Sunday, January 17, 2010

அதிகாரம்:19. புறங்கூறாமை - முடிவுரை

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

முடிவுரை

Chapter : 19

Non-Slandering

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

181 நல்லறத்தை ஒழுகாது இருப்பினும் கூட புறம் சொல்லாமை எனும் ஒரே ஓர் ஒழுக்கம் இனிமையைக் கொடுக்கும்.

Though not so virtuous on his deeds when one just maintains the non-slandering as the virtue that will yield him the happiness.
182 நல்லறத்தை ஒழுகாது செய்யும் தீய வினைகளிலும் கொடியது புறம் பேசிவிட்டு பொய் முகத்தோடு நகுதல்.

Than the evil deeds of not following the good virtues, the worst evil is that of slander followed by pretentious behaviour with false smile.
183 இட்டுக் கட்டிப் புறம் பேசி பொய்த்து வாழ்வதைக் காட்டிலும் சாவது நல் அறமாகும்.

Death is a good virtue to life than living with traits of slandering others.

184 யாரிடத்தும் உளக் கருத்தை முழுவதுமே சொல்லினும் கூடக் காணாததைத் திரித்துப் புறம் கூறுவதை மாத்திரம் எவ்விடத்தும் எப்போதும் செய்யாதீர்.

Though speak the inner opinion to anyone by heart's content, never slander and speak or twist the unseen, forever and anywhere.
185 உள்ளத்தில் நேர்மை அற்றவன் என்பது ஒருவன் பிறரைப் பற்றிப் புறங் கூறும் சிறுமையால் தெரிந்து விடும்.

One's unrighteousness in heart will become evident through his mean mentality of slandering on others.
186 மற்றோன் பழியைப் புறங்கூறுபவன் அவனது பழிகளின் யோக்கியத்தால் பிறரால் புறம் கூறப்படுவான்.

That who slanders another for his sins will get slandered by others for his sins in appropriations.
187 இணக்கமாக இனிய நட்பைத் தேற்றத் தெரியாதவரே புறங்கூறிப் பகை செய்து நட்பைப் பிரிப்பர்.

Those diffident who know not to make the pleasant friendship amiably only will slander to create enmity and split the friendship.
188 நெருங்கியவரையே தூற்றும் வழக்குடையோர் அயலாரை என் செய்ய மாட்டாரோ?

Those who have the habit of slandering the closest too, what won’t they do to others?

189 பழிச்சொல்லைப் புறங்கூறுபவனையும் பொறுத்துச் சுமக்கின்றதே பூமி, தன் அறத்தைக் காப்பதற்காகவோ?

The earth is bearing on the slanderer's disgrace and load, is it to save its own good virtue?
190 பிறரின் குற்றம்போல் தம் குற்றம் அறியும் உயர்வுடைய உயிர்களுக்குத் தீங்கே இராது.

Like finding faults with others the noble souls which can detect their own defects will never get agonies.

குறிப்புரை

நல்லறத்தை ஒழுகாதே இருப்பினும் கூட புறம் சொல்லாமை எனும் ஒரே ஓர் ஒழுக்கம் இனிமையத் தர வல்லது. யாரிடத்தும் உளத்தைத் திறந்து பேசினும், காணாததைத் திரித்துப் புறம் கூறுவதை எஞ்ஞான்றும் செய்தல் ஆகாது. பிறர் குற்றம்போல் தம் குற்றம் அறியும் உன்னத உயிர்களுக்குத் தீங்கே இருக்காது.

நெருங்கியவரையே தூற்றும் பழக்கம் உள்ளவர் அயலாரை என் செய்ய மாட்டார்? நட்பைப் பேணத் தெரியாதவரே புறங்கூறி பகை செய்து நட்பைப் பிரிப்பர். நல்லறத்தை ஒழுகாததைக் காட்டிலும் தீதானது புறம் சொல்லிப் பொய்த்து நகைப்பது. அவ்வாறு புறம் பேசி பொய்த்து வாழ்வதிலும் சாவது நல் அறமாம்.

ஒருவன் உள்ளத்தில் நேர்மை அற்றவன் என்பது அவன் பிறரைப் பற்றிப் புறங்கூறினால் தெரிந்து விடும். மற்றவரைப் பழிப்போன் அவனது குற்றங்களால் பிறரால் எள்ளப் படுவான்.

பூமி தன் அறக் கடமை தவறாது ஒழுகுவதால்தான் புறங் கூறுபவர்கள் இன்னமும் வாழ முடிகின்றது.

Message

Non-slanderous trait alone can yield happiness though one is not so virtuous in habits. Speak never the slander or twist the unseen though speak to the heart content. Those noble souls of finding fault on their self like finding on others will never get agonies.

Those who can slander on the dear ones too, what won't they do to others? Only those who can't maintain the amiable friendship will create enmity through slander and split the friendship. False smile with slandering is the worst evil than that of not following the good virtues. In fact, Death is a good virtue to life than living by slandering others.

One's unrighteousness will become evident when they slander on others. Those who does slander and disgrace on another get similar returns by others in appropriateness to their offenses.

Only since the earth is continuing its own good virtue the slanderers are after all left yet to live.

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...