|
அதிகாரத்தில் பெற்றவை | |
குறள் எண் Kural No. | குறள் குறிப்புரை (Kural Message) |
91 | இனிய சொல் எனப்படுவது உண்மையை உண்மையாக அன்போடு பேசுவதே. Pleasant words are truths spoken truly and lovely. |
92 | ஈதலைக் காட்டிலும் இன் முகத்தோடு பேசும் இனிய சொல் நல்லது. Sweet words with a pleasant smile are better than gracious gifts. |
93 | அகமும், முகமும் மலர, இனிய பார்வையுடன், இன் சொல் பேசுவதே நல் ஒழுக்கம். Gracious heart and face, happy look and sweet words are the good virtue of conversation. |
94 | இன்புறத்தக்க இனிய சொல் பேசுபவர்களுக்கு துணையற்ற தனிமை எப்போதுமில்லை. Those who speak pleasant and sweet words will never have paining loneliness. |
95 | பணிவும், இன் சொல் பேசுதலுமே ஒருவருக்கு உண்மையான அழகு, மற்றவை அல்ல. Humility and sweet words speaking are the true beauties for one and nothing else. |
96 | பிறர்பால் நன்மை தரும் இனிய சொற்களைச் சொல்லின் ஒருவருக்கு நல் வினை பெருகும். Seeking goodness and speaking sweet words to others will grow good deeds for one. |
97 | நற் பண்பு மிக்க, பயனுடைய, இனிய சொற்கள் உறவையும் நன்மையையும் விளைவிக்கும். Courteous, Useful and sweet words yields good relations and goodness. |
98 | சிறுமைக் குணமற்ற இனிய சொல் எக்காலத்திலும் இன்பம் தரும். Mean free sweet words yield happiness ever. |
99 | இனிய சொல் இன்பமென அறிந்தும் துன்பம் தரும் கடும் சொல்லை பயன் படுத்துவோர் அறிவற்றோர். Knowing that kind words only yield happiness, hurting harsh words users shall be the fools. |
100 | நல்லவை இருக்க அல்லாதவை நாடுவது அறிவின்மை. While good ones are at plenty preferring the bad is foolishness. |
குறிப்புரை |
இனிய சொல் எனும் உண்மையை உண்மையாக அன்புடன், அகமும், முகமும் மலரப் பேசுதல் ஈதலைக் காட்டிலும் சிறப்பான நல் ஒழுக்கம். அவ்வாறு இனிய சொல்லைக் கெட்ட எண்ணமின்றிப் பேசுவோருக்கு அது உண்மையான அழகாய் இருப்பதுடன், நல் வினை பெருக்கி, உறவையும் நன்மையையும் விளைவித்து எக்காலத்திலும் இன்பம் பயக்கும் ஆதலால் அவருக்குத் தனிமைத் துன்பம் எப்போதுமில்லை. நல்லனவாகிய இனிய சொல் இன்பம் தருமென அறிந்திருந்தும் கடும் சொல்லையும், நல்லவை அல்லாதனவற்றையும் பேசுவோர் அறிவிலிகள். |
Message |
Speaking the Pleasant words, the truth sincerely with Love in heart and face is better virtue than gracious gifts. Speaking such pleasant words mean free yields true beauties, good deeds, relations, goodness and happiness forever. Therefore they never suffer paining loneliness. Knowing that good and kind words only yield happiness, hurting harsh and bad words users shall be the fools. |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...