Tuesday, December 15, 2009

திருக்குறள்:164 (கேடினைத் தரும் இழுக்கு பொறாமை...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 164

கேடினைத் தரும் இழுக்கு பொறாமை...

In English

அழுக்காற்றின் அல்லவை செய்யார் - இழுக்கு ஆற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

பொழிப்புரை :
பொறாமையினால் [அறம்] அல்லாதவற்றைச் செய்யார்; [அவ்] இழுக்கு நெறியின் பால் ஏற்படும் குற்றத்தின் கடும் போக்கு அறிந்து [உணர்ந்தோர்].

விரிவுரை :
பொறாமை எனும் இழுக்க நெறியின்பால் ஏற்படும் குற்றத்தின் கடும் விளைவை அறிந்து, அறிவுடையோர் அதன்பால் அறம் அல்லாதவற்றைச் செய்யார்.

பிறரின் வளர்த்தி, வெற்றி, உடைமை கண்டு பொறுக்காத தன்மையாகிய பொறாமை அதால் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கி ஒருவரின் இயற்கையான முன்னேற்றங்களையும் தடுத்து விடும். மேலும் பொறாமை விளைவித்த சோம்பலும், முடக்கமும் அடைந்து கிடக்கும் மனதில் வியாதிகளாக களவு, பொய், சூது, வஞ்சகம், சூட்ச்சி, வாதம், குறுக்குப் புத்தி, ஆத்திரம், சுய பச்சாதாபம், மயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாய்ப் பின்னிப் பிணைந்து உருவாகும். அவற்றால் தீயவற்றைத் தவிர வேறு எதையும் பெற்றுத்தர இயலாது.

பொறாமை என்பது சிந்தனையின் பால் விளையும் புற்று நோய் போன்றது. அது கிளைக்கின்ற எண்ணங்களில் எல்லாம் பரவி நன்மைகளைக் கொன்று இன்னலை மட்டுமே தரும்.

எனவே பொறாமைக் குணம் ஒருவரின் வாழ்வு நோக்கத்தை மறக்கடித்து அன்றில் மறுதலித்து தீய வழியில் அவரைச் செலுத்தி இம்மைக்கும், மறுமைக்கும் கேட்டை விளைவிக்கும். நேர்மறை வினையால், ஒழுக்கத்தால் அடைய வேண்டிய வீடுபேறு என்பது இப்பிறவியில் அவருக்குக் கிட்டாமலே போய்விடும்.

ஆதலினால் பொறாமையின் இத்தகைய கடும் விளைவுகளை உணர்ந்த நல்லறத்தைப் பேணும் அறிவுடையோர், பொறாமை எனும் எண்ணம் வாராமல் வாழ்தலையே தமது கடமையாகக் கொள்வர். பொறாமைக் குணத்துக்குரிய கேடுகளையும் பரிசீலித்துத் தமது செயல்பாடுகளில் அவற்றைச் செய்யாது தவிர்ப்பர்.

குறிப்புரை :
பொறாமையின் தீவிளைவை அறிந்தோர் அதன் பொருட்டு அறமற்றதைச் செய்யார்.

அருஞ்சொற் பொருள் :
ஏதம் - குற்றம், துன்பம், கேடு, அழிவு, சிக்கவை, செய், நிகழ்து, துன்புறுத்து, அழி, சேர், மிகுதியான, விஞ்சிய, பெரிய
படு - உண்டாகும், மனதில் தோன்றும்,
பாக்கு - போக்கு (தொழிற்பெயர் விகுதி)

ஒப்புரை :

திருமந்திரம்: 2422
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோசு மறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி ஏற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச மாகுமே.

திருமந்திரம்: 2692
போது கருங்குழற் போனவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்துஅப் பாலுற்ற தூவொளி
நீதியின் நல்லிருள் நீக்கிய வாறே.

மாணிக்கவாசகர். திருவாசகம்.
24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம்

(திருப்பெருந்துறையில் அருளியது - கலவைப் பாட்டு)

செழுக்கமலத் திரளனநின் சேவடி நேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408

வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்
பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்க கங்கைசடைக்
செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர்
அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409

பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே
வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற
அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410

ஔவையார். ஆத்திசூடி:
46. சீர்மை மறவேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
31. சூதும் வாதும் வேதனை செய்யும்

ஔவையார். மூதுரை:
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14

ஔவையார். நல்வழி:
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை. 23

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 164

Devastating evil enviousness...




In Tamil

azhukkARRin allavai seyyAr - izhukku ARRin
Etham padupAkku aRinthu.

Meaning :
Those who know the serious afflictions as the result of offensive enviousness will not commit any non virtuous deeds.

Explanation :
Having known the grave miseries of the offensive and sinful enviousness, the wise will never perform any unrighteous acts due to envy.

The envy or the un-bearing on others for their progress, prosperity or success leads to negative thinking and destroys even one's natural growth. Also it makes one to be lazy and to stop any activity due excessive secretion of emotions such as lie, deceit, fraud, forgery, narrow-mindedness, shortsighted and bewilderment in intertwining each other. Such emotions can yield nothing but only ill deeds.

Jealous is like the cancer disease in the thinking. Therefore it spreads in all thinking and kills all the goodness and yields only miserable afflictions.

Hence the trait of enviousness in one numbs and spoils the life determinations and leads him to do ill deeds and thus makes afflictions for his entire life and after. Thus that further leads to destroy any hope of liberation for his life, which should have been possible otherwise in normal course through sincere practice of positive and virtuous deeds.

Therefore, the wise that follow the good virtues with awareness for all these devastating issues of enviousness, will ensure that as their duty to lead a life with no envy at all. By analyzing all the bad qualities of the envy, they will ensure to avoid them in their deeds.

Message :
Those who are aware of the afflictions of enviousness will not do the ill deeds because of that.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...