அன்போடு இசைந்தொழுகும் வாழ்க்கை வழக்கம் என்பது, [உடம்பினுள்] ஆர் உயிருக்கும், எலும்பிற்கும் இயல்பாயமைந்த தொடர்பைப் போன்றது.
புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.
விரிவுரை :
அன்போடு ஒழுகும் வாழக்கை வழக்கு என்பது, உடம்பினுள் ஆர் உயிர்க்கும், எலும்பிற்கும் இயல்பாய் பொருந்திய தொடர்பைப் போன்றதாகும்.
வேறு வகையில் சொன்னால்: ஆர் உயிர்க்கு, உடலில் எலும்போடு இருக்கும் உறவைப் போன்றதே, அன்போடு இருத்தலும் இயல்பு.
எலும்புடை ஆர் உயிருக்கெல்லாம் அன்புடைமையும் இயல்பே.
எனவே அன்பிலா உயிர்கள் இயற்கை விதிக்கு இணங்காதவை, அப்பாற்பட்டவை, மாறானவை என்பது நுட்பொருள்.
அன்பே இல்லாமல் ஓர் உயிரா? இருக்க முடியாது; அன்பு பிரண்ட, வறண்ட சில ஜென்மங்கள்தான் உண்டு. அவர்களை நல்வழிப் படுத்தவே வள்ளுவர் அன்பற்று இருத்தல் இயற்கை அன்று என்கின்றார்.
சதையும், நரம்பும், எலும்பும் பின்னிப் பிணைந்து கிடக்கும் உடலின் இயக்கத்தற்குத் தேவை ஆர்உயிரும், அன்பும் ஆகும். ஆருயிரும், அன்பும் கலந்ததே ஆன்மா.
For the soul to live with the Love is natural; it is like being with the flesh and bone.
These explanations contain newer and exclusive messages.
Explanation :
The relationship of Love to Life in practice is like the one found between the soul and the bone in the body.
In other words, for all the living vertebrates, one that have bones, the Love is also a natural phenomenon.
Therefore it is understood that the Loveless is against the nature’s law, exceptional, abnormal and defective.
Can there be a Living without Love? Not really but only there may be Love distracted or dried out. Valluvar indicates Loveless as abnormal only to rectify and bring such of them into the right direction of natural way.
Liveliness and Love are the necessaries of Life to keep alive this body, which is made of flesh, nerve and bones. The united spirit and Love is called as the Athma, the soul.
Message :
Love is a natural phenomena to the Livings; serves like the bones.
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...