|
| |
பொழிப்புரை : | |
”அன்புற்று அமர்ந்ததன் இயல்பு” என்பதே, வையகத்தில் இன்புற்றோர் எய்தும் சிறப்பு. | |
விரிவுரை : | |
உலகத்தில் இன்புற்றவர்கள் அத்தகைய சிறப்பைப் பெற்றதன் காரணம், அவர்கள் அன்பொடு இருந்ததன் இயல்பே. அன்பொடு திகழ்ந்ததின் விளைவே வையகத்தில் இன்புற்றவர் பெற்ற சிறப்பு என்பது குறிப்பு. துன்பமிலா இன்பம் எனும் உணர்வு நேசிப்பதிலும், நேசிக்கப்படுதலிலும், கவனித்தலிலும், கவனிக்கப்படுதலிலும், தெளிதலிலும் , பகிர்தலிலும், கொடுதலிலும், விடுதலிலும், ஆங்கே மற்றுமோர் உயிரை அன்புறத் தொடுதலிலும் மட்டுமே உண்டு. இவையெல்லாம் அன்பு கொண்டவருக்கு மாத்திரமே சாத்தியம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? மெய் அன்பொடு தயை கூர்ந்து தவத்தில் ”அமர்ந்த” அறத்தோரும், தவத்தோரும், அமரரும், முனிவரும் ஈண்டு பெறுவது இன்பம் எனும் சிறப்பன்றி வேறெது? அச் சிறப்பு அவர் மற்ற உயிர்களிடத்தும் மாறா அன்பு கொண்டமையால் தானே? | |
குறிப்புரை : | |
அன்பொடு திகழின் இன்புறும் வாழ்வு. | |
அருஞ்சொற் பொருள் : | |
வழக்கு - இயல்பு | |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 281 இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த முன்பிப் பிறவி முடிவது தானே. திருமந்திரம்: 285 கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை கண்டேன் கமல மலர்உறை வானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. திருமந்திரம்: 286 நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும் அன்பனை யாரும் அறியகி லாரே. திருமந்திரம்: 453 இன்புறு காலத் திருவர்முன் பூறிய துன்புறு பாசத் துயர்மனை வானுளன் பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும் அன்புறு காலத் தமைத்தொழிந் தானே. | |
*** |
In English: (Thirukkural: 75)
| |
| |
Meaning : | |
Bliss on the earth is thus the fruit for a loving life. | |
| |
Explanation : | |
The reason for being special in the state of happiness for them in this world is that they have stayed with the Love always. | |
| |
Message : | |
Loving heart gets blissful Life. | |
*** |
Anbu Enbathe Theivamaanathu...
ReplyDeleteAnbu Enbathe Inbamaanathu..
Pon Padaitha Manithar Kodi Nagaigal Vanggalam
Anbu endra porulai entha kadaiyil vaanggalaam?
Mudiyo?! Ambe $$$$$$$$$$ koduthu vaangga mudiyumo??
ஆம் நண்பரே. அன்பு விலை மதிப்பற்றதே.
ReplyDeleteகண்ணதாசன் சொல்லுவார்:
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
அவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமோ?
அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?
உங்களின் பதிவிற்கு நன்றி. தொடருங்கள்.