Showing posts with label Sevikku. Show all posts
Showing posts with label Sevikku. Show all posts

Saturday, August 8, 2009

திருக்குறள்: 65


அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 65
Chapter : 7

Children

Thirukkural

: 65

மக்கள்மெய் தீண்டல் உடற்கு இன்பம், மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம், செவிக்கு.

பொழிப்புரை :
தம் மக்கள் உடம்பைத் தழுவுதல் உடலுக்கு இன்பம், மற்றும் அவர் பேசும் சொல்லைக் கேட்டல் காதுக்கு இன்பம்.

விரிவுரை :
தம் மக்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டு தோள்மீதும், மார்மீதும், மடிமீதும் தாலாட்டிக் கொஞ்சுவது உடலுக்கும், உளத்திற்கும் இன்பம். மேலும் அவர்களின் சொல்லைக் காது கொடுத்துக் கவனிப்போடு கேட்டல் காதுக்கு இன்பம். அவர்களின் மழலையைக் கேட்டல் மிகவும் இன்பம்.

குழந்தைகளை எடுத்து, உச்சி முகர்ந்து, கொஞ்சி, நடை பழக்கி, நிலாக் காட்டி, அமுதூட்டி, தாலாட்டி, அவர்களைப் பேச வைத்து, விளையாட வைத்து, ஓடவைத்து, பாடவைத்து ரசித்து மொத்தத்ததில் அவர்களின் பால் முழுக் கவனத்தையும் செலுத்தினால் எல்லாமே இன்ப மயம் என்கின்றார் வள்ளுவர். அதாவது முழுக் கவனம் என்பது உட்பொருள். அது குழந்தைக்கும் நல்லது, பெற்றோருக்கும் இன்பம் பயக்கும்.

சில சமயங்களில் குழந்தைகள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டுவிடுவது தவறு. அது குழந்தை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தை வளர்ப்பில் மிகவும் முக்கியமானது அவர்களைப் பேச ஊக்கப் படுத்துதலும் அதற்குப் போதிய கவனம் செலுத்துதலும். குழந்தைகள் பேசப் பேச மொழி அறிவு மாத்திரம் அல்ல, அவர்களின் எண்ணங்களும் சீர் படும். எதையும் வெளிப்படுத்தும் திறன் வளரும். மாறாக அவர்களின் பேச்சைக் கவனிக்காது விடுத்தலும், அதட்டுதலும், நிறுத்துதலும், கிண்டல் செய்தலும் எதிர் விளைவுகளையும், முடக்கத்தையும் ஏற்படுத்தி விடும். எனவே குழந்தைகளைப் பேசும்படி செய்தல் அவர்களது ஆரோக்கியத்திற்கு அவசியம்.

குறிப்புரை :
பெற்றோருக்குக் குழந்தைகளின் பால் முழுக்கவனம் குறைவிலா இன்பம் தரும்.

அருஞ்சொற் பொருள் :
தீண்டல் - தொடுதல்
செவி - காது
இன்பம் - மகிழ்ச்சி

ஒப்புரை :

திருமந்திரம்: 388
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
.(1).காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே
.(1). காய்கதிர்ச்

திருமந்திரம்: 389
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியுங்
கண்டச் சதுர்முகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே

திருமந்திரம்: 390
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே

திருமந்திரம்: 391
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்
பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாஉல காயமர்ந் தானே

***

In English:

makkaLmey thIndal udaRku inbam, matru avar
sol kEttal inbam, sevikku.

Meaning :
For parents it is joy to their body to hug their children and also to their ears to hear them.

Explanation :
It is pleasure bodily for the parents to fondle their kids by hug, kiss and carry them on shoulders, backs, chests and laps. Also it is the joy for their ears to listen them. It is so sweet to hear their lisp.

Taking the kids in arms, sensing them, walking them, showing moon to them, feeding them, playing lullaby to them, making them to speak, playing with them, teasing them, running them, making them to sing and such of all activities to their kids will give them greater happiness in every sense. Note that the fullest attention is important. That is good for both parents and children.

Sometimes Parents become inattentive by ignoring to their children's talk, which is wrong. That will impair the children's growth. It is important in bringing up the kids are that to encourage them talk and to listen to them. When they speak not only their language improves but also their thinking gets streamlined. Talents for the expressions develop. On the other hand, inattentiveness and ignoring their talks, shouting, stopping and mocking at them will result in their inhibitions, stammering and can cause many allied problems. Therefore it is important that for the cause of their health the children must be made to talk.

Message :
More joy to Parents is by giving the fullest attention to their own kids.

***