Thursday, August 6, 2009

திருக்குறள்: 63


அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 63
Chapter : 7

Children

Thirukkural

: 63

தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம்தம் வினையான் வரும்.

பொழிப்புரை :
[பெற்றோருக்குத்] தம் பொருள் என்பது தம் மக்கள்; அவர் பொருள் தத்தம் வினையால் வரும்.

விரிவுரை :
பெற்றோருக்கு அவர் தம் செல்வம் எனப்படுவது அவர்கள் பெற்ற மக்களே. ஒருவருக்கு அவரது செல்வம் எனப்படுவது அவர்தம் பெற்ற மக்கள் என்பதே. அத்தகைய செல்வம் அவரவர் தங்களின் வினைகளுக்கேற்ப வரும்.

இல்லற வாழ்வில் பெற்றோருக்கு அருஞ் செல்வங்கள் என்பவை அவர் பெற்ற மக்களே. அம் மக்களை நாம் முன்னர் கண்டது போல் பெற்றோர் முயற்சித்து அவரவர் வினைப் பயனிற்கேற்பப் பரிசிலாகப் ”பெற்றார்கள்”, உருவாக்கவில்லை. அதைப் போன்றே மக்களுக்கும் பெற்றோர்கள் அவரவர் முன் வினைக்கேற்ப நல்லவராகவோ அல்லாதகவராகவோ அமைவர். மேலும் மக்களுக்கும் அவரவர் வினைகளுக்கேற்ப பிறகு மக்கட் செல்வத்தைப் பெறுவர். அதாவது இது ஒரு தொடர்ச்சி என்பது தெளிவு.

அதாவது இந்த மண்ணுலகில் மனிதனிற்கு அமைந்த வாழ்க்கையானது பெற்றோர், மனைவி, மக்கள் என அனைத்தும் அவனது முன் வினைகளின் பயனே என்பது நுணுக்கம்.

என்ன புண்ணியம் செய்தேன் கண்ணே உன்னை மகனா/ளாகப் பெறுவதற்கு என்பதிலும் அதைப் போலவே பழி கொடுத்த பிள்ளையைப் பார்த்து நான் என்ன பாவம் செய்தேன் என்று நோவதிலும் இது விளங்கும்.

அதாவது தமது மக்களை அறிவறியும், உத்தம வாரிசுக்களாக உருவாக்கப் பெற்றோர் முயற்சித்தாலும் அவை முன் வினைப் பயனிற்கேற்பவே அமைகின்றது என்பது பொருள்.

குறிப்புரை :
மனிதருக்கு அமையும் பெற்றோரும், மக்களும் அவரவர் செய்த வினைகளின் பயனே.


அருஞ்சொற் பொருள் :
தம்தம் - தத்தம், அவரவர் தமக்குத் தம்மாலே.

ஒப்புரை :

திருமந்திரம்: 20
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே.

திருமந்திரம்: 109
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந்து ஓரும் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

திருமந்திரம்: 437
ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே

திருமந்திரம்: 438
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் .(1).கியங்கும் அரந்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராகி இசைந்திருந் தானே
.(1). கியங்கி யயந்திரு

திருமந்திரம்: 439
ஒருங்கிய பாசத்துள் உத்தமச் .(1).சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே
.(1). சித்தின்

திருமந்திரம்: 504
ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.

ஔவையார், கொன்றைவேந்தன்: 65
பெற்றோருக்கு இல்லை சுற்றமும் சினமும்.

ஔவையார். மூதுரை: 7
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.


***

In English:

tham poruL enba tham makkal; avar poruL
thamtham vinaiyAn varum.

Meaning :
For the parents the real wealth is their children whom they get depend by their deeds.

Explanation :
For the parents, their real wealth is their own children only. Thus the real assets for a man are his own children alone. Such an asset is bestowed on him based on his deeds.

For the parents in domestic life, precious assets are their own kids. As we had already seen in the introduction for this chapter, Parents don't create the children but their efforts were made only to receive them. They received their kids as the fitting gifts depending upon their deeds. Same way goes with the children that they were given the parents as gifts according to their own deeds. Hence getting the good or bad parents or children all are as per their own deeds. Children too get their offspring later based on their deeds. It is a chain.

Therefore for men on this earth, the birth, parents, wife, children, life and the rest are all the result of their own prior deeds. That is the hidden message.

When parents say and cherish 'how lucky are we to get you as our child' or when they say against wrong kid "what a sin we made to get you as the kid" and regret, it is more understandable about the secrecy of the prior deeds.

It is understandable that though the parents put their efforts to make their children as intelligent and nobles, it also depends on the earlier deeds.

Message :
Men's parents and children are made according to their deeds alone.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...