|
| |
பொழிப்புரை : | |
அன்பின் வழியானது உயிர் இருத்தலின் நிலை; எனவே அன்பு இல்லாதவற்கு, உயிரில்லாதே வெறும் எலும்பையும், சதையையும் தோல் கொண்டு போர்த்தியதாகும் உடம்பு. | |
விரிவுரை : | |
அன்பு வழிச் செயலே உடலில் உயிர் இருக்கும் நிலை காட்டுவது. எனவே அன்பிலாதவற்கு உடம்பு வெறும் எலும்புக் கூட்டையும், சதையும் போர்தியது மட்டுமே; அஃது உயிரற்றதாகவே கருதப்படும். எனவே அன்பற்றவர்களை என்பு தோல் போர்த்திய நடைப்பிணங்கள் என்கின்றார் வள்ளுவர். ஆம் அன்பற்றோர் வாழ்ந்தும் வாழாதவரே. அன்பற்ற வாழ்க்கைத் துணையை இறந்ததாகக் கருதப்பட வேண்டும் என்பதும் பொருள். பிணத்தை யாரும் தழுவுவதுமில்லை; பேணி இல்லறம் ஒழுகுவதுமில்லை. அன்பிலாது வாழுவதால் அவரால் யாருக்கும் பயனும் இல்லை, அவரால் நற் செயல் எதுவும் நிகழுவதுமில்லை, ஏன் அவரால் அவருக்கே உதவியும் இல்லை. அவர் வளர்வதுமில்லை, ஒளிர்வதுமில்லை, கவர்வதுமில்லை, இன்புறுவதுமில்லை. அவர் வாழ்க்கைக்கு அர்த்தமும் இல்லை. எனவே அவர் வாழ்ந்த போதிலும் உயிரற்ற நடைப் பிணம் போன்றவரே. ஆக அன்பு என்பதே உயிராயிற்று. முன்னர் சொல்லிய வண்ணம் அன்பும், உயிரும் சேர்ந்ததே ஒருவரின் ஆன்மா அல்லது மனம். எனவே மனம் அற்றோர் மரணித்தவரே. அன்பெனும் உயிரால் ஆக்கப்பட்டுள்ள இந்த மனித வாழ்வை, அன்பிலாது அன்றில் அன்பைத் தவிர்த்து அன்றில் அன்பை அகற்றி வாழுதல் இயற்கைக்கு முரணானது என்று அறிவோமாக. அன்போடு திகழ்ந்து மானுடத்தை உயர்த்துவோமாக. | |
குறிப்புரை : | |
அன்பே உயிர். அஃதற்றோர் நடைப் பிணம். | |
அருஞ்சொற் பொருள் : | |
உயிர்நிலை - உயிர் இருத்தலைக் காட்டும் நிலை. உயிர்துடிப்பு. என்பு - எலும்பு | |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 274 என்அன் புருக்கி இறைவனை ஏத்துமின் முன்அன் புருக்கி முதல்வனை நாடுமின் பின்அன் புருக்கிப் பெருந்தகை நந்தியும் தன்அன் பெனக்கே தலைநின்ற வாறே. திருமந்திரம்: 278 நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன் வைத்த பரிசு அறிந் தேயும் மனிதர்கள் இச்சையு ளேவைப்பர் எந்தை பிரானென்று நச்சியே அண்ணலை நாடுகி லாரே. திருமந்திரம்: 371 எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவ ராதி எலும்புங் கபாலமும் ஏந்தில நாகில் எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே ஔவையார். மூதுரை: 24 மாணிக்கவாசகர். திருவாசகம்: 5. திருச்சதகம். | |
*** |
In English: (Thirukkural: 80)
| |
| |
Meaning : | |
Love's way denotes the living's state; without it are those of bones skin-clad. | |
| |
Explanation : | |
The doings by Love’s way only reflect the state of Livelihood in one. Hence who don’t have that are those just bodies of bones skin-clad. Means no life considered in their body for the Loveless. | |
| |
Message : | |
Love is Life; That with no Love is a living corpse. | |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...