Wednesday, February 3, 2010

அதிகாரம்: 21. தீவினையச்சம் - முகவுரை

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

முகவுரை

Chapter : 21

Fear for Evil Deeds

Preface

ஒருவர் தீய வினைகளைச் செய்வதற்குக் கொள்ள வேண்டிய அச்சம். பாவ காரியங்களைச் செய்வதற்கு அஞ்சுதல்.

வாழ்வில் அஞ்ச வேண்டியவற்றிற்கு அச்சம் கொள்வதும் அவசியத் தேவையே. நல்லவை அற்றவற்றிற்கு அஞ்சுதல் என்பது வாழ்வு நெறியே. அஃதும் அறிவுடைமையே. இதையே வள்ளுவர் பின்னர் வரும் அத்தியாயத்தில் இவ்விதமாகக் கூறி இருப்பார்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல், அறிவார் தொழில்.

(குறள்:428 )

தீவினை அச்சம் என்பது பிறருக்கு இன்னல் விளைவிக்கும் செயலை, கெடுதலான காரியத்தை அஞ்சிச் செயல் படாது இருத்தல். அன்றில் அத்தகையவாறு எண்ணாதே இருத்தல். கேடு நினைப்பவனே கெடுவான். ஆதலால் கொடிய வினைகளைச் சிந்தியாது, எண்ணாது இருத்தலே நன் நெறியாகும். பிறருக்கு முற்பகல் செய்தவை பிற்பகல் பன் மடங்கில் தாமே வரும். ஆதலின் தீயவற்றைப் பிறர் பால் செய்தால் அதனினும் பன்மடங்கு தீயவை தம்மையே சாரும்.

நல்லறங்களும், கடவுள் நம்பிக்கையும் மனித வாழ்க்கையின் முக்கிய நோக்கமான மோட்சத்தை அடைவதற்கு பாவச் செயல்களைத் தவிர்த்து, புண்ணியச் செயல்களைப் பெருக்கி வாழுவதே ஆகும். மனிதர்களின் துன்பத்திற்குக் காரணம் முன் வினைப் பாவங்களும், நடப்பு வினைப் பாவங்களுமே ஆகும். ஆதலின் தெரிந்தே பாவ வினைகளைச் செய்வது தவறு என்பதும், அதைத் தவிர்த்தலே வாழ்வில் உய்வதற்கான உபாயம் என்பதே இந்த அத்தியாயத்தின் நோக்கம்.

பிறருக்கு நன்மை செய்யாதே இருப்பினும் கூடப் பரவாயில்லை, தீமை செய்யாது இருத்தலே நன் நெறி ஆகும். அஃது தமக்குத் தாமே செய்து கொள்ளும் நன்மையும் ஆகும்.

மனிதருக்குப் பயன் இல்லாததைச் சொல்லாமையின் முக்கியத்தை விளக்கிய வள்ளுவர், அடுத்ததாக நலம் அல்லாதாவற்றைச் செய்தல் ஆகாது என்பதையும் தொடர்ந்து இங்கே பேசுகின்றார்.


அருஞ்சொற் பொருள் :


ஒப்புரை (Reference)

திருமந்திரம்: 8
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.

திருமந்திரம்: 105
ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்
பீசம் உலகல் பெருந்தெய்வம் ஆனது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந் தார்களே.

திருமந்திரம்: 113
விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்க்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.

திருவாசகம்:
3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்)

வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப்
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம்
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று
போதுநான் வினைக் கேடன் என்பாய் போல
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்
முனைவனே முறையோ நான் ஆனவாறு
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? 26

பட்டினத்தார். திரு ஏகம்ப மாலை: 10
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி ஏகம்பனே!

ஔவையார். ஆத்திசூடி:
23. மண்பறித் துண்ணேல்.
24. இயல்பலா தனசெயேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை

ஔவையார். நல்வழி:
சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும். 15

***


In English:

It is about the dread one should have towards evil deeds. It is the fear to do any sins.

In life it is absolutely necessary to have fear for fearful things at times. Fearing for the not good is also good virtue and the wisdom. Thiruvalluar has explained this later as in the following Kural.

anjsuvatu anjsAmai pEtaimai; anjsuvatu
anjsal, aRivAr thozhil.

(Thirukkural: 428)

Fear for Evil Deeds actually means by fearing and not doing the evil deeds to others. Otherwise not to think of evil deeds at all. Only that who thinks evil goes ill. Therefore without thinking the evil deeds, not brooding over itself is the good virtue. Whatever done to others in the forenoon gets returned in multitudes to the self in the afternoon. Therefore when evil thing is done to others, the yield will be in multitudes only for the self.

Good virtues and faith in God all are meant to achieve the highest ambition of life, the liberation from the life birth cycles, through avoiding all sins and performing only the good and correct virtuous deeds. The reason for the afflictions to the human beings is only the deeds carried out in the previous birth and the current birth. Therefore with such awareness doing the evil deed is indeed a bad virtue and avoiding them is the only way to prosper in life is the main purpose explained in this chapter.

Even if we don't do any good things to others, not doing evil deeds to them is the real good virtue. That is actually the good deed carried out for one’s own benefit.

Valluvar having explained the importance and good virtue of "No Vain speech” to human beings previously, now continues with, not doing the evil deeds to others, here in this chapter.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...