பெற்றாற் பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப் புத் தேளிர் வாழும் உலகு. | |
|
பொழிப்புரை : |
துணைவனைக் கணவனாகப் பெற்றவள் அவனுடன் கூடி முயங்கப் பெற்றால், பெற்றாலும் பெறுவர் பெண்டிர், பெருஞ் சிறப்பாகிய புத்துயிர் தரிக்கும், வாழும் உலகு. |
|
மற்றவர்களிடம் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட விளக்கம் என்பதை அறியவும். |
|
விரிவுரை : |
இல்லறத்தில் கணவனைப் பெற்றவள் அவனுடன் கூடி முயங்கப் பெற்றால் பெற்றாலும் பெறுவர் பெண்டிர், பெருஞ்சிறப்பாகிய புத்துயிர் தரிக்கும், கருவினில் உயிர்கள் வாழும் உலகு. அதாவது தாய்மை ஆகும் நிலை பெற்று, கருவுற்று, புத்துயிர் பெற்றுப் படைக்கும் பெருஞ் சிறப்புப் பெறுவர் என்பது பொருள்.
இல்லறப் பெண்ணிற்குத் தாய்மைப் பேறு பெறுவதே பெருஞ் சிறப்பு, எனவே அன்னிலைக்கான முன் நிலையாக கருவுற்றாலேயே அவர் புத்துயிரைத் தாங்கி அவை வாழும் உலகைப் பெற்றுப் பெருஞ் சிறப்புப் பெற்றுத் திகழுவர் என்பது பொருள்.
கருவுறுதல் என்பதே இல்லறம் இனிதே நடத்தி தாய்மைக்குத் தயாரானதாய் உலகம் அறியும் அடையாளம். அதுவே இல்லாளுக்குப் பெருஞ் சிறப்பைத் தரும் பெருமை. வாழையடி வாழையாய் குலம் தளைக்க, மனிதம் தொடரக் கிடைக்கும் பேறுதானே இல்லறத்தில் வாழ்க்கைத் துணைவி பெறும் முதல் முக்கியமான பேறு? அதைப் பெற்றுப் புத்துயிர் கொடுக்கும் பேறு பெண்மைக்கே பெருஞ் சிறப்புத்தானே?
அந்தப் பேற்றைப் பெற்ற பெண்டிர் அப்புத்தியிர் வாழும் உலகைத் தன்னுள் பெறும் பெருஞ்சிறப்புப் பெறுவர் என்பது இல்லாளுக்கு வாழ்க்கையில் வீடு பேறு பெறுவதைப் போன்றதே. |
|
குறிப்புரை : |
பெண் தாய்மைப் பேற்றிற்காகக் கருவுற்றாலேயே, தனக்குள் உயிர்கள் தரிக்கும் உலகம் பெற்று, இல்லறத்தில் பெருஞ் சிறப்புப் பெற்றுத் திகழுவர். |
|
அருஞ்சொற் பொருள் : |
புத் தேளிர் - புத்துயிர் தளிர்க்கும், தரிக்கும், சிறக்கும், பிறக்கும் தேளி - ஒரு மீன்வகை தேளிர் எனப்படுவது கருவின் முதல்/ஆரம்ப நிலையாக இருக்கக் கூடும். |
|
ஒப்புரை : |
திருமந்திரம்: 396 ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே
திருமந்திரம்: 397 புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல் புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல் புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே
திருமந்திரம்: 416 அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும் இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும் முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும் அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே
திருமந்திரம்: 417 உற்று வனைவான் அவனே உலகினைப் பெற்று வனைவான் அவனே பிறவியைச் சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை மற்றும் அவனே வனையவல் லானே
திருமந்திரம்: 418 உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந் தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே
திருமந்திரம்: 420 அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும் பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித் தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே
திருமந்திரம்: 459 ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப் பாயுங் கருவும் உருவா மெனப்பல காயங் கலந்தது காணப் பதிந்தபின் மாயங் கலந்த மனோலய மானதே
திருமந்திரம்: 463 ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப் பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே
திருமந்திரம்: 475 அருளல்ல தில்லை அரனவன் அன்றி அருளில்லை யாதலி னவ்வோர் உயிரைத் தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால் வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே
திருமந்திரம்: 476 வகுத்த பிறவியை மாதுநல் லாளுந் தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும் பகுத்துணர் வாக்கிய பல்லுயிர் எல்லாம் வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே
ஔவையார். கொன்றைவேந்தன்: 65 பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் |
|
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...