Saturday, February 13, 2010

திருக்குறள்: 207 (செய்வினைப் பாவம் நின்று கொல்லும்...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 207

செய்வினைப் பாவம் நின்று கொல்லும்...

In English

எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்.

பொழிப்புரை :
[வேறு] எத்தகையப் பகையை உடையவரும் அதனின்று தப்பிவிடுவர்; [ஆனால் தீ] வினைப் பகை [அழியவே] அழியாது தொடர்ந்து பின் சென்று வருத்தும்.

விரிவுரை :
எவ்வளவு கொடிய பகையை உடையவரேனும் அதனின்று எவ்விதமேனும் முயற்சித்துத் தப்பித்து விடுவர். ஆனால் ஒருவர் செய்த தீ வினையால் விளைந்த பகைமை எனும் பலன் அழிக்க இயலாதவாறு, அவரைத் தப்பிக்க விடாது, பின் சென்றுத் துன்புறுத்தி வருத்தி நிற்கும்.

அதாவது ஒருவர் வேறு எப்படிப்பட்டப் பகையினின்றும் அல்லது இடர்களிலிருந்தும் முயற்சித்துத் தப்பிக்க இயலலாம்; ஆனால் அவர் பிறர் பால் செய்த தீ வினைப் பயனால் விளைந்த பகைமையிலிருந்து தப்பிக்கவே முடியாத வகையில் அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு வருத்தித் துன்புறுத்திக் கொல்லுமாம்.

வினையாலன்றி வருகின்ற எந்தப் பகையையும் இடரையும் ஒருவர் எவ்விதமேனும் வென்றோ அன்றில் தப்பித்தோ தவிர்க்கலாம். ஆனால் முன் வினைகளிலிருந்தும் பிறருக்குச் செய்த செய் வினைகளிலிருந்தும் தப்புவதற்கு வழியே இல்லை. “ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்” . எனவே செய்கின்ற ஒவ்வொரு வினையையும் சீர் தூக்கி நல்லதையே செய்ய வேண்டும் என்பது இக்குறளின் உட் கருத்து.

செய்து விட்ட வினையைத் திருத்துவது கடினம். சமயங்களிலில் இயலாமலே கூடப் போகலாம். ’விதியை மதியால் வெல்ல முடியாது’, ‘எல்லாம் விதிப்படித்தான் நிகழும்’ என்பவை, முன் வினைகளைத் திருத்த இயலாது என்பதன் சுருக்கமே. உதாரணத்திற்குத் தவறி ஒரு கொலையைச் செய்து விட்டால், மீண்டும் உயிர் தர இயலுமா?

ஆதலின் எப்போதும் தீய வினையைச் செய்வதில்லை எனும் கொள்கையுடன், சிந்தித்துப் பணி ஆற்றினால் இவ்விதமான மாற்ற இயலாத குற்றங்களிலிருந்து ஒருவர் தப்பிக்கலாம்.

எப்போதும் கருமங்களை எண்ணித் தெளிந்து துணிந்து, துவக்க வேண்டும். நடக்கும், நிகழும் நிகழ்வுகளை நாம் மதியால் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். ஒருவேளை அவை விதி வசத்தால் மாறான பலனைத் தர நேரினும் கூட நாம் மாறாது நல்லதை மட்டுமே செய்தலை ஒழுகுதல் வேண்டும்.

முன், பின் வினைகள் என்பதில் முன் வினைகளின் பலனையே விதி வசத்தால் ஆனது என்பது. பெற்றோர், உற்றார், சுற்றம், இற்றைய வாழ்வின் பலன்கள் எல்லாவற்றிலும் விதியின் தாக்கம் உண்டு. ஒவ்வொரு செயல் பாட்டின் முடிவிலும் முன் வினைகளின் தாக்கம் பிரதிபலிக்கும். அவையே எதிர் பாராத முடிவுகள் தோன்றுவதற்கான காரணமும் ஆகும்.

எனவே நன்மையே செய்வோருக்கு, முன் வினைகளிலும் நன்மை செய்திருப்போருக்கு எல்லாமே கூடி வரும். இன்பங்கள் நிறையும்.

”வினை விதைத்தவன், பலன்களை அடையாமல் ஓடித் தப்பிக்க முடியாது”. “முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்” , என்பதனால், செய்யும் ஒவ்வொரு செயலையும் எப்போதும் சீர் தூக்கிப் பார்த்து நல்லனவற்றை மட்டுமே செய்தல் அன்றிச் செய்வித்தல் வேண்டும்.

குறிப்புரை :
ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.

அருஞ்சொற் பொருள் :
உற்றார் - சிறப்பு அடைந்தவர்கள், உறவினர், நண்பர்
உய் - உயிர் வாழ், நற்கதி அடை, துன்பம் நீங்கப் பெறு, இருள் நீக்கு
வீயாது - அழியாது, நீங்காது, இறக்காது, மாறாது, ஓயாது, ஒழியாது
அடும் - காய்ச்சும், சமைக்கும், வருத்தும், அழிக்கும், கொல்லும், உருக்கும், குத்தும்.

ஒப்புரை :

திருமந்திரம்: 435
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

திருமந்திரம்: 667
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே

திருமந்திரம்: 744
மனைபுகு வீரும் மகத்திடை நீராடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே

திருவாசகம்:
4. போற்றித் திருஅகவல் :
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

பட்டினத்தார். பொது:
விட்டேன் உலகம்; விரும்பேன் இருவினை; வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய் கெடாத நிலை
தொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே! 24

என் செயலாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே!
உன் செயலே யென்று உணரப் பெற்றேன்; இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை இறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே! 22

அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே! 37

ஔவையார். ஆத்திசூடி:
59. தூக்கி வினைசெய்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஔவையார். மூதுரை:
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

ஔவையார். நல்வழி:
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஔவையார். நல்வழி:
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 207

The sin of evil deed afflicts undying...




In Tamil

enaip pakai uRRArum uyvar; vinaip pakai
vIyAthu, pin senRu, adum.

Meaning :
Whatever enmity one have may escape from it; but not from the sin of evil deed done as that would never die but afflict only after.

Explanation :

Whatever and however bad the enmity one has may strive and escape from it somehow. But one cannot from the sins of committed evil deeds on others as that would stay forever undying and afflicting with no room for them to escape.

It means that one can strive and escape somehow from the enmity or troubles and problems cropping up in life without much damage. But one cannot from the committed sins of evil deeds to others as that won't allow escaping but will give only hardships and afflictions later without any way to destroy it.

The enmity and any trouble coming out not though the past deeds may be escaped or redressed. But there is no way for one to escape one's own prior deeds. The prior deed reaps and feeds. Therefore one must weigh one's each and every action and should carry out only the good ones is the implied meaning here in this Kural.

It is very difficult to correct the already committed deed. Sometimes it may not be possible to rectify at all. "The destiny cannot be changed", "All will happen as per the fate" and all such are only summarizes that the prior deeds cannot be altered for its results. For example, after committing a murder, Is it possible for anyone to provide back the life?

Therefore with the firm mind that not to do any evil deeds as the policy, if one thinks and does one's work at always, one can escape from committing such unchangeable offenses.

Always we must think well, plan and start any work. We must address thoughtfully and act on the current events and happenings. By any chance of the fate even if they result unfavorably, we must not change from our stand but only should carry on with only the good deeds and virtues.

Among the deeds of the prior and past the prior one is what also known as the fate. Parents, relatives, environment, the result of current life deeds all have the impact of fate. It reflects at the end of each and every deed. In fact it is the actual reason for any improper results.

Therefore for those who do only good deeds, for those who have done good deeds prior all will happen favorably. Happiness gets filled.

It is because "That who sowed the evil deed cannot escape from its fruits." "Whatever done in the forenoon only results in the afternoon", one should really weigh one's each and every action and perform or make others to perform only the good deeds at always.


Message :
One can never escape from the sin of evil deed committed. That would ever stay undying to afflict and suffer later.

***

Thursday, February 11, 2010

திருக்குறள்: 206 (நல்லவை வேண்டின் அல்லவை செய்யாதே...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 206

நல்லவை வேண்டின் அல்லவை செய்யாதே...

In English

தீப் பால தான் பிறர்கண் செய்யற்க - நோய்ப் பால
தன்னை அடல் வேண்டாதான்!

பொழிப்புரை :
தீப் பயன் தருவனவற்றை தான் பிறர் கண் செய்யாது விடுக; துன்பப் பிணிகள் தன்னை வருத்த வேண்டாதான்.

விரிவுரை :
துன்பப் பிணிகள் தம்மைப் பீடித்து வருத்த வேண்டாதாவன், பிறர் பால் தீமை விளைவிப்பதைச் செய்தல் கூடாது.

”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கூறுவதைப் போல, அவரவர் துன்பங்களின் துவக்கம் அவரவரே. ஆதலின் அத்துன்பம் தம்மை முழுவதுமாக வென்றுவிடக் கூடாது என்று விரும்புவோர், முதலில் பிறருக்குத் தீயவை செய்யும் எண்ணத்தை ஒழித்தல் வேண்டும். நாம் நமக்கு எதை விரும்புகின்றோமோ அதையே பிறருக்கு வழங்குதல் வேண்டும். ஏனென்றால் அவையே பன் மடங்கில் பிற்பாடு நம்மை வந்தடையும். முற்பகல் செய்த வினையே பிற்பகலில் பயனை விளைவாய்த் தருகின்றது.

பிறர்பால் தீய எண்ணம் கொள்ளாதோருக்குத் தீமைகள் உண்டாவதில்லை. இருந்தும் அவர் மேல் வேண்டுமென்று தீமை செய்வோர் தாமாகவே அழிந்து விடுவர். ஆதலால் எதிர்பாராமல் ஏற்படுகின்ற துன்பங்கள் தாமாகவே மறைந்தும் விடும். உண்மையில் அவர்தம் நல் எண்ண மிகுதியால் அவருக்கு நன்மைகளே பெருகி வரும்.

ஒருவர் தீயவை எண்ணும் நேரத்தில் நன்மையை எண்ணினால் தேவையற்ற துன்பங்கள் தடுக்கப் படுவதுடன், உண்மையில் நன்மைகளே அதிகமாக விளைய வாய்ப்பு உண்டாகின்றது.

ஆதலின் தீயவை, தம்மை அணுகுவதையும், தொடர்வதையும், தம்மைப் பீடித்து மிகுந்து வென்று துன்புறுத்தாமல் இருக்க வேண்டுவோர், அடிப்படை ஒழுக்கமாக எப்போதும் பிறர்பால் தீமை உண்டாவதை, விளைவதை விரும்பாதீர்; செய்யாதீர்.

குறிப்புரை :
தீயவை தன்னை வருத்த வேண்டாதவன் முதலில் தாம் பிறர்பால் தீயவற்றை எண்ணவோ, செய்யவோ கூடாது.

அருஞ்சொற் பொருள் :
தீப் பால - தீய பலன்கள் தருகின்ற
நோய்ப் பால - நோய்ப் பலன்கள் தருகின்ற, பிணிகள் தருகின்ற
நோய் - துக்கம், துன்பம், பிணி, வியாதி, நலிவு, வலி, குற்றம்

ஒப்புரை :

திருமந்திரம்: 538
ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

திருமந்திரம்: 431
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே

திருமந்திரம்: 432
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே

திருவாசகம்:
4. போற்றித் திருஅகவல் :

(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80

பட்டினத்தார். பொது: 19
மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு
வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!

ஔவையார். ஆத்திசூடி:
65. நன்மை கடைப்பிடி.

ஔவையார். கொன்றை வேந்தன்:
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

ஔவையார். மூதுரை:
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18

ஔவையார். மூதுரை:
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 206

Don't do evil deeds for want of own goodness...




In Tamil

thIp pAla thAn piRarkaN seyyaRka - nOyp pAla
thannai aTal vENdAthAn!

Meaning :
That who desires not the afflictions for the self should never do the evil deeds to others.

Explanation :

That who does not want the afflictions to influence and bring suffering for the self should not commit any evil deeds to others.

As in the maxim "The good and bad comes not through others“, the root cause for their afflictions are them-selves alone. Therefore those who wish not such afflictions to gallop themselves firstly should stop the ill thinking of doing evil deeds to others. Whatever we desire to have ourselves should be offered to others. Because that is what later comes to us in multitudes. Whatever one has done in the forenoon only results one in the afternoon.

There will not be afflictions to those who think not evil deeds to others. Even those who attempt afflictions deliberately on such will only get spoilt themselves. Hence, even the unexpected afflictions cropped will disappear automatically very soon. In fact only goodness and prosperity flourishes to them for their sincere thinking of only goodness to others.

When one thinks only goodness instead of evil ideas, not only the unnecessary afflictions get stopped but in fact the chances of getting goodness only increase.

Therefore those who wish not the afflictions coming closer or following or assuming to give pain and suffering to the self, should never think or commit the evil deeds to others as their fundamental principles.


Message :
That who desires not any suffering to the self firstly should not think or do any evil deeds to others.

***

Tuesday, February 9, 2010

திருக்குறள்: 205 (இல்லாமையால் பொல்லாங்கு செய்யாதே...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 205

இல்லாமையால் பொல்லாங்கு செய்யாதே...

In English

’இலன்’ என்று தீயவை செய்யற்க! செய்யின்,
இலன் ஆகும், மற்றும் பெயர்த்து.

பொழிப்புரை :
[தான் பொருள் ஏதும்] இலாதவன் என்று [பிறர் பால்] தீயவற்றைச் செய்யாதீர். செய்தால் ஏதும் இலாதவனாகவே ஆக்கப் படுவீர் - மறுபடியும் [இருக்கும்] நிலை விலகி.

விரிவுரை :
தாம் பொருள் ஏதுமற்றவன் என்று பிறருக்குத் தீயவற்றைச் செய்யாதீர். அவ்வாறு செய்தால் தமது இப்போதைய நிலையும் விலகி அனைத்திலும் இன்னும் ஏதுமிலாதவராகவே ஆக்கப் படுவீர்.

கேடு செய்வதற்குச் சொல்லப்படும் காரணங்களுள் முக்கியமானவை பொறாமையும் இல்லாமையும். அதாவது தன்னிடம் ஏதுமில்லை என்பதனால் பொல்லாங்கு செய்வது. அத்தகைய “ஏதுமில்லை” என்ற எண்ணத்தோடு ஒருவர் தீங்கு செய்யச் செய்ய அவருக்கு இல்லாமையே மீண்டும் மீண்டும் மேவி வரும்.

பொருளில் வறியவர் என்கின்ற மாறுபடும் சூழ்நிலை உண்மையை உணராது, வறுமையே தனது நிலை என்று ஆழ்நிலை எண்ணமாக்கிக் கொண்டால் அஃது ஒருவரை எப்போதும் எல்லாவற்றிலும் ஏதுமில்லாதவராகவே ஆக்கி விடும். ஆழ்மன எண்ணங்களுக்கு நல்லவை, கெட்டவை என்று தேர்வு செய்யும் திறமோ, நேர்மறை, எதிர்மறைப் பேதமோ இல்லை. அதில் எண்ணியவையே அடிப்படைக் காரணிகளாகி வாழ்வின் அனைத்துக் கூறுகளிலிலும் பிரதிபலித்து உண்மையில் வாழ்வாகவே ஆக்கி விடும்.

அதைப் போன்றே காரணங்கள் யாதேயாகினும் பிறருக்குச் செய்தவை தமக்கே பன் மடங்கில் விளையும் என்பதும் இயற்கையின் நிருபிக்கப்பட்ட நடைமுறை விதி. ஆதலின் பிறருக்குச் செய்யும் தீய துன்பம் அவருக்குத் தீமை விளைவிக்கிறதோ இல்லையோ தனக்கு நிச்சயமாகப் பலனை பிற்பாடு மறக்காது பன் மடங்கில் வழங்கிவிடும். வினையை விதைத்தவரே வினையை அறுப்பர்.

மேலும் பொருள் ஏதுமற்ற அல்லது வறியோன் என்ற நிலையில் செய்யப் பெறும் தீதானது என்பதால் அதற்கு விதி விலக்கு ஏதும் இல்லை. பசிக்குத் திருடினாலும் திருடுதல் பாவமே. அத் தீயவை எப்போதும் நன்றென்று ஆகி விடாது. பிறருக்குச் செய்யும் தீமையால் தமக்கோ பிறருக்கோ எந்தவித நன்மையும் உண்டாகப் போவதும் இல்லை. தீமை செய்வதற்குச் சொல்லப்படும் அல்லது அடிப்படையில் எண்ணப்பட்ட காரணம் எண்ணியவருக்கே பன் மடங்கில் பலனைத் தரும், சார்ந்து நிற்கும் என்பதே இக்குறளின் உட் பொருள். ஆகப் பிறருக்குத் தீமை செய்வதால் இலாபம் என்பது ஏதுமில்லை மாறாகத் தனக்கே பன்மடங்கில் நட்டம் என்பதே உண்மை.

ஏதுமற்ற நிலையிலும் எண்ணும் நல் எண்ணங்கள், பிறருக்குச் செய்யும் உதவி, பொது நலனிற்குச் செய்யும் நற் காரியங்கள், ஒருவரின் இல்லாமை எனும் நிலையை நிச்சயமாகப் போக்கி விடும். இதையே அவருக்கு “மனம்போல் வாழ்வு” என்றும் கூறுவதுண்டு. உண்மையில் ஒருவருக்கு நல் எண்ணங்கள் தோன்றத் தோன்ற அவரது எண்ணத்தில் பொருளாதார நிலை ஒரு பொருட்டே ஆகாது. ஒருவர் நற் காரியங்கள் செய்ய எண்ணி ஆழ்மனத்தில் திடப்பட்டு விட்டால் அதை நிறைவேற்ற வழிகளும், வசதிகளும் தாமாகவே தோன்றிவிடும்.

ஆக எதை ஆழ்ந்து நினைக்கிறோமோ, எண்ணுகின்றோமோ, பிறர்பால் செய்கின்றோமோ அவையே பன்மடங்கில் பெருகி நம்மைச் சாரும்.

ஆதலின் தீயவற்றை ஏழ்மையின் காரணமாகவோ வேறு எக்காரணம் கொண்டோ செய்தல் ஆகாது என்பது ஒன்று. மற்றது ‘நல்லதை’ எண்ணும் எண்ணத்தினால் ‘இல்லாமை’ என்னும் நிலை பெயர்ந்து நன்மைகள் நிறைக்கப்படும் என்பதும் இக்குறளின் மறை பொருள்.

குறிப்புரை :
வறுமையால் தீங்கு செய்தல் ஆகாது. அவ்வாறு செய்யின் தமது நிலை விலகித் தாழ்ந்து மீண்டும் அனைத்திலும் தீவிர வறுமையே மேவும்.

அருஞ்சொற் பொருள் :
இலன் - இல்லாதவன், ஏழ்மையன், வறியவன்
பெயர்த்து - நிலைவிலகு, திருப்பு, புரட்சி, புரட்டு, மீளுதல், திரும்பல், போதல், வேறுபடல், நகர்த்து, அசைத்து, மேலும், பின்னும்

ஒப்புரை :

திருமந்திரம்: 463
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே
வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே

திருமந்திரம்: 509
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

திருமந்திரம்: 511
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்
கள்ளத்தி னாரும் கலந்தறி வார்இல்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தல் இட்டதோர் பத்துள் ளாமே.

திருவாசகம்:
4. போற்றித் திருஅகவல் :
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

யானை முதலா எறும்பு ஈறாய
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனம் இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒரு மதித் தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும 20

பட்டினத்தார். பொது: 5
கண்ணுண்டு காணக் கருத்துண்டு நோக்கக் கசிந்துருகிப்
பண்ணுண்டு பாடச் செவியுண்டு கேட்கப் பல்பச்சிலையா.
எண்ணுண்டு சாத்த எதிர்நிற்க ஈசன் இருக்கையிலே
மண்ணுண்டு போகுதை யோ! கெடுவீர் இந்த மானுடமே!

ஔவையார். ஆத்திசூடி:
57. தீவினை யகற்று.

ஔவையார். கொன்றை வேந்தன்:
67. பையச் சென்றால் வையம் தாங்கும்

ஔவையார். மூதுரை:
மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12

ஔவையார். நல்வழி:
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு. 7

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 205

Commit not the ill due to poverty...




In Tamil

'ilan' enRu thIyavai seyyaRka! seyyin,
ilan Akum, maRRum peyarththu.

Meaning :
Perpetrate not the evil to others due to self poverty. If you do so, you will become poorer yet from your current status.

Explanation :

Never commit evil deeds to others due to your impoverishment. If you do so then you will become yet poorer from your current status in everything.

Important reasons for evil deeds are said to be the jealousness and poverty. That is one does ill things to others due to one's self poverty. As long as such evil deeds are carried out by one with the cause of "Nothing I possess” thinking, it will only aggravate Nothingness in abundance to him in return again and again.

Without knowing the fact that the economical status of one can ever change, if one registers that the perennial poverty is as his state in his subconscious mind that will make him ever to be in poverty in everything. Subconscious mind cannot interpret the good or bad or analyze to differentiate the positive or negative thinking. It will only trust whatever thought as true and make that as the base reason for everything in life and in fact turns one's life itself into so.

Similarly regardless of the reasons, whatever done to others only will be returned to the self in multitudes is again a nature's proven practical law. Therefore the evil things whatever done to others whether it makes afflictions to them or not, certainly will do in multitudes to the self later. As we sow, so we reap.

Also the evil deed performed on others due to the self impoverishment will not get any exemptions or concessions. Stealing for the hungry is also the sin of theft. Never such ill can become a good deed. Also by doing evil deeds to others there will be no gain to the self or anyone. The fundamental cause or the basic reason or thinking behind the evil deed shall only return in multitudes to the evil thinker and only affect him is the implied meaning here in this Kural. Therefore there is no any profit by evil doings to others but only loss to the self in multitudes is the fact.

The good thinking, the help offered to the others, the good deeds carried out for the public benefit by one, even on one's impoverishment, certainly will remove one's poverty at the end. The greatest wealth for one is the contentment. Therefore when one enjoys the contended life, they say that he got the deserved life as what he the thought of in his good heart. In fact, as long as one continues the good thinking his impoverishment will not be a concern at all. If one makes stronger wish to do the good deeds in his subconscious mind then to accomplish it the methods and facilities will automatically flourish.

Hence whatever we think in deep, whatever we do to others, only those will be returned and result us in multitudes.

Therefore the point one is never commit the evil deeds despite the self impoverishment or reasons what so ever. Another one is by good thinking the state of 'impoverishment" will go away and instead all prosperity will get filled are the implied meaning here in this Kural.


Message :
One shall never do evil deeds due to poverty. If one does so then shall go yet down from the current status into greater impoverishments in everything.

***