|
| |
| |
பொழிப்புரை : | |
’வற்றாமை செல்வத்திற்கு எது?’ என்றால், வேட்காமை வேண்டும் பிறன் கைப் பொருள். | |
| |
விரிவுரை : | |
ஒருவனுடைய செல்வம் குன்றாமல் இருக்க வழி எது என்றால், அவன் பிறன் கைப் பொருளைக் கவர எண்ணாது இருத்தலே ஆகும். தீதை எண்ணினால் அல்லது தீதைச் செய்தால் இருப்பதும் அழிந்து போகும் என்பது கருத்து. நாம் பிறருக்கு எதைச் செய்ய எண்ணுகின்றோமோ அதுவே நமக்கு நடக்கும். காரணம் நாம் எதை ஆழ்ந்து எண்ணுகின்றோமோ அது நமது ஆழ் மனத்தில் பதிந்து விடுகின்றது. தெரிந்தோ, தெரியாமலோ, பிறருக்கோ, தனக்கோ என்றெல்லம் பகுத்தறியாத ஆழ்மனம் நமது எண்ணத்தின் விருப்பத்தை மாத்திரம் பிடித்துக் கொண்டு விடுகின்றது. அதை வஞ்சகமே இல்லாது தனக்கே விளைவித்தும் விடுகின்றது. இதைத்தான் ’கெடுவான் கேடு நினைப்பான் தனக்கே வரும் பெரும் கேடு’ என்றும் சொல்வார்கள். எப்போதும் நற் சிந்தனையோடு திகழ வேண்டும், ஆசையற்று இருத்தல் வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்திச் சொல்பவை இதற்காகத்தான். அதைப் போலவே பிறர் பால் செய்யும் தீமை, பின்விளைவைச் செய்யாது விட்டு விடுமா? பிறர்பால் முற் பகல் செயின், பிற் பகல் தமக்குத் தாமே வரும். எளியவனைக் கொள்ளை அடித்தால், வலியவனால் வஞ்சிக்கப் படுவாய். ஏமாற்றியவன் நிச்சயம் பெரும் ஏமாற்றத்தைச் சந்திப்பான். இதுதான் இயற்கை வாழ்வுச் சுழற்சி முறை. அள்ளிக் கொடுக்கின்ற வள்ளல்கள் குறைப் படுவதுமில்லை அவர்களின் வளம் குன்றிப் போவதுமில்லை. அவர்கள் பால் வளம் நிறைவதற்குக் காரணம் கொடுக்கக் கொடுக்கக் குறையாது; மாறாகக் கூடும் என்பதே சூட்சுமம். தோண்டத் தோண்ட ஊறும் ஊற்றைப் போல எங்கே வழங்கும் மனது இருக்கிறதோ ஆங்கே வளமும் வந்து நிறைகின்றது. மனதால், எண்ணத்தால், காயத்தால் நன் நெறி நிற்பவர்களுக்கு, நன்மையே நடக்கும். தீமை நெஞ்சினர் தீதையே பெறுவர். ஆதலால் தன் பொருள் குன்றாமை வேண்டுவோர் மறக்காமல் கடைப் பிடிக்க வேண்டியது பிறர் பொருளை வேட்காமையே. | |
| |
குறிப்புரை : | |
தமது பொருள் வளம் குன்றாமை வேண்டின் செய்ய வேண்டியது பிறர் பொருள் விரும்பாமையே. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
அஃகு - சுருங்கு, குறை, வற்று அஃகாமை - சுருங்காமை, குறையாமை, வற்றாமை | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 1702 வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால் வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. திருமந்திரம்: 1834 வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு கள்ளக் கடல்விட்டுக்கைதொழ மாட்டாதார் அள்ளக் கடலுள் அழுந்துகின் றாரே. திருமந்திரம்: 2640 விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. மாணிக்கவாசகர். திருவாசகம்: 32. பிரார்த்தனைப் பத்து : அருளா ரமுதப் பெருங்கடல்வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிதுபொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே மருளார் மனத்தோர் உன்மத்தன் வருவாய் என்றிங் கெனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை உடையாய் பெறநான் வேண்டும்மே. 487 வேண்டும் வேண்டும் மெய்யடியா ருள்ளே விரும்பி எனை அருளால் ஆண்டாய் அடியேன் இடர்களைந்த அமுதே அருமா மணிமுத்தே தூண்டா விளக்கின் சுடரனையாய் தொண்டனேற்கும் உண்டாங்கொல் வேண்டா தொன்றும் வேண்டாதுமிக்க அன்பே மேவுதலே. 488 மேவும் உன்றன் அடியாருள் விரும்பி யானும் மெய்ம்மையே காவி சேருங் கயற்கண்ணான் பங்கா உன்றன் கருணையினால் பாவியேற்கும் உண்டாமோ பரமா னந்தப் பழங்கடல்சேர்ந் தாவி யாக்கை யானென்தன் றியாது மின்றி அறுதலே. 489 ஔவையார். ஆத்திச் சூடி: 41. கொள்ளை விரும்பேல். 48. சூது விரும்பேல். 55. தானமது விரும்பு. 57. தீவினை யகற்று. 72. நேர்பட வொழுகு. 87. மனந்தடு மாறேல். 102. உத்தம னாயிரு. ஔவையார். கொன்றை வேந்தன்: 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு 43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் 53. நூல் முறை தெரிந்து சீலத்து ஒழுகு 54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை 63. புலையும் கொலையும் களவும் தவிர் 68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர் 74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
What protects one’s own wealth shrink means, he must not covetous on others goods. | |
| |
Explanation : | |
How to protect one’s own wealth un-shrunk means that not covetously covering others goods. | |
| |
Message : | |
All that who desire undiminished wealth should do is only not to covet on others wealth. | |
| |
*** |
உபயோகமான பதிவு.. வாழ்த்துக்கள்....
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அண்ணாமலையான். மீண்டும் வருக.
ReplyDelete