Friday, January 1, 2010

திருக்குறள்:177 (அபகரித்த வளத்தால் நலம் இராது...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 177

அபகரித்த வளத்தால் நலம் இராது...

In English

வேண்டற்க, வெஃகி ஆம் ஆக்கம் - விளைவயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன்!

பொழிப்புரை :
வேண்டற்க, பிறன் பொருளை வேட்கையால் பெறும் ஆக்கத்தை; அவ் விளைவையின் பயன் மாட்சிமைக்கு அரிதானது ஆகையினால்.

விரிவுரை :
பிறன் பொருளைக் கவர்ந்து பெறும் வளத்தால் வரும் பயனில் மகிமை என்பது இருக்காது என்பதால் அதை வேண்டாது இருக்கவும்.

பிறன் பொருளை அபகரிப்பதாலேயே மாட்சிமை என்பது கிடையாது. இதில் அதன் விளைவால் கிட்டும் பயனில் எப்படி மகிமை கிட்டும்?

திருடிச் சேர்த்தவையால் நன்மையோ, பெருமையோ, அமைதியோ ஏதும் வருவதில்லை. அஃது பிறருக்குத் துன்பம் விளைவிப்பதோடு, சேர்ந்தாரையும் இகழ்ச்சிக்கே இட்டுச் செல்லும். எனவே அதன் விளைவால் மதிப்போ, மேன்மையோ, புகழோ ஏதும் வாராது. மாறாக இகழ்ச்சியும், அவமதிப்பும், மரியாதைக் குறைவும் தான் உண்டாகும்.

வருகின்ற வழி நல் வழி அன்றேல் வந்தவை தங்குவதும் இல்லை. தங்கினாலும் அவை நன்மை விளைவிப்பதும் இல்லை. நன்மை தருவது போல் தோன்றினாலும் அவை நீண்ட நாள் தாங்குவதில்லை. வெளிப்படையான இன்பத்தையோ, அமைதியையோ, கௌரவத்தையோ, நிம்மதியையோ அவை ஒரு போதும் வழங்குவதுமில்லை.

பிறன் பொருளை வேட்கை கொண்டு அபகரித்தல் என்பது வெற்றியுமல்ல. அஃது வீரச் செயலும் அல்ல. ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும் சமூகம் பாராட்டும் செயலும் அல்ல. அத்தகைய பொருள் ஈட்டம் வாழ்வை வளப்படுத்துவதும் இல்லை. நல்ல காரியத்திற்குப் பயன் படுவதுமில்லை.

ஆதலினால் பிறன் பொருளை விரும்பி வளம் பெற நினைத்தல் பேதைமை. அத்தகைய தீய வழியினை வேண்டாமையே நன்று.

குறிப்புரை :
பிறன் பொருளை அபகரித்துப் பெறும் மகிமை அற்ற வளத்தை வேண்டாமையே நன்று.

அருஞ்சொற் பொருள் :
மாண்டல் - மாட்சிமைப் பட்டது, மகிமைப் பட்டது

ஒப்புரை :

திருமந்திரம்: 1462
விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே.

திருமந்திரம்: 1535
அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியு முயன்றில ராதலான்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

திருமந்திரம்: 2258
கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதிலுண்ணும் ஆசையும்
உரிய கழுனை முதல்எட்டும் சூக்கத்து
அரிய கனாத்துலம் அந்தன வாமே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 376

புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்
அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377

ஔவையார். கொன்றை வேந்தன்:
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை (பழிச்சொல்)
31. சூதும் வாதும் வேதனை செய்யும்

ஔவையார். நல்வழி:
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை
தானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்
போனவா தேடும் பொருள். 38

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 177

Covetous deeds yield no goodness...




In Tamil

vENdaRka, veHki Am Akkam - viLaivayin
mANdaRku arithu Am payan!

Meaning :
Desire not the gain of covetousness since there is no glory through its usage.

Explanation :

Desire not the earnings of the covetousness since its utilization does not have any glory.

Covetous act by itself does not carry any glory. Then how the usage of its yields carries it either?

Amassing through robbery will not give any goodness, glory or peace. That only creates sufferings to others and in fact it inflicts ill fame to the stealer. Therefore by its yields no honor or eminence or fame comes. Instead it brings only disrespect, dishonor and discourtesy from the society.

When the income comes through improper way it does not stay as well. Even if stays it does not create any goodness. Even if they appear doing goodness it does not last long. It can never give the happiness, peace, respect and peace openly.

Also covetousness is not the conquest and not a victorious act. Also cheating and deceiving acts are not appreciated by the society ever. And such earnings do not bring prosperity to life either. And that is not useful to any good work as well.

Therefore trying to prosper through covetousness is foolishness. Not desiring such ill deeds is only good.


Message :
Desiring not the glory through the wealth of coveting others is only good.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...