|
| |
பொழிப்புரை : | |
மோந்தால் வாடிவிடும் அனிச்ச மலர்; முகம் மலராது திரிந்து நோக்கினாலே வாடிவிடுவர் விருந்தினர். | |
| |
விரிவுரை : | |
மென்மையான அனிச்ச மலரை முகர்ந்தால் மட்டுமே வாடிவிடும். ஆனால் முகம் மலராது வேறுபட்டு நோக்கிவிட்டாலே வந்த விருந்தினர் வாடிவிடுவர். அவ்வளவு மென்மைக் குணம் கொண்டது விருந்து. தொடாமல், படாமல், நுகராமல், தூர நின்றே பார்க்கும் வேறுபட்டுத் திரிந்த பார்வைக்கே விருந்து நொந்து புண்பட்டுக் கெட்டு விடும். எனவே தமது பார்வையில் அன்பும், குளிர்ச்சியும், இனிமையும் கொண்டு விருந்தினரை வரவேற்று உபசரித்தல் அவசியம் என்பது மறை பொருள். கனிவும், இனிமையும் வாய்ச் சொல் வார்த்தைகளில் மாத்திரமல்ல விருந்தினருக்கு நோக்கும் பார்வையிலும், செய்யும் செயல்களிலும் அவை உண்மையுடன் விளங்கித் திகழ வேண்டுமென்பது நுணுக்கம். உட் கிடக்கையின் உண்மை வார்த்தைகளை கண்களின் மவுன மொழி காட்டிவிடாதா? | |
| |
குறிப்புரை : | |
அகமும் முகமும் மலர விருந்தினரை உபசரித்தல் வேண்டும். அன்றில் அவர் வாடிவிடுவர். | |
அருஞ்சொற் பொருள் : | |
மோப்பம் - முகர்தல், மோந்துபார்த்தல் குழைதல் - வாடிவிடுதல் அனிச்சம் - ஒரு வகைப் பூ நோக்குதல் - பார்த்தல் | |
| |
ஒப்புரை : | |
| |
ஔவையார். ஆத்திச்சூடி: 10 ஒப்புரவு ஒழுகு. 10 ஞயம்பட உரை. 17 கடிவது மற. 32 சுளிக்கச் சொல்லேல். 47 ஔவையார். மூதுரை: 20 உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு முண்டு. ஔவையார். மூதுரை: 30 சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர் மரம். மாணிக்கவாசகர். திருவாசகம். 6.நீத்தல் விண்ணப்பம்: இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை என்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய் மிக்க நஞ்சு அமுதாய் அருந்தினனே மன்னும் உத்திரகோச மங்கைக்கு அரசே மருந்தினனே பிறவிப் பிணிப்பட்டு மடங்கினர்க்கே. 122 | |
| |
*** |
In English: (Thirukkural: 90)
| |
| |
Meaning : | |
Inhaling withers an Anichcham flower, Just a cold look withers the Guest. | |
| |
Explanation : | |
The very soft Anichcham flower withers when inhaled. But just a look without smile withers the visited Guest. | |
| |
Message : | |
Guests must be treated with love and compassion in heart and deeds. Otherwise they wither. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...