Sunday, January 24, 2010

திருக்குறள்:194 (பயனில் பேசுவோரைத் துன்பம் சேரும்...)

அதிகாரம்

: 20

பயனில சொல்லாமை

திருக்குறள் : 194

பயனில் பேசுவோரைத் துன்பம் சேரும்...

In English

நயன் சாரா நன்மையின் நீக்கும் - பயன்சாராப்
பண்பு இல் சொல் பல்லாரகத்து.

பொழிப்புரை :
நலம் சார்ந்திராதே நன்மையிலிருந்து நீக்கும், பயன் சாராத பண்பிலாச் சொல்லைப் பலரிடத்துக் கூறுவதால்.

விரிவுரை :
ஒருவன் பயன் தராத பண்பிலாச் சொல்லைப் பலரிடத்தும் கூறுவதால், அவனை நற்பயன் சாராமல் அனைத்து நன்மைகளிலிருந்தும் நீக்கிவிடும்.

பயனிலாத பண்பற்ற சொல்லைப் பேசுவோனை, மூடனை, நல்லோர் யாரும் சேர மாட்டார்கள். ஆதலின் தனிமைப் படுத்தப்படும் அவனை நன்மைகளும், நலங்களும், நற்பயன்களும், நற்குணங்களும் சாராதே நீங்கிவிடும். உலகில் எல்லா நலங்களும் பயனுடையோரையும், பண்புடையோரையும் தான் சாரும்; பற்றி நிற்கும்.

பண்பற்றுப் பயனிலாத சொல்லை ஒருவன் சொல்லும் போழ்தே அவனை இனிமையும், நன்மையும், சுகமும், சுற்றமும் விட்டு நீங்கி விடுகின்றன. எனவே அவனைத் துன்பம் மட்டுமே சேரும் அன்றில் தொடர்ந்து செல்லும் என்பது மறை பொருள்.

சூழ் நிலைக் கைதியாகவோ, கெட்ட நண்பர்கள் குழுமிய நேரத்தினாலோ ஒருவன் பயனிலாத சொல்லை உபயோகிக்க முயலும் போது கூட அஃது அடிப்படையில் பண்பல்ல என்று உணர்ந்து விட்டால் அச் சொல்லைச் சொல்லாதே நீங்கி விடலாம். அதால் தேவையற்ற பிரச்சினைகளிலிருந்தும், கூடா நட்பிலிரிந்தும் கூடப் பிரிந்து நல்வழிக்கு வந்து விடலாம்.

சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமானர்கள். சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான். நகைச் சுவை என்று அர்த்தமற்றவற்றை, பண்பற்றவற்றை, உபயோகமற்றவற்றை, இனிமையற்றவற்றைப் பேசாது இருத்தல் கோடி நன்மை செய்வதற்குச் சமம். ஆதலில் எப்போதும் சிந்தித்துத் தேவையானதை, பொருளுள்ள சொல்லை மாத்திரம் பேசுவதே எக்காலத்திலும் நல்லது.

குறிப்புரை :
பண்பிலாது பயனற்றவற்றைப் பலர் முன் பேசுவோனை இனிமையும், நலமும் விட்டுப் பிரிந்து சென்று விடும்.

அருஞ்சொற் பொருள் :
சாராத - சார்ந்திராத, ஒட்டாத, அடுத்திருக்காத, புகலடையாத, அடைக்கலமாகாத, ஆதாரமற்ற, பக்கத்திருக்காத, நம்பியிராத,
நயன் - கனிவு, இனிமை, அன்பு, பரிவு, பண்பு, நலம், நாகரீகம், அருள், சிறப்பு, நன்மை, பக்தி, நற்பயன், கொள்கை, நியதி, உள்ளீடு, பசை, உறவு, வழிமுறை,
அகத்து - இடத்து, இடத்தின் விகுதி; உள்ளே, மனம்

ஒப்புரை :

திருமந்திரம்: 133
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்
ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி
இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.

திருமந்திரம்: 169
இயக்குறு திங்கள் இரும்பிழப்பு ஒக்கும்
துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.

திருமந்திரம்: 240
வேட நெறிநில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்பார் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாமே.

திருவாசகம். மாணிக்கவாசகர்.
5. திருச்சதகம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை)

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19

ஔவையார். ஆத்திசூடி:
52. சொற்சோர்வு படேல்.

ஔவையார். நல்வழி:
பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும். 14

***

In English:

Chapter : 20

No Vain Utterance

Thirukkural : 194

Afflictions join the vain speakers...




In Tamil

nayan sArA nanmaiyin nIkkum - payansArAp
paNpu il sol pallArakaththu.

Meaning :
All gains and goodness leave when uncultured vain words are spoken to many.

Explanation :

All the gains and goodness leaves one when one speaks useless and uncivilized words in front of many.

No wise and good people will join the uncultured vain speakers, the senseless. Therefore all the goodness, gains, betterments, good virtues leave such isolated people. In this world all goodness will only go to useful and courteous and benefit them.

Uncourteously when one says useless words instantly pleasantness, goodness, happiness and relations just leave. Therefore only afflictions will join or continue one is the implied meaning here.

As scape-goat to the circumstances and to the joint of evil friends when one tries to use useless words, if one moment one thinks that it as the uncourteous can escape from uttering it. Thus one can exit from the subsequent problems arising and even can come out of bad friendships to the good virtuous path.

We are the boss for the unuttered words. Uttered words are the bosses for us. Not cracking a joke of vulgar, senseless, cultureless, useless, pleasant less words and keeping quiet is equivalent to crores of goodness. Therefore it is always better to think and speak only the useful and necessary.


Message :
When vain words are spoken in discourtesy to many, happiness and goodness will leave instantly.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...