் எனப் பெயர் எடுப்பதே. உலகம் உங்களின் செய்கைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்பது அறியாதார் இதன் மூலம் அறிய வேண்டியது.

குறிப்புரை :
தந்தைக்கு மகன் செய்ய வேண்டியது எல்லாம் நல்ல பிள்ளை என்று பெயர் எடுப்பதே.

அருஞ்சொற் பொருள் :
நோற்றான் - தவம் இருத்தல்
கொல் - செய்வித்தானோ எனும் ஐயம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 271
பொன்னைக் கடந்திலங் கும்புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிரும் இளம்பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி யாடிக்குப்
பின்னிக் கிடந்ததென் பேரன்பு தானே. 2

திருமந்திரம்: 278
நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள்
இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று
நச்சியே அண்ணலை நாடுகி லாரே. 9

திருமந்திரம்: 411
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே

திருமந்திரம்: 412
தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே

திருமந்திரம்: 413
உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் .(1).பெருவழி அண்ணல் நின்றானே
.(1). பெருவெளி

திருமந்திரம்: 414
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
.(1).கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே

திருமந்திரம்: 415
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
தானொரு காலந்தண் மாயனு மாமே

ஔவையார். ஆத்திச்சூடி:
தந்தை தாய் பேண் 20
நன்றி மறவேல் 21
சான்றோரினத்திரு. 43
தக்கோனெனத் திரி. 54
பெரியாரைத் துணைக்கொள் 82
மேன்மக்கள் சொற்கேள் 94
உத்தமனாயிரு 102

ஔவையார், கொன்றைவேந்தன்: 8
ஏவா மக்கள் மூவா மருந்து.

***

In English:

mahan thanthaikku Atrum uthavi, 'ivan thanthai
en nOtran kol' enum sol.

Meaning :
The help a son can render to his father is to make the society to ask "What penance the father made to beget such a son"

These explanations contain newer and exclusive messages.

Explanation :

A son's help to his father could be only to make the people to ask "What penance the father did to beget him as the son".

If the society has to say that, son must have possibly done all the good things. Taking care of parents, maintaining good name with the society by doing all good works, adopting good principles, performing worthy works, living a good family life and nurturing good kids, living with care for the good name, doing only the good things praised by others, living tall and larger etc. all will be under that.

Valluvar even does not say that it as a mere duty by the son to the father, instead he says that it as the 'help' a son can offer to his father. He said so as only 'Help' so that the thanks returning or performing duty by the son should not be a simple or mere ritual. Such help is going to come back to the son only through his father, as goodwill for the family. That is the hidden message. Such goodwill will long last for him and his offspring.

Is it possible to give the thanks for the parental raisings? The parent’s contributions such as birth given, rising all will ever stay as unfulfilled debts. As we had seen earlier, each one's life is because of their prior deeds. Therefore one can do only these kinds of fewer helps and also benefit from it once again for self. This is the message of this kural. Settling account dues to the parents is possible only by another life wherein if at all one becomes the parent to them. That is the reason in our culture they keep the parent's names to their offspring, at least to get the benefit of calling their own children with their parents names. In children upbringing and naming them after parents they found the way to thank the parents. It is appropriate for the parents to teach this noble way to their offspring to continue this legacy. It all the same reasons that the practice of worshipping and remembering the forefathers and grandparents exists.

Therefore to get goodwill to the father, to the self, to the offspring and to the family, only way is to get a good name for self as a wise, a noble and a good citizen. Those who do not know that you are watched by the world at large understand it through this.


Message :
All a son has to do for his father is just to get good name for himself.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...