Showing posts with label செயின். Show all posts
Showing posts with label செயின். Show all posts

Wednesday, December 30, 2009

திருக்குறள்:175 (அபகரிக்கும் வேட்கை அறிவு வீணே...)

அதிகாரம்

: 18

வெஃகாமை

திருக்குறள் : 175

அபகரிக்கும் வேட்கை அறிவு வீணே...

In English

அஃகி அகன்ற அறிவு என் ஆம் - யார் மாட்டும்
வெஃகி, வெறிய செயின்?

பொழிப்புரை :
நுண்ணியதையும் பரந்ததையும் அறியும் அறிவு பெற்றும் அதனால் பயன் என்ன? எவர் பொருட்டும் உரித்த பொருளை வேட்கை கொண்டு வெறிச் செயல்களைச் செய்தால்.

விரிவுரை :
யாரிடத்தும் கண்டதையெல்லாம் ஆசைப்பட்டு வெறி கொண்டு காரியம் செய்தால், ஆழ்ந்து பெற்ற நுண்ணறிவும், பரந்த அறிவும் இருந்து தான் என்ன பயன்?

நுணுக்கி நோக்கும் அறிவும், ஆழ, அகலமாக ஆய்ந்து பார்க்கும் பரந்த அறிவும் பிறர் பொருளைப் பற்றி வெறி கொண்டு திரிவதற்காகவா? நல்லவற்றிற்குப் பயன்படாது தீயவற்றிற்கா அவை பயன் பட வேண்டும்? கற்கின்ற அறிவெல்லாம் தீதை அகற்றவா அன்றில் கண்டதன் மேலெல்லாம் ஆசை வளர்த்துப் பைத்தியம் பிடித்துத் திரியவா? கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதே போல் காண்பவரையும், அவரின் உடைமையையும் வெறிக்கும் தன்மைக்கா ஒருவர் அறிவு நுணுக்கமும், விரிவும் பெறுகின்றார்?

அனைத்திற்கும் காரணம், கற்ற அறிவின்பால் பெற வேண்டிய நல்ல நோக்கத்தில், பயனில் தெளிவின்மையே. கல்வியின் நோக்கம் தெரியாது கற்றுத் தரும் ஆசிரியரின் பால், அவர் தம் உடைமியின் பால் வேட்கை கொள்ளுதல் அறிவின்மையே.

நுணுக்கிய அறிவிற்கும், பரந்த அறிவிற்கும் வெற்றிப் பாதை என்பது கண்டதன் மேல் எல்லாம் கவனம் கொள்ளுவதல்ல. கண்டவற்றையெல்லாம் காணும் மனதில் ஒருக்கம் ஏற்படாது எண்ணங்கள் சிதறி ஒன்றையுமே அடைய இயலாது. நல்லது ஒன்றைப் பற்றி அதையே நுணுக்கி, நுட்பமாக ஆராய்ந்தால் பாதைத் தெளிவும், வெற்றியும் கை கூடும் என்பதும் இக்குறளில் பொதிந்துள்ள உட் கருத்து. இதையே பிறகு துறவு அத்தியாயத்தில்
குறள்:350ல்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப் பற்றைப்
பற்றுக, பற்று விடற்கு’


என்றும் கூறுவதற்கு அடிப்படையாகும். அதாவது கண்டவர் மேலும், பொருளிலும் ஆசை வையாது, பற்றற்ற பரம் பொருள் மேல் பற்றை வைக்கும் படி கூறும் குறள்.

நோக்கரிய நோக்கும், நுணுக்கரிய நுண்ணுணர்வும் நல்லவை நோக்கிப் பயன் படுத்தப் பட்டால் வாழ்வின் உயர்ச்சிகளும், வெற்றிகளும், பரிசுகளும் தானாகவே தம்மைத் தொடருமே. மனித குல மேம்பாட்டிற்கும், சமுதாய நலத்திற்கும் தனது அறிவு நுட்பத்தைப் பயன் படுத்தினால் நோபல் பரிசும் கிட்டலாமே; மேன்மையும் அழியாப் புகழும் கிட்டக் கூடுமே. குறைந்த பட்சமாக வாழ்வின் நோக்கத்தை அறிந்து பயணித்தால் கூட பிறருக்குத் துன்பம் விளைவிக்காது, தனக்கே தீமை விளைவித்துக் கொள்ளாதே நல்லறம் தழைக்குமே.

தமது அறிவின் திறத்தைப் பயன் படுத்தாதைக் காட்டிலும், நல்லதற்குப் பயன் படாத அறிவாற்றலைக் காட்டிலும், அதைப் பிறர் பொருள் மீது ஆசை கொண்டு தீராக் காதலையும், ஆறாத மோகத்தையும் வளர்த்து வெறித் தனம் செய்விப்பது தீதிலும் பெரிய தீதாகும்.

ஆதலின் ஒருவரின் நுணுக்கறிவும், பரந்த அறிவும் கண்டவற்றின் மேல் கொள்ளும் வேட்கை வெறியால் பயனற்றுத் தீதாய் முடிகின்றது என்பதே இக்குறளின் முடிவு.

குறிப்புரை :
நல்லதற்குப் பயன்படாதே பிறர் பொருள்பால் ஆவலையும், காதலையும், வெறியையும் செய்விக்கும் நுண்ணறிவும், பரந்த அறிவும் தீதானவை.

அருஞ்சொற் பொருள் :
அஃகு - சுருங்கு, குறை, குவி, கழி, வற்று, நுண்ணியதாகு
நுண்ணறிவு - நுண்ணுர்வு, கூர்மையான அறிவு, நுட்பமானவற்றை உணர்ந்தறியும் ஆற்றல்
வெறிய - வெறுமையுடன் உற்று நோக்கு, மிரளு, வெருவு, சீற்றம் கொள், மதம் கொள், விறைத்து நில், பைத்தியம்,
வரம்பு மீறிய பற்றி, இச்சை அல்லது ஈடுபாடு, ஆவேசம், ஆத்திரம், மூர்க்கத் தன்மை, குடி மயக்கம்.

ஒப்புரை :

திருமந்திரம்: 968.
உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே.

திருமந்திரம்: 1067.
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே.

திருமந்திரம்: 2976
கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.

மாணிக்கவாசகர். திருவாசகம்:
10. திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்:

உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230

பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231

ஔவையார். ஆத்திசூடி:
79. பீடு பெறநில்.

ஔவையார். மூதுரை:
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 7

ஔவையார். நல்வழி:
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும் போமோ விதி. 30

***

In English:

Chapter : 18

Non-Covetousness

Thirukkural : 175

Covetous intelligence is waste...




In Tamil

siRRinpam veHki, aRan alla seyyArE
maRRu inbam vENdubavar.

Meaning :
What is the use of sharp and wise intelligence when it covets and savages on whoever comes across?

Explanation :

If one does savaging with rage driven by the covetousness on everyone and everything which comes across, what is the use of his acquired wisdom of sharp and wiseness?

Are that sharp brain and the wiseness to look depth and breadth meant to develop covetousness and to go on rampage for it? Is that such great intelligence be used for evil acts instead of good ones? Is that all learnt wisdom meant to remove the ills or is that meant to covet on everything and to go mad? Is that one getting his knowledge improved sharp and wise only to get greed on whatever comes his way and to enjoy it in whichever way?

For these entire problems the reason is lack of clarity on the goal, target and usage towards virtuous things. Without understanding the aim of the education, getting covetousness on the teacher and his belongings are only mere ignorance.

For the sharpness and wiseness of the wisdom, the path of success is not setting the focus on everything coming across. Such as getting attracted by everything seen only spoils the focus and scatters the thinking and thus makes nothing achievable. Only by focusing at one good thing, and analyzing deep it will give the clarity on the path to take and the success would happen is the implied meaning here in this Kural. This is the base for the thing Valluvar emphasizes later in the Chapter on Renunciation in the
Kural: 350.

paRRuka paRRaRRAn paRRinai ap paRRai
paRRuka, paRRu vidaRku


That is actually not to have attachment on whatever comes but only to have attachment on that one that has no attachments at all, the God.

Actually the greater vision and the sharpness when applied for the good causes that will fetch success, eminence and applauds automatically in life. When the sharpness and the wiseness are used for the betterment of mankind and for the improvement of the society it might fetch even the Nobel Prize; long lasting fame and name. At the least even when travelled with aim of life’s goal of liberation without bothering anyone or the self the good virtues will grow.

Than having not used the mental power, than not having used it for the good sake either, using it to get covetous on all and developing the greed on everything and savaging thus is completely the evilest among all the evils.

Therefore ones sharpness and wiseness when applied for the covetousness on all not only becomes waste but becomes the greater evil is the conclusion by this Kural.


Message :
The sharp and wise intelligence that which does nothing good but only covets and develops savage and fury thus is only ill.

***

Saturday, October 17, 2009

திருக்குறள்: 120 (நியாயமான வாணிபம்...)

அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 120

நியாயமான வாணிபம்...

In English

வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-பேணிப்
பிறவும் தம்போல் செயின்.

பொழிப்புரை :
வாணிகம் செய்வாருக்கு [உண்மையான] நடுநிலையான வாணிபத் தொழில் எனப்படுவது - பிறர் பொருளையும் பேணித் தமதே போல் செய்தல் ஆகும்.

விரிவுரை :
பிறர் பொருளையும் தமதே போல் பேணிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வாருக்கு நடுநிலை தவறாத வாணிபப் பணி ஆகும்.

துலாக்கோலைப் பயன் படுத்தும் அடுத்த நபர்களான வியாபாரிகளுக்கும் நடுநிலைமை தவறாதே, பிறழாதே அவர்தம் கடமையைச் செய்தல் வேண்டும் என்பதை இக்குறளில் தெளிவுறுத்துகின்றார். இந்த வியாபாரிகள் என்பதின் கீழ் அனைத்துத் தொழில்களும் அடங்கி விடுகின்றன. எனவே நடுநிலை என்பது அனைத்துத் தொழிலுக்கும் பொதுவானதே.

வள்ளுவர் காலத்தில் வியாபாரம் பண்ட மாற்று முறை. எனவே கொள்முதல் செய்தல் எனும்போது பிறர் பொருளென அதிகமும், மாற்றுப் பொருளைக் குறைத்துக் கொடுப்பதை அநியாய இலாபமாகக் கருதி அது கூடாதென இக்குறள் செய்யப்பட்டுள்ளது. இப்போது நியாயமான ‘வியாபாரம்’ எனப்படுவது பொருட்களை இன்னாரது என்றுக் கொள்ளாமல், அனைத்தையும் தனதாகவே தராசில் சமமாகப் பார்க்க வேண்டிய அவசியம் விளங்கும்.

பண்ட மாற்று முறையில் வியாபாரி தனது பொருளுக்கு மாத்திரம் அல்ல பிறர் பொருளை வாங்கவும், விற்கவும் செய்வார். எனவே அவரது நடவடிக்’கை’ துலாக்கோல் போலவே செயல்பட வேண்டியுள்ளது. எடைக்கற்களும் வந்திராத காலமாக இருந்திருத்தல் வேண்டும். வள்ளுவர் காலத்தில் இலாபம், நட்டம் என்னும் வார்த்தைகளும் கிடையாது. எனவேதான் அவர் அவற்றைப் பெருக்கம், கேடு எனும் வார்த்தைகளால் குறள் 115ல் சொன்னார்.

பண வர்த்தகம், எடைக்கற்கள் என்பவையெல்லாம் பிறகு வந்தாலும் அடிப்படையில் கொள்முதல் செய்வதும், விற்பதும், தேக்குவதும், தர உயற்ச்சி செய்வதும், தயாரிப்பதும் எல்லாம் என்றைக்கும் வியாபரத்தில் உள்ள நடவடிக்கைகளே. இலாபம் என்பது வியாபாரத்தின் தொழில் சம்பந்தப்பட்ட பணிக்கும், காலத்திற்கும், உழைப்பிற்கும், தேக்கத்தின், உயர்ச்சி, போக்குவரத்து, மற்றும் இதரச் செலவுகளுக்கும், ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்பிற்கும், பண மதிப்பு விரையத்திற்கும் ஆன ஒரு பங்கீட்டு விலை ஈடே. அவை தவிர வேறு எதுவும் அநியாயமான இலாபம் கொள்ளும் செயலாகும். குறைந்த விலையில் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்று இலாபம் பெறுதலே வியாபாரம் என்னும் நிலையோடு, சமூகக் கட்டுப்பாடும், பணியும் அதில் இணைந்திருந்தால் வியாபாரம் எனப்படும் தொழிலும் சிறந்த நல் அறமாகும். சமூகம் இனிதே செயல்பட, நிதி நிலைமைச் சீராகச் செயல்பட நியாயமான வியாபாரம் அவசியமாகின்றது.

அதில் பொருளைத் தேக்குதல் (பதுக்கல்), கலப்படம் செய்வித்தல், போலிகளை உருவாக்குதல், அதிக இலாபத்திற்காக மறைவு விலைகளைக் கூட்டி நிர்ணயித்தல், பிறர் பொருள் எனில் அடிமட்ட விலைக்குக் கேட்டல், தமது பொருள் எனில் யானை விலை கூறுதல், ஆளுக்கொரு விலை நிர்ணையித்தல் என்பனவெல்லாம் நடுநிலை தவறிய, நாணயமற்ற, நியாயமற்ற வாணிபமாகும்.

ஆக ‘இலாபம்’ பெறும் வாணிபத்தில் நேர்மையும், நியாயமும், நாணயமும், ஒழுங்கும் அவசியமாகின்றது. அவை ஒவ்வொரு பொருளையும் தமதேபோல் பேணிக் காத்து, ஒழுங்கு, அழகு, ஒப்பனை, தர உயற்சி , மேம்படுத்தல் செய்து சந்தைப் படுத்துதல், உண்மையான நடுநிலை தவறாத வாணிபம் ஆகும். அவற்றிற்கான நியாயமான ஈட்டுத் தொகையை மாத்திரம் விற்பனை விலையில் சேர்த்து நியாயமான இலாபத்திற்கு விற்றல் நடுநிலை தவறாத வாணிபமாகும்.

பெரும்பாலும் ஒரு பொருளைத் தயாரிப்பவர்கள் அதை நேரடியாகச் சந்தைப் படுத்தும் போழ்து, பிற தயாரிப்பாளர்களின் பொருட்களுடன் வியாபராம் செய்வார்கள். அவ்வமயம் பிறர் பொருளை மட்டப்படுத்தி, தமது தயாரிப்பை உயர்த்திக் கூறுதல் வியாபாரத்தில் அன்றாடம் காணும் மனித இயல்பு. அதிலும் பிறர் பொருளைத் தமதாக எண்ணி, அவற்றின் சாதக, பாதகங்களை நடுநிலையாக ஆய்ந்து நுகர்வோருக்குச் சொல்லி, மேலும் அவருக்கு அனைத்துப் பொருட்களின் தன்மையையும் நியாயத்துடன் கூறிச் செய்தலே நடுநிலையான வாணிபம் ஆகும.

எனவே செய் தொழில் எத்திறத்ததாயினும் அதில் நடுநிலை வகிப்பதே அறம்.

குறிப்புரை :
நியாயம் என்பது நீதி மன்றத்தில் மட்டுமல்ல, அனைத்துத் தொழில்களிலும், அன்றாடப் பணிகளிலும் இருத்தல் வேண்டும்.

அருஞ்சொற் பொருள் :
வாணிகம் - வியாபாரம், இலாபம், ஊதியம், பலன், வேலை, தொழில், பணி, கடமை

ஒப்புரை :

திருமந்திரம்: 394
நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்துய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே

திருமந்திரம்: 554
கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே

திருமந்திரம்: 976
நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 120

The fair business...




In Tamil

vANikam seyvArkku vANikam-pENip
piRavum thampOl seyin.

Meaning :
The virtuous business for the traders is to deal other's interests too as their own.

Explanation :

Consider and maintain others goods as their own is the virtuous business duty for the business people.

The next community which uses the weighing scales, the business people, should also maintain justice in conducting their day-to-day business upholding the righteousness always clarifies Valluvar here in this Kural. Invariably all the industries come under the head of business. Therefore upholding the justice is common to all the jobs and industries.

During the days of Valluvar the business was through the barter system. Therefore for trading in by taking more goods as they are from others, and giving out less of exchanging commodities for the sake of more profit should not be done is the purpose of this kural. Now one can easily understand the relevance of considering the others good as their own while weighing things for the barter.

In the barter system, business men not only exchange the commodities for their goods alone but also for others goods for buying and selling. Therefore their activities must be fair and unbent like the bar of a weighing scale. Those days of business may have been even before invention of weighing stones. During Valluvar period even the words of Profit and Loss would not have been there. That is why he uses the words as in Kural 15, "Perukkam" (increase, proliferation, prosperity etc) and "Kedu" (inadequacy, wrong, harm, damage, poverty, destitution, elision etc).

Though monetary trading, weighing stones, measurements could have been later developments in trading business, however, the basic trading and business have not changed as for as Buying, Selling, Stocking, Manufacturing, Packing and Value adding etc. Profit is the charge for the overheads for the services, time spent, labor, stocking, value addition, transportation and other expenses, research and development, inventions, the exchange rate variances, and the risk value for the monetary and economy variations as a percentage to the base the cost. Other than that whatever included in the price is considered as the act of unfair profit motto. Along with the principles of buying at the lower price and selling at the higher price and yielding the profit as the business, when social responsibilities and duties are included then only the business profession too becomes the good virtue. For proper functioning of the society and smooth run of economies, fair business is an absolute necessary.

In the business, illegal stocking (hoarding), adulteration, faking, inclusion of hidden costs to maximize the profit, if someone's product asking for the lower most price, if it is own product selling at the maximum price, selling at invariant prices to everyone and such all activities are partial and considered as unjust business.

Therefore in the business of profits too it becomes necessary that to conduct it with fairness, justice, honesty and discipline. In that to treat each and every product of them as their own with fairness in securing, modifying, upgrading, costing and marketing becomes good virtue of business. When priced with reasonable charges to compensate the overheads while selling becomes the fair business.

Generally the manufactures of one or fewer product when market it directly, combine it with other manufactures products in the business to sell. That time of sales it would be natural tendency for one to degrade the others product and to talk of high of their own creations. But even in such situations one should not degrade the others goods but should treat them as their own product, and consider fairly their pros and cons and explain the consumer with rational and factual details of all the products equally is the true and fair business.

Therefore whatever is one's business or the job, keeping up the justness in it is the true and good virtue.


Message :
The equity must be not only in the courts but also in all the industries and in all business what human do.

***

Tuesday, October 13, 2009

திருக்குறள்: 116 (வழுவிய நீதியில் அழிவது தானே...)

அதிகாரம்

: 12

நடுவு நிலைமை

திருக்குறள் : 116

வழுவிய நீதியில் அழிவது தானே...

In English

கெடுவல் யான் என்பது அறிக-தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ, அல்ல செயின்.

பொழிப்புரை :
கெடுவது தானே என்பதை அறிக - தன் நெஞ்சம் நடுவு [நிலை] ஒழித்து அல்லவை செய்தால்.

விரிவுரை :
தனது நெஞ்சம் நடுவுநிலை விட்டுவிட்டு அல்லது செய்தால், கெடுவது தானே தான் என்பதை அறிக.

நடுவுநிலை தவறி ஒரு நியாயத்தை வழங்கவோ அன்றி ஒரு காரியத்தைச் செய்யவோ முற்படும் முன்னர் நெஞ்சமே உணர் ‘கெட்டுப் போகப்போவது தானே’ என்பதை.

நியாயத்தைத் திரித்து, நேர்மையை எதிர்த்து வழங்கும் நீதியில் துன்புறப் போவது வாதியோ, பிரதிவாதியோ, நியாயத்தை இழப்பவரோ அல்ல, முதலில் தானே என்பதை நடுவுநிலைமையை நெஞ்சறியத் தவறுவோர் முதலில் உணரட்டும்.

எனவே அவ்விதமாக அறிந்து நீதி வழுவாது நிற்றல் வேண்டும் என்பது பொருள். மனச்சாட்சியை மீறி ஒருவர் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்ள முன் வருவாரா?

இக வாழ்வில் அரசியல் வாதிகளுக்கும், அராஜக நபர்களுக்கும் கூலிக்கு விலைபோகின்றவர்களும், நியாயத்தை விற்பவர்களும், மறைப்பவர்களும், பொன்னுக்கும், பொருளுக்கும் நியாயத்தை அடகு வைப்போரும், பொய் சாட்ச்சி சொல்லுபவரும், பித்தலாட்டக் காரர்களும், அராஜகக் கைக் கூலிகளும், அடாவடிக் காரர்களும், அநியாய விலை பேசும் வியாபாரிகளும், நேர்மை தவறும் அரசியல் வாதிகளும், நீதிபதிகளும், ஆசிரியர்களும், ஏனைய அரசாங்க ஊழியர்களும், துரோகமிழைப்போரும், பொய்யரும், கள்வரும் தாங்கள் கெடுவதற்கான செயலைத் தாங்களே தோற்றுவித்துக் கொள்கின்றாகள் என்பதை முதலில் அறியட்டும்.

குறிப்புரை :
நடுநிலை அழித்து அல்லாததைச் செய்தல் தனக்குத் தானே கெடுவதற்கான முதல் படி.

அருஞ்சொற் பொருள் :
இல் - இடம், வீடு
கோடாமை - சாயாமை, வளையாமை, தவறாமை, கொள்ளாமை

ஒப்புரை :

கணியன் பூங்குன்றனார்:
நன்றும் தீதும் பிறர்தர வாரா

திருமந்திரம்: 269.
செல்வம் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.

திருமந்திரம்: 946.
பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே.

திருமந்திரம்: 1459
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே.

ஔவையார். ஆத்திச்சூடி:
38. கெடுப்ப தொழி.
46. சீர்மை மறவேல்.
99. வாதுமுற் கூறேல்.

ஔவையார். கொன்றைவேந்தன்:
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்

***

In English:

Chapter : 12

Impartiality

Thirukkural : 116

Failed fairness torments the self...




In Tamil

keduval yAn enpathu aRika-than nenjam
naduvu orI i, alla seyin.

Meaning :
One must discern that the ruin is only the self when heartily doing a thing unjust.

Explanation :

When the heart is doing an unjust, one must remember that the downfall and the evil are only to the self.

Before uttering a wrong justice or doing an unethical act, oh thy heart feel that 'the one going to get destroyed is self alone'.

The judgment with twisted justness or the verdict against the fairness torments not the plaintiff or the defendant but firstly the self is to be understood before hand by the one who is doing unjust knowingly to his heart.

Therefore by understanding such one should be honest to maintain the uprightness without fail is the implied meaning. Will anybody come forward to hurt himself to go against his own consciousness?

In this worldly life those who have gone for sale with the politicians and to the anarchy, that who sells the fairness, that who covers the justness, that who pledges the judgment for the gold and wealth, that who falsify the evidence, that who cheats, that who work for the social or political disorder, that who sells the goods at unfair price, those unrighteous politicians, judges, teachers and the other government staff and those betrayers, liars, burglars let all of them understand first that they have started to torment themselves alone and their downfall already started.


Message :
Doing unjust by eliminating the just is the first step to get self destruction.

***