Thursday, December 17, 2009

திருக்குறள்:166 (சுற்றத்தையும் கெடுக்கும் பொறாமை...)

அதிகாரம்

: 17

அழுக்காறாமை

திருக்குறள் : 166

சுற்றத்தையும் கெடுக்கும் பொறாமை...

In English

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

பொழிப்புரை :
கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுபவனோடு அவனது சுற்றம் உடுத்துவதற்கும், உண்பதற்கும் [வழி வகை]யின்றிக் கெடும்.

விரிவுரை :
பிறர் கருணை கொண்டு கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுபவன் அவன் மாத்திரமல்ல, அவனது குடும்பம், நண்பர்கள், உறவுகள் எனும் சுற்றமும் சேர்ந்து உண்பதற்கும், உடுத்துவதற்கும் வழி வகையின்றிக் கெடும்.

பொறாமை தீங்கானது. அதிலும் பிறர் தருவதையும் கண்டு பொறாமைப் பட்டால் அவனது துன்பம் உண்ணவும், உடுத்தவும் மாத்திரமன்றி, அதே துன்பம் அவனைச் சார்ந்த சுற்றம் முழுமைக்கும் பரவி விடும் என்பது ஓர் எச்சரிக்கையோடு சொல்லப்பட்ட வாழ்க்கைப் பாடம்.

ஒருவரின் தீய எண்ணங்கள் அவரை மாத்திரமல்ல, அவரைச் சார்ந்தோரையும் பிரதி பலிக்கின்றது; பாதிக்கின்றது என்பதற்கே இத்துன்பம் அவ்வளவு விசாலமானதாகப் பரவும் என்கின்றார். பிறர் செய்யும் நற் காரியத்தைப் பொறாமை கொண்டு துன்புறுத்துவோர் அவர் மாத்திரமன்றி, அவரது சுற்றமும் சேர்ந்து துன்பத்தின் உச்சத்திற்குச் செல்வர்.

தான் வழங்காவிடினும், இன்னொருவர் வழங்குவதைக் கண்டு வாழ்த்துவதை விடுத்து அதைக் குறை கூறினும் கூடப் பரவாயில்லை பொறாமை கொள்ளுவது என்பது மிகவும் கேவலமான குணம். வாரிக் கொடுக்கும் கையை வஞ்சித்துத் தடுப்போர், இல்லாமையால் கை ஏந்தி நிற்போரைக் காட்டிலும் கீழ் நிலைக்குச் சென்று உண்ணவும், உடுத்தவும் கூட வழி வகையின்றி ஏழ்மையின் உச்சத்தில் தரித்திரத்தில் தள்ளப் படுவர்.

’கெடுவான் கேடு நினைப்பான்; தனக்கே வரும் பெரும் கேடு’ என்பதேபோல், கொடுப்பதைத் தடுத்துக் கெடுக்கும் பொறாமை சுற்றம் சூழ ஒட்டு மொத்தமாகத் தட்டுக் கெட்டுத் தடுமாறி நிற்கும்.

குறிப்புரை :
சேர்ந்தாரையும், சார்ந்தாரையும் கெடுக்கும் கொடிய நோய் பொறாமை.

அருஞ்சொற் பொருள் :
உடுப்பது - உடை
உண்பது - உணவு

ஒப்புரை :

திருமந்திரம்: 2717
நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவமது தீரும் பரிசும்அது அற்றால்
அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ.

திருமந்திரம்: 2681
ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் உருவம் அறியில் உருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடனிருந் தானே.

திருநாவுக்கரசர். தேவாரப் பதிகம்:
4.26 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை :

நீதியால் வாழ மாட்டேன்
நித்தலுந் தூயே னல்லேன்
ஓதியும் உணர மாட்டேன்
உன்னையுள் வைக்க மாட்டேன்
சோதியே சுடரே உன்றன்
தூமலர்ப் பாதங் காண்பான்
ஆதியே அலந்து போனேன்
அதிகைவீ ரட்ட னாரே. 261

பிணிவிடா ஆக்கை பெற்றேன்
பெற்றமொன் றேறு வானே
பணிவிடா இடும்பை யென்னும்
பாசனத் தழுந்து கின்றேன்
துணிவிலேன் தூய னல்லேன்
தூமலர்ப் பாதங் காண்பான்
அணியனாய் அறிய மாட்டேன்
அதிகைவீ ரட்ட னாரே. 267

ஔவையார். ஆத்திசூடி:
57. தீவினை யகற்று.

ஔவையார். கொன்றை வேந்தன்:
53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு

ஔவையார். நல்வழி:
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25

***

In English:

Chapter : 17

Un-enviousness

Thirukkural : 166

Kin ruining envy...




In Tamil

koduppathu azhukkaRuppAn suRRam uduppathUum
uNpathUum inRik kedum.

Meaning :
That who envious the giving by others ruin not only himself but also his kin with nothing to cloth and feed.

Explanation :
That who gets envy by scanning others giving gets ruined not only himself but also his kin and kith with no means to cloth and feed.

Jealous is evil. Getting envy for others giving is therefore worst than all the sins. That is why it is a kind of life warning which states that when someone does so get not only himself but his kin and kith get affected for the evilness.

The evil idea of one reflects and affects not only himself but also his dependants. That is why Valluvar says that the yields of bad deeds would spread across all his associates. That who envy and do non-virtuous deeds against any good work done by others will suffer himself along with his kind and kith to the worst level of adversity.

Even though one him-self is not giving, at the least should appreciate someone giving. Even commenting on that is somewhat acceptable but not the jealous on it, which is of cheap characteristics. That who jealously stops the abundantly giving hand will suffer than the poor who come to receive because of their poverty, by impoverished to such an extent that there would be no means for clothing and eating.

As in the saying "That who thinks ill gets greater ill and spoilt at many folds", the envy which does the stoppage or disturbance to giving gets deprived in totality along with all his kin and kith.

Message :
The disease which can ruin the owner and the kin is the enviousness.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...