|
| |
பொழிப்புரை : | |
அன்பிற்கும் உண்டோ அடைக்கின்ற தாழ்? ஆர்வலரின் துன்பத்தில் துளிர்க்கும் சிறு கண்ணீரே உள்ளன்பை வெளிக்காட்டி விடும். | |
விரிவுரை : | |
அன்பை மனத்தில் வைத்து அடைக்கின்ற தாழ்ப்பாள் ஏதும் உண்டோ? அஃது ஆர்வலருக்கு ஏதானும் துன்பம் நேர்ந்தால் அது கண்டு கண்ணீராய் வெளிக்காட்டி விடுமே. உள்ளத்தின் உண்மையான அன்பை மறைக்க இயலாது. அவை அன்பரின் துன்பம் கண்டு துவண்டு காட்டிவிடும். அது இரக்கமா, கருணையா, பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணி வருந்தும் இதய உணர்வு? அன்பின் மிகுதியால் அடக்க முடியாமல் கண்ணீராய்த் துளிர்த்து விடுகிறதே. அழுதால் ஒரு நிம்மதி. அழுதால் உன்னைப் பெறலாமே என்பார் இறைவனை நோக்கி அப்பர். இன்பமாகட்டும், துன்பமாகட்டும் கண்ணீர் வந்து விடுகிறதே. பிரிந்தோர் இணைந்தால், வெகு நாளைக்குப் பிறகு சந்தித்தால் மொழிக்கு முன்னர் கண்ணீர் தழும்பும் அன்றில் கண்கள் கலங்கும். ஏன்? அது மறைக்க முடியாத அன்பின் அடையாளம். | |
குறிப்புரை : | |
அன்பு உள்ளம் துன்பத்தைச் சகியாது. | |
அருஞ்சொற் பொருள் : | |
புன் - துன்பம், துயரம், வறுமை, மெலிவு, தரித்திரம் பூசல் - தகராறு, ஆரவாரம், வெளிப்படுத்துதல் | |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 272 என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பெரிய வறுப்பினும் அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி என்போல் மணியினை எய்தஒண் ணாதே. பட்டினத்தார்: (தாயார் தகனக்கிரியைப் பாடல்கள்) மாணிக்க வாசகர். திருவாசகம்: 3. திருவண்டப் பகுதி: | |
*** |
<
In English: (Thirukkural: 71)
| |
| |
Meaning : | |
Is there a latch to hide the Love? At lover's pain, emerging tiny tears shows it off. | |
| |
Explanation : | |
Is there a latch in the heart to hide the Love? No, it shows it off as tiny tears on pain of the loved one. | |
| |
Message : | |
Heart cannot restrain lover's distress. | |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...