Wednesday, October 7, 2009

அதிகாரம்: 12. நடுவு நிலைமை. முகவுரை.

அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

முகவுரை

Chapter : 12

Impartiality

Preface



விருப்பு, வெறுப்பற்ற தன்மையில் நட்பு, பகைமை உணர்வுகளுக்கு இடமளிக்காது நேர்மையும், நியாயத்தையும் கடைப்பிடிக்கும் நிலை.

சமூக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள், வேறுபாடுகள், சண்டை சச்சரவுகளில் பந்த பாசமின்றி, கோப தாபமின்றி, உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், ஆராய்ந்து தெளிந்து எடுக்கும் நிலைப்பாடு. இவை சமூக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, சுயப் பிரச்சினைகளிலும், தேர்வு செய்யும் சந்தர்ப்பங்களிலும், அலுவலகத்தில், பணியில், அரசியலில், நிர்வாகத்தில், மனித உறவுகளில் என்று அனைத்திலும் ஒருவர் கொள்ள வேண்டிய ஒழுக்கம்.

பாத்திரங்களின் கொள்ளளவும், வடிவங்களும் வேறு பட்டாலும் கொள்ளும் நீர் எவ்விதம் சமநிலை அடைகிறதோ அதைப் போன்றே இத் தரணியில் வேறுபாடுகள் எவ்வளவு இருப்பினும் அதில் நிலை மாறாது, சமநிலை கொள்ளுவதே நடு நிலைமை ஆகின்றது.

நட்பிற்காகவோ, நன்றிக் கடனிற்காகவோ மனம் ஒரு சார்பு நிலை கொள்ளுவது இயல்பாயினும், அவ்வாறு கொள்ளுவது தவறு, மாறாக ஒருவர் நடுநிலைமையே கொள்ளுதல் வேண்டும் என்பதற்காகவே வள்ளுவர் இந்த அதிகாரத்தை ‘செய்நன்றி அறிதல்’ அதிகாரத்தைத் தொடர்ந்து அமைத்துள்ளார்.

ஜாதி, இறை நம்பிக்கை, மதம், காவல், மொழி என்று அனைத்திலுமே சார்பு நிலையற்ற தன்மையே நடுவு நிலைமை. அதிகாரம் செலுத்தும் விவகாரங்களிலும், வேண்டியவர், வேண்டாதவர் எனும் நிலையற்று தகுதியின் பால் தேர்வு செய்யவும், சமவுரிமை கொடுக்கும் பாங்கும், பொதுப் பணியிலும், தனிமனித உறவுகளிலும் கூட நடு நிலைமை கொள்ளுதல் மனிதரைச் சான்றோர் எனச் சொல்லும் நிலைக்குத் ‘தகுதி’ படைத்தவர்களாக ஆக்குகின்றது.

தகுதி என்பதற்குத் தமிழில் ‘நடுவுநிலைமை’ வகித்தல் என்ற பொருளும் அமைந்திருப்பதின் அழகிலிருந்தே நடுவுநிலைமையே ஒருவருக்கான உண்மையான தகுதி என்பதும் விளங்கும்.


ஒப்புரை (Reference)

திருமந்திரம்: 320.
நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே

ஔவையார். ஆத்திச்சூடி:
14. கண்டொன்று சொல்லேல்.
46. சீர்மை மறவேல்.
59. தூக்கி வினைசெய்.
67. நிலையிற் பிரியேல்.
72. நேர்பட வொழுகு.



***


In English:

It is the self endurance for the honesty and justice without wish or hate and giving no emotional room to the friendship or enmity.

It is the stand taken on the social life's problems, differences, fights and quarrels, after careful scrutiny with no emotional hijack, no anger and no hate, no love and having no any attachment. This is a virtue not only for the social life but also for the problems of self, decision making situations, offices, politics, administrations, human relationships and in all the activities.

Like the water getting leveled regardless of it's container's shape or size, however be the differences in this world let not affect the stand but maintain the same level by one becomes the equity.

Though the heart falls naturally pray to the friendship or for gratitude to take sides but it is wrong and one should always maintain the just. That is the reason Valluvar rightly kept this chapter after the one on 'The gratitude'.

Unsupported stand on all such as caste, belief on God, religion, governance and language is the equity. The affairs where one can show the power when shown with just with no considerations for the wanted or unwanted, fair selections based on the merit, giving equal rights to everyone, showing equity for the public work as well as for the personal relationship makes the person qualified as the wise.

Qualification in Tamil also means as the equity, by that beauty of which one can understand the real qualification for one is their equity stand only.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...