Sunday, August 23, 2009

திருக்குறள்: 78

அதிகாரம்

: 8

அன்புடைமை

திருக்குறள்

: 78
Chapter : 8

Love

Thirukkural

: 78


அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த் தற்று.


பொழிப்புரை :
அன்பு அகத்தே இல்லாத உயிர் வாழ்க்கையானது, வல்லிய கற்பாறையின் மேல், வற்றிப்போன மரம் தளிர்க்க முயற்சித்தல் போலாகும்.


விரிவுரை :
அன்பு எனும் ஈரம் அகத்தே இலாது வாழும் உயிர் வாழ்க்கையானது, நீர்மையற்ற வல்லிய கற்பாறையின் மேல், வறண்டு வற்றிப்போன மரம் தளிர்க்க முயற்சிப்பதைப் போலாகும். மிகவும் கடினம் என்பது பொருள்.

அன்பு எனும் நீர்மை, ஈரம், தண்மை ஒருவருக்கு அகத்தே இல்லாது போனால் வாழ்க்கை வறட்டுத்தன்மை கொண்டதாகத் தானே இருக்க முடியும். அவர்களால் குளிர்ச்சியாகவோ, மலர்ச்சியாகவோ, இனிமையாகவோ, சகஜமாகவோ பழக இயலாமல் வறட்டுத் தனத்தையும், முறட்டுத் தனத்தையும், வன் கொடுமையையும், எரிச்சலையும், வாட்டத்தையும் மட்டுமே காட்ட இயலும்.

அவர்களின் வாழ்க்கை இனிமையுறும் வாய்ப்பு முற்றிலும் இற்றுப் போய்விடவில்லை என்பது ஓர் ஆறுதலான விடயம். அதாவது கற்பாறை போன்று இருக்கும் அகத்து உள்ளே, ஈரம் சுரக்கும் அன்பை விதைத்தால் காலங்களும் மாறும், காயங்களும் மாறும். அரக்க குணம் அற்றுப் போய் வறட்சி நீங்கி வளர்ச்சி தோன்றும். வாழ்க்கை மலர்ச்சி காணும்.

எனவே அன்புடைமை என்பது அகத்தே தண்மை உடைமை என்பதே என்று அறிவோமாக.


குறிப்புரை
:
அன்பிலா வாழ்க்கை வறட்சியால் வளர இயலாது தத்தளிக்கும்.


அருஞ்சொற் பொருள் :
வன்பாற் - வன்மையான பாறை, வல்லிய பாறை, வரண்ட பாறை நிலம், பாலைவனம்


ஒப்புரை :

திருமந்திரம்: 273
ஆர்வம் உடையவர் காண்பார் அரன்தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணையடி
பாரம் உடையவர் காண்பார் பவந்தன்னைக்
கோர நெறிகொடு கொங்குபுக் காரே.


திருமந்திரம்: 275
தானொரு காலம் சயம்பு என் றேத்தினும்
வானொரு காலம் வழித்துணை யாய்நிற்கும்
தேனொரு பால்திகழ் கொன்றை அணிசிவன்
தானொரு வண்ணம்என் அன்பில்நின் றானே.

ஔவையார். மூதுரை: 17
அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர் - அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.


ஔவையார். கொன்றைவேந்தன். 48
நல் இணக்கம் அல்லது அல்லற் படுத்தும்.


***

In English: (Thirukkural: 78)

anpu akaththu illA uyir vAzhkkai vanpARkaN
vaRRalmaram thaLirth thaRRu.

Meaning :
Living a life with no Love inside is like a withered tree trying to sprout on a rock.

Explanation :

The Life without Love inside is like a sapless tree attempting to sprout on a rock soil. It is very hard to succeed is thus the meaning.

Love, the wetness, the moisture, the calmness when not inside there for one, won’t it’s Life become dry and hard? They can’t be cool, happy and normal instead they become dry, withered, rough, and tough and show only irritation, sorrow and misery.

One consolable thing for them is that their Life is not completely lost the chance of getting happiness. By seeding the kind springing Love in their stone like hearts, the changes can occur to see changed time and to cure the wounds. The ill thinking gets eliminated, withering goes away and growth occurs. Life flourishes.

Therefore, Let us understand that possessing Love in the heart means containing the kindness there.


Message :
The Loveless life suffers the growth with dryness.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...