|
| |
பொழிப்புரை : | |
எலும்பு இலாத புழுக்களை வெயில் காய்த்து வருத்துமே அதைப்போல அன்பு இலாதவரை வருத்தும் அறம். | |
விரிவுரை : | |
எலும்பற்ற உயிரிகளான புழுக்களை வெயில் காய்ந்து வருத்திவிடுமே, அதைப் போன்றே அன்பற்றவர்களைக் காய்ந்து வருத்திவிடும் அறம். அன்பிலாதவர் எலும்பற்ற புழுக்களைப் போல அறம் எனும் வெயிலில் காய்ந்துவிடுவர் என்பது பொருள். ஆக அன்புடையோர், முதுகெலும்பு உடையோராய் காய்த்தல்களிலிருந்து தப்பிவிடலாம். எனவே மக்காள் அன்பு கொள்ளுவீர். அன்பு என்பது கருணை பொழியும் ஓர் உணர்வு; அன்புடையோர் என்போர் ஈர இதயம் உடையோர். அற வழியில் அவர்பால் எந்தக் காய்ச்சலும், வறட்சியும் துன்பத்தை ஏற்படுத்த முடியாது என்பது துணிபு. மாறாக அன்பிலாதோர் கருணை அற்றோர், நெஞ்சத்தில் ஈரமற்றோர். எந்தக் காய்ச்சலிலும் அவருக்குத் துன்பமே அதிகம்; எனவே அவர், புளுக்கள் போல், எளிதாகச் சுருண்டு விடுவர் என்பது ஈண்டு நோக்கத் தக்கது. பிறர் துன்பங் கண்டு வருந்தும் தாய் உள்ளமும், ஏழைகளுக்காய் இரங்கும் கருணை இதயமும், அழுவோரைத் தேற்றும் அன்பு நெஞ்சங்களும், ஆதரவற்றோரை அணைக்கும் கரங்களும் என்றும் அன்பைப் பொழியும் மானுடச் சுரப்பிகள்; வற்றா ஊற்றுக்கள். அவரைக் காய்க்கும் துன்பம் அறத்தின்பால் வருமா? வந்தால் அது அறமா? எனவே அன்பில்லாதவரே காய்ப்பர், காய்க்கப் படுவர், கருகுவர். | |
குறிப்புரை : | |
அன்பற்றவர் வாழ்வில் காய்ந்து சுருங்கித் துன்புறுவர். | |
அருஞ்சொற் பொருள் : | |
என்பு - எலும்பு | |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 277 கருத்துறு செம்பொன்செய் காய்கதிர்ச் சோதி இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும் அருத்தியுள் ஈசனை யாரருள் வேண்டில் விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே. ஔவையார். ஆத்திச்சூடி: 92 மாணிக்கவாசகர். திருவாசகம்: 5. திருச்சதகம். | |
*** |
In English: (Thirukkural: 77)
| |
| |
Meaning : | |
The Boneless wither in the sun, likewise, the loveless suffer in the virtues | |
| |
Explanation : | |
The hot sunlight withers the boneless worms; similarly, the virtue suffers the Loveless. Loveless are similar to the boneless to suffer in the light of virtue, is the meaning. Also it means that the Loving can sustain and escape in case of withering as they have the bones. Therefore guys, bear the Love in you. Love is the emotion of kindness. Loving have the kind and wet heart. Therefore in their virtuous path, there can’t be any withering or dryness to create sufferings to them. On the other hand, Loveless do not have kindness or wetness in their heart. Therefore they suffer any withering the most. Hence they are compared to the boneless in their sufferings for the withering out. The motherly hearts which shed tears for other’s sufferings; the kind hearts which grieves the poor, the graceful hearts which consoles the weeping, the noble hearts which embraces the orphans, all of them are the Love pouring human glands, non stopping human Love fountains. Will there be chance of withering them out in the path of virtue? If so will it be the virtue? Therefore only Loveless go dry, wither, burnt and suffer. | |
| |
Message : | |
The loveless in life will wither, shrink and fade. | |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...