Sunday, December 27, 2009

திருக்குறள்:172 (நாணுவோர் செய்யார் பழிக்கும் செயல்...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 172

நாணுவோர் செய்யார் பழிக்கும் செயல்...

In English

படு பயன் வெஃகி, பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர்.

பொழிப்புரை :
[பிறர் பொருளை அபகரிப்பதால் கிட்டும்] அதிகப் பயனை ஆசைப்பட்டு பழிதரும் செயலைச் செய்யார்; நடுவுநிலைமை அல்லாதவற்றிற்கு நாணுகின்றவர்.

விரிவுரை :
நடுவுநிலைமை அல்லாதவற்றிற்கு நாணுகின்றவர், பிறர் பொருளைக் கவருவதால் வரும் மிகுதியான பயனை விரும்பி பழிதரும் இழி செயல்களைச் செய்யார்.

பிறர் பொருளைக் கைக் கொள்வதால் கிட்டும் பயன் அதீதமானது, ஒப்பற்றது எனும் நிலையிலும் கூட அஃது பழி தரும் இழிச் செயலென, நடுநிலை அல்லாதவற்றில் நாணம் கொள்ளுவோர் செய்யார் என்பது பொருள்.

ஏழை, எளியவர், வறியவர், தன்னிலும் வலிமை குன்றியோரின் பொருளை அபகரிப்பது எளிது. அதிலும் அவரது உடைமையின் பயன் மிகச் சிறந்தது எனும் நிலையில் அதைக் கைக் கொள்ளவே அறமற்றோர் விரும்புவர். அத்தகைய நிலைமை மிகச் சுலபம் எனினும் நல்லறத்தின் பால் இருப்போர், நடுநிலைமை தவறாத பண்பாளர்கள், அநீதிக்கு வெட்கப்படும் நல் இதயத்தோர், அத்தகைய பழிதரும் பாவச் செயல்களை ஒருபோதும் செய்யார்.

கொள்ளை அடித்து, வஞ்சித்து, ஏமாற்றி, அபகரிக்கும் பெறும் பயனைக் காட்டிலும், அதால் விளைகின்ற பழியும், பாவமும் மிகவும் தீங்கானது என்பது உட்பொருள். மேலும் அவ்வாறு பிறர் பொருளை அபரகரிக்கும் செயல் அறமற்றது, நடுநிலை அல்லாத செயல் என்பதும் தெளிவு.

விலையற்றுக் கிட்டும் பொருட்களின் மீது எப்போதும் வேட்கை கொள்ளாமை நன்று. அதுவே நல் ஒழுக்கம். இனாம் என்பவை எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கும். அன்போடு வரும் பரிசில்களைத் தவிர்ப்பது கூட பல சமயங்களில் நன்மை பயக்கும்.

ஆதலின் பிறர் பொருளை அபகரித்துக் கவருதல் என்பது நிச்சயம் நியாயத்திற்கு எதிரானது, தீராப் பழியையும், நீங்காத பாவத்தையும் தருவது. எனவே அஃது நல் அறத்தோர் கைக்கொள்ளும் செயலும் அல்ல.

எனவே நாம் நல்லறத்தைப் பேணுவோராக, பிறர் பொருளை அபகரிக்கும் அநியாயச் செயல்களைச் செய்யாதவராக இருப்போம்.

குறிப்புரை :
பிறர் பொருளை வேட்கையுற்று அபகரிப்பதால் விஞ்சிய பயனே கிட்டினும் அஃது பழிதரும் நேர்மையற்ற செயலாகும்.

அருஞ்சொற் பொருள் :
படு - சிக்கு, அகப்படு, அழி, இற, மறை, காய், சாய், வருந்து, தொங்கு, புதைபடு, வினைப்படுத்தும், அதிகமான, மிகுதியான, விஞ்சிய, பெரிய, அதிக அளவிலான
அன்மை - அல்லாமை, தீமை

ஒப்புரை :

திருமந்திரம்: 181.
பாலன் இளையன் விருத்தன் எனநின்ற
காலங் கழிவன கண்டும் அறிகிலார்
ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி
மேலுங் கிடந்து விரும்புவன் நானே.

திருமந்திரம்: 220.
பெருஞ்செல்வம் கேடென்று முன்னே படைத்த
வருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வதது இன்பம் வரஇருந் தெண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்கநின் றாரே.

மாணிக்கவாசகர். திருவாசகம்.
1. சிவபுராணம் :

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

ஔவையார். ஆத்திசூடி:
72. நேர்பட வொழுகு.
73. நைவினை நணுகேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்

ஔவையார். நல்வழி:
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

ஔவையார். மூதுரை:
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். 25

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 172

Ashamed of injustice will not do disgrace acts...




In Tamil

padu payan veHki, pazhippaduva seyyAr
naduvu anmai nANubavar.

Meaning :
Those who feel ashamed for unjustifiable acts will refrain from the coveting acts afraid of the despise it brings despite whatever enormous gain it might be.

Explanation :

Those who have shame for unjustifiable acts will never do the coveting acts afraid for the disgrace it would fetch even though it might be extremely profitable.

Though seizing of others property benefits greater or incomparable usage, those who are ashamed of unjustifiable deeds, will not execute it scaring the disgrace it would bring in later is the meaning here.

It is easy to acquire the properties of the poor and destitute and from the weaker people. Especially when their property usage is enormous, generally everybody will be interested to take it over. However, though it is very simple to do so, the people of just and good virtues, those brave hearted who feel ashamed for unjustifiable acts, will never do such disgraceful acts.

The implicit meaning is that than the greater usage of the acquired properties through stealing, deceiving or cheating, the ill and disgrace that brings is more severe. Also such acquisitions are more clearly unjustifiable and non virtuous acts.

It is better to keep no desire at all on the things which come with no cost. Indeed that is the good virtue. All freebies will have expectation strings attached. Many-a- times even avoiding the loving gifts too would be more beneficial.

Therefore covetously seizing and acquiring others property is certainly against the virtues and justice and that would bring endless disgrace and never dying sins. Hence it is not the method or deeds adopted by the wise of good virtues.

So, let us be the follower of good virtues and not the doers of unjustifiable covetous acts.


Message :
Though covetous seizing however extreme beneficial, it is disgraceful, immoral and unethical act.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...