|
| |
| |
பொழிப்புரை : | |
மேன்மைப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை; யார் வசத்தும் பொறாமையின் அல்லாமை பெறின். | |
| |
விரிவுரை : | |
யாரிடத்தும் பொறாமை அற்ற தன்மை பெறின், ஒருவர் பெறும் மேன்மைப் பேறுகளில் அதை ஒப்பது வேறு ஏதும் இல்லை. உயிர் வாழ்வனவற்றுக்குள் உணவு, உறை, காம உறவிற்காகப் போட்டிகளும், சண்டையும் கூடச் சமயங்களில் தோன்றலாம். அவை இயற்கை. ஆனால் பொறாமை எனும் சிறுமைக் குணம் சிந்தனை எனும் ஆறாவது அறிவு பெற்ற மனிதரில் மட்டுமே உள்ளது. ஒருவன் பெற்றுள்ள உடைமை, வெற்றி, பெருமை அனைத்தும் அவனது உழைப்பு, அன்றில் பரம்பரைச் சொத்து, முற்பிறவிப் பயன் என்று கொள்கின்ற வரையில் மனதில் பொறாமை எனும் சிந்தனை அழுக்குத் தோன்றுவதே இல்லை. இந்தப் புரிதல் இல்லாத போதுதான் பிறர்பால் மனிதருக்குப் பொறாமை தோன்றுகின்றது. தன் சுய உழைப்பின்றிப் பிறரைச் சார்ந்து, அழுத்தி முன்னேற நினைக்கும் போழ்தும், இலவசங்களில் சொகுசு காண விளையும் போழ்தும் பொறாமை எனும் அதி ஆசை மனிதருக்குள் தோன்றுகின்றது. நேர்மையற்ற இக்குணம் தரும் புழுக்க எண்ணத்தால் ஒருவர் முன்னேற்றம் தடைப்படுவதுமின்றித் தாம் பெற்றவற்றையும் ஓவ்வொன்றாய் இழக்கவே நேரும். உண்மையில் வெற்றியை விரும்புவோர் பகைவன் மாட்டும் பொறாமை கொள்ளாமை இருத்தலே நல் அறம். அதால் அவர் நேரிய சிந்தனையோடு உயர்வினை மட்டுமே தொடர்ந்து பற்றிச் செல்லலாம். ஆதலின் இருப்பதை இழக்கும் பொறாமைப் பேற்றினைக் காட்டிலும், எவர் பொருட்டும், எதன் பொருட்டும் எப்போதும் பொறாமை அற்ற தன்மையைப் பெறுதலே ஒருவர் பெறும் பேருகளுள் சிறந்தது என்பதே கருத்து. | |
| |
குறிப்புரை : | |
பொறாமை இன்மையே ஒப்பிலா மேன்மைப் பேறு. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
விழுப்பு - விலக்கப்படுவது; மேன்மை, உயர்வு, சிறப்பு, பெருமை, நன்னிலை. விழுப்பேற்று - அன்மை - அல்லாமை, தீமை. | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 439. ஒருங்கிய பாசத்துள் உத்தமச் சித்தன் இருங்கரை மேலிருந் தின்புற நாடி வருங்கரை ஓரா வகையினிற் கங்கை அருங்கரை பேணில் அழுக்கற லாமே திருமந்திரம்: 800.. வண்ணான் ஒலிக்குஞ் f சதுரப் பலகைமேற் கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால் அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே மாணிக்கவாசகர். திருவாசகம். சிவபுராணம்: ஆனந் தம்மே ஆறா அருளியும் மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110 மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதலன் ஆகிக் கழுநீர் மாலை ஏறு உடைத்தாக எழில்பெற அணித்தும் அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115 ஔவையார். ஆத்திசூடி: 35. கீழ்மை யகற்று. ஔவையார். கொன்றை வேந்தன்: 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் ஔவையார். மூதுரை: சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18 ஔவையார். நல்வழி: வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். 5 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
There is no other great boon to compare such as attaining the no jealous on anyone. | |
| |
Explanation : | |
Getting the quality of no jealous on anyone is the greatest incomparable boon one can attain. At times competition and conflicts may occur to living things for food, shelter and sex. That is natural. But the trait of petty minded enviousness on others is available only to the human beings which got the sixth sense intelligence called thinking. As long as one understands that the belongings, success and goodwill all come to one through his hard work or inheritance and by their past deeds, the dirty thought of jealous never occurs. When this understanding or awareness is not present in one he gets envy on others. Also when one stands as dependant to others and thinking to overwhelm by force to grow through or trying to get enjoyment through freebies, the excess of desires gets created in human beings. By the oppressive thoughts provoked by this unethical trait of enviousness not only one's progress gets spoilt but has to lose all the held possessions one by one. In fact the good virtue is that who wishes the victory should have un-enviousness even on to his enemies. Through that good discipline one can only gain the success and continue to enjoy the eminence by straight and positive and no hindrances in thoughts. Therefore instead of the evil enviousness to lose the holding things, the boon of un-enviousness on anyone and anything forever is the best attainment among all one can get through, is the implied meaning here. | |
| |
Message : | |
Un-enviousness is the greatest incomparable eminence. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...