|
| |
பொழிப்புரை : | |
[திருமகள்] அகத்தே அமர்ந்து உறை வாசம் செய்வாள், முகம் மலர்ந்து நல் விருந்து பேணுவான் இல்லத்தில். | |
விரிவுரை : | |
முகம் மலர்ந்து நல் விருந்து பேணுவான் இல்லத்தில், திருமகள் அகம் மலர்ந்து உறை வாசம் செய்வாள். திருமகள் வசிக்கும் இல்லத்தில் “திரு” கொழிக்கும். செல்வம் செழிக்கும். எனவே இன்முகத்துடன் விருந்தினரை உபசரித்து, அவர்களைப் பேணி நல்விருந்து படைக்கும் நல்லோருக்கு அவர்கள் வீட்டில் திருமகள் மனம் மலர்ந்து வாசம் செய்து நன்மைகள் செய்வாள் என்பது தெளிவு. தினம் விருந்தினருக்குப் படைத்தாலும் செல்வம் குறையாது என்று முன்னர் குறளிலே சொன்னாரே அதுவும் இதன் பால்தான் என்பது மட்டுமல்ல, மேலும் வளம் கொழிக்கும்; செல்வம் பெருகும் என்பதும் இப்போது தெளிவாகுதல் நன்று. இங்கும் திருவள்ளுவர் அகன் அமர்ந்து செய்யாள் என செல்வத்திற்கு அதிபதியாக பெண் தெய்வத்தை எந்த நாமமும் இடாமல் சொல்வது, மதச் சார்பு இல்லா நிலையில் சொல்லவே என்பது ஈண்டு நோக்கத்தக்கது. பாலைக் குறிப்பிடாத இறை, தெய்வம், கடவுள் என்பதையே இதுவரையில் பயன் படுத்திய வள்ளுவர் முதலில் பெண்ணாக உருவகப் படுத்துவதும், அதுவும் மனத்தே அமர்ந்து இருப்பவள் என்று சொல்வதும் திருமகளையே, இலக்குமியையே மறைமுகமாகக் குறிப்பிடுவதாக எண்ணத் தோன்றுகின்றது. ஆயின் திருமகளை சைவமும், வைணவமும், சமணமும் போற்றிவருவதும், நாமம் குறிப்பிடாதே பொதுவாகவே சீதேவியாகவும் போற்றப்படுவதும் அன்றையக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். அன்பும், பண்பும், இனிமையும் சேரும், நிறையும் இடத்தைத்தானே திருமகளும் சேர்வாள்; மனம் நாடுவாள். உறைந்து வசிப்பாள். | |
| |
குறிப்புரை : | |
இன்முகத்துடன் விருந்தினரைப் பேணின் திருமகளும் உளம் மகிழ்ந்து வந்து நிறைவாள். | |
அருஞ்சொற் பொருள் : | |
செய்யாள் - செய்ய மாட்டாளா? செய்வாள் என்பதன் மரூவு. உறைதல் - நிறைதல், வசித்தல் | |
| |
ஒப்புரை : | |
| |
ஔவையார். கொன்றைவேந்தன்: 3 இல்லறமல்லது நல்லறமன்று. ஔவையார். நல்வழி: 21 நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந்த் தருஞ்சிவந்த தாமரையாள் தான். ஔவையார். நல்வழி: 32 ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடுந் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. ஔவையார். மூதுரை: 18 சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற் றல்லாதார் கெட்டாலங் கென்னாகும் - சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னா மண்ணின் குடமுடைந்தக் கால். | |
| |
*** |
In English: (Thirukkural: 84)
| |
| |
Meaning : | |
The Goddess of Wealth will gladly dwell their home where the smiles welcome and treat the guests. | |
| |
Explanation : | |
In the house where one welcomes their guests with smiles and tend them, The Goddess of Wealth will gladly fill in and stay. Luck and prosperity grows where the Goddess of Wealth resides. The Goddess of Wealth too joins, enjoys and stays only where Love, culture and happiness are getting together. | |
| |
Message : | |
Pleasing hospitalities extended to Guests brings the Goddess of Luck to smile and dwell in their home happily. | |
*** |