|
அத்தியாயத்தில் பெற்றவை | |
குறள் எண் Kural No. | குறள் குறிப்புரை (Kural Message) |
71 | அன்பு உள்ளம் துன்பத்தைச் சகியாது. Heart cannot restrain lover's distress. |
72 | அன்புடையோர் தம் என்பையும் பிறர்க்குத் தருவர். வழங்குதலே அன்பின் சிறப்பு. Loving offer even their bones to others. Giving is the specialty of Love. |
73 | உயிர்களுக்கு அன்புடைமை இயல்பானது; முதுகெலும்பைப் போன்றது. Love is a natural phenomena to the Livings; serves like bones. |
74 | அன்பு ஆர்வத்தையும் தொடர்ந்து ஆழ்ந்த நட்பையும் பெற்றுத் தரும். Love springs aspirations and that blossom surprising Friendships. |
75 | அன்பொடு திகழின் இன்புறும் வாழ்வு. Loving heart gets blissful life. |
76 | அன்பே நல்லவை, கெட்டவை அனைத்திற்கும் காரணம். Love is the cause for everything either good or bad. |
77 | அன்பற்றவர் வாழ்வில் காய்ந்து சுருங்கித் துன்புறுவர். The Loveless in life will wither, shrink and fade. |
78 | அன்பிலா வாழ்க்கை வறட்சி மிக்கது. The Loveless life suffers the growth with dryness. |
79 | அன்பிலாதவரின் வெளி அழகு பயனற்றது. The external beauty of the Loveless is absolute waste. |
80 | அன்பே உயிர். அஃதற்றோர் நடைப் பிணம். Love is Life; That with no Love is a living corpse. |
குறிப்புரை |
அன்பு பிறர் துன்பத்தைச் சகியாது; பிறருக்குத் தன் என்பையும் தரும்; உயிர்களுக்கு முதுகெலும்பைப் போன்றது; ஆர்வத்தையும், நட்பையும், இன்ப வாழ்வையும் பெற்றுத் தரும்; நல்லவை கெட்டவை அனைத்திற்கும் காரணமாகும். அன்பு இலாது போயின் வாழ்க்கை காய்ந்து துன்புறுத்தும்; வளர இயலாது வறண்டுவிடும், நற் காரியம் யாதும் செய்ய இயலாது/ அன்பே உயிர்; அஃதிலார் பிணங்களே. |
Message |
Love, cannot bear other's sufferings; can dedicate even self and bones to others; serves like the bones to living; generates aspirations, friends and happy life; is the root cause for all good and bad. Without love Life withers; suffers to grow; cannot do any good. Love is the Life; Corpse is thus without it. |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...