Showing posts with label pira. Show all posts
Showing posts with label pira. Show all posts

Friday, September 11, 2009

திருக்குறள்: 95 (பணிவும், இன்சொலுமே அழகு...)

அதிகாரம்

: 10

இனியவை கூறல்

திருக்குறள்

: 95
Chapter : 10

Amiability

Thirukkural

: 95

பணிவு உடையன், இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல, மற்றுப் பிற.

பொழிப்புரை :
பணிவு உடையவனாகவும், இன் சொலனாகவும் ஆதலே ஒருவற்கு அழகு; மற்றையவை அல்ல.

விரிவுரை :
பணிவு உடையவனாகவும், இன் சொலனாகவும் இருத்தலே ஒருவனிற்கு உண்மையான அழகு, மற்றைய வேறு ஏதும் அல்ல.

பணிவு என்பது பண்பும், அன்பும் கலந்து பிறரை மதித்துத் தாழ்ந்து வணங்கும் மரியாதை செய்யும் குணம். அதாவது பிறரை மதித்து வணங்கி மரியாதை காட்டி மகிழும் அடக்கம் உடைமை. மரியாதைக்கு உரியோரைப் போற்றும் மனோ நிலை மற்றும் செய்கை. அடக்கம் என்பது தான் எனும் ஆணவம் அடங்கிய உயர்ந்த நிலை. எனவே பணிவு என்பது அன்பையும், பண்பையும், அடக்கத்தையும், நன் மதிப்பையும் கொண்ட உயரிய ஒழுங்கு.

எனவே அத்தகைய உயரிய பணிவும், இனிய சொல்லைப் பேசும் பழக்கமும் ஒருவர் கொண்டிருத்தலே அது அவருக்கு அனைவரையும் வசீகரிக்கும் உண்மையான அழகாகும். ஏனையவை வேறு ஏதும் இவற்றின் முன் அழகல்ல.

குறிப்புரை :
பணிவும், இன் சொல் பேசுதலுமே ஒருவருக்கு உண்மையான அழகு, மற்றவை அல்ல.

அருஞ்சொற் பொருள் :
அணி - அழகு, இலக்கணம், அலங்காரம்

ஒப்புரை :

திருமூலர். திருமந்திரம்:
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே. 637

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக்கூத்து ஆமிடம் தானே. 895

மாணிக்கவாசகர். திருவாசகம்.
9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் :

வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202

ஔவையார். ஆத்திச்சூடி:
நொய்ய உரையேல். 74
பழிப்பன பகரேல். 76
பிழைபடச் சொல்லேல். 78

ஔவையார். கொன்றைவேந்த்ன்:
கீழோர் ஆயினும் தாழ உரை. 17

***

In English: (Thirukkural: 95)

paNivu udaiyan, in solan Athal oruvaRku
aNi; alla, maRRup piRa.

Meaning :
Humbleness and pleasant speech are the real grace for one and not any other things.

Explanation :

Humility and pleasant speech towards others are the true ornaments for one and not any other things.

Humbleness is one's characteristic quality that extends the courtesy with Love and respects to others. That is a joy of submissiveness and self-control in giving respect to others. Also it is the state of appreciation to others by both emotion and action. It is the modesty of self-control at the higher degree. Therefore humbleness is the higher virtue, which consist of Love, modesty, self-control and esteemed respect to others.

Therefore when one practices such higher humbleness and pleasant speech, that becomes his true charm and grace in attracting others. Nothing stands as better charm than this.


Message :
Humility and sweet words speaking are the true beauties for one and nothing else.

***

Tuesday, August 4, 2009

திருக்குறள்: 61



அதிகாரம்

: 7

மக்கட் பேறு

திருக்குறள்

: 61
Chapter : 7

Children

Thirukkural

: 61

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த
மக்கட் பேறு அல்ல பிற.

பொழிப்புரை :
இல்லறத்தோர் பெறும் பேறுகளில் அறிவு அறிந்த மக்கட் பேற்றைப் போன்றது அல்லாத வேறு ஏதும் யாம் அறிந்தது இல்லை,

Among the blessings family men can get, we know not any greater one than that of the learned and wise children.

விரிவுரை :
அறிய வேண்டியவற்றை அறியும் அறிவுள்ள அல்லது அறிந்த மக்களைப் பெறுவதைப் போன்று உலகில் இல்லறத்தோர் பெறக் கூடிய சிறந்த பேறென்று வேறெதையும் யாம் அறியவில்லை.

அறிவு அறிந்த மக்கள் என்றால் கல்வி கேள்விகளில் சிறந்த வாரிசுகள் என்பது பொருள்.

பெற்றோருக்குத் தாம் பெற்ற மக்கள் சிறந்த கல்வி அறிவாளர்களாகத் திகழ்ந்தால் அதைக் காட்டிலும் சிறந்த பேறு வேறு ஏது இருக்க முடியும்? மக்கட் செல்வத்தைப் பெறுவதே பெறும் பேறு அதிலும் அறிவார்ந்தவை என்றால் மிகப் பெறும் பேறுதானே.

இல்லறத்தானின் கடமைகளில் மக்கட் செல்வம் பெறுதல் முக்கியமானது. அவரையும் அறிவில் சிறந்தோராய் ஆக்குதல் பெற்றோரின் அடுத்த கடமை. தாம் பெற்ற செல்வங்களை அறிவிற் சிறந்தோராய், நன் மக்களாய், சான்றோராய் இவ் உலகில் ஆக்க வேண்டிய பொறுப்புப் பெற்றோருக்கு உண்டு. அம்முயற்சிகளைச் செய்து தர வேண்டியது பெற்றோராயினும், அறிவிற் சிறந்து விளங்க வேண்டியது மக்களின் பொறுப்பாகின்றது. எனவே அது பெற்றோரைப் பொறுத்தவரையில் அடுத்துப் பெறும் பேறாகின்றது.

எனவே அறிவார்ந்த மக்களைத் தமதாகக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்ற பெற்றோருக்கு அவர் பெற்ற பேறுகளுள் அதைக் காட்டிலும் சிறப்பானது வேறு ஏதும் இருக்க முடியாது.

அதாவது நாம் முன்னுரையில் சொன்னது போல் மக்கட் செல்வத்தை பெறுவதே பேறு. அதிலும் அறிய வேண்டியவற்றை அறியும் மக்களைப் பெறுதல் பெரும் பேறு. ஏனென்றால் மூளை வளர்ச்சி அடையாத மக்களைப் பெறுவதால் துன்பமே அன்றி அதானால் பயன் ஏது?

குறிப்புரை :
அறிவிற் சிறந்த பிள்ளைகளைக் காட்டிலும் சிறந்த பேறு இல்லறத்தானுக்கு வேறு ஏதும் இல்லை.

Wise children are the greatest blessings family men can get.

அருஞ்சொற் பொருள் :
மக்கள் - குழந்தைச் செல்வங்கள், வாரிசுகள்.

ஒப்புரை :

திருமந்திரம்: 119
அறிவுஐம் புலனுட னேநான் றதாகி
நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல
அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்
குறியறி விப்பான் குருபர னாமே.

திருமந்திரம்: 136
அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்ப்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

ஔவையார். நல்வழி: 17
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும் பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று
வெறும் பானை பொங்குமோ மேல்.

பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்:
ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு நீதரும் மகிழ்ச்சி.

***

Wednesday, July 8, 2009

திருக்குறள்: 34

அதிகாரம்

:

4 அறன் வலியுறுத்தல் திருக்குறள்

:

34


மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர, பிற.


பொழிப்புரை (Meaning) :
மனத்தின் கண் மாசு இல்லாது ஆகுதலே, அனைத்துமான அறனாகும்; மற்றவை யாவும் வெறும் ஆரவாரங்களே.


விரிவுரை (Explanation) :
மனத்தில் மாசு அற்று அதாவது தூய்மையாக இருத்தலே முழுமையான அறமாகும். அன்றில் ஒழுகும் அறமானது மேலோட்ட மானதுமாயும், போலியானதாகவும், பிறருக்கு மாயத் தோற்றம் தரும் வெளிவேடமாகவும் இருப்பதால் உண்மையில் ஒருவனுக்கு அவை நன்மை பயக்காது. அவை வெற்று ஆரவாரமாக அதாவது இரைச்சலை ஏற்படுத்தி நிம்மதியைத் தாராது.

மாறாக தூய்மையான மனது, முழுமையான அறமாகி, அமைதியையும், நிம்மதியையும், நன் விழுமியத்தையும் தர வல்லது.


குறிப்புரை (Message) :
மாசிலா மனம் கொள்வதே முழுமையான அறமாகும்.


அருஞ்சொற் பொருள் (Synonyms) :
ஆகுலம் - ஆரவாரம், ஒலி, கலக்கம், துன்பம், வருத்தம்
நீர - குணத்தையுடையன

ஒப்புரை (References) :

ஔவையார். மூதுரை: 1
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால்.

ஔவையார். நல்வழி: 23
வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.

ஔவையார். நல்வழி: 33
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.



***