|
| |
| |
பொழிப்புரை : | |
தினை போலும் நல் உதவியைச் செயினும், பனை போலும் கொள்வர் [அதன்] பயனை அறிந்தவர். | |
| |
விரிவுரை : | |
செய்யப்பட்ட உதவி தினை அளவே போலும் இருப்பினும், அதன் பயனை உணர்ந்தவர் அதனைப் பனை அளவே போலும் கொள்ளுவர். எனவே அவ்வுதவியை அவ்விதமாகப் போற்றி நன்றி கடப்பாடுடையவராய்த் திகழ்வர் என்பது உட்பொருள். வெளிப்பார்வைக்கும், பயனுறாதாருக்கும் வேண்டுமானல் அவை சிறு உதவியாகத் தோன்றலாம். ஆயின் அவ்வுதவியின் பயனை உணர்ந்தவர், தெரிந்தவர் அஃது தினை அளவாயினும், பனை அளவாகவே போற்றுவர். விபரமறிந்தோர் அவ்விதம் கொள்வர்; சிறு மதியாளர், அறியாதோர் அதைச் சிறிதென விட்டுவிடுவர் என்பது ஈண்டு பெறத் தக்கது. உதவியின் பயனை உய்த்துணர்ந்து அதன் சிறப்பைப் பெரிதென மதித்தல், நன்றி மறவாதிருத்தல் பயன் தெரிந்தோர் கொள்ளவேண்டிய அறம். பயன் பெற்றோர் எவ்வித உதவியாகினும் அதைச் சிறிதெனச் சிறுமைப் படுத்தாது அதைப் பெரிதாகப் போற்றி மதித்தல் வேண்டும் என்பது உட்பொருள். | |
| |
குறிப்புரை : | |
உதவி சிறிதெனினும் அதை உணர்ந்தோர் மிகப் பெரிதென மதிப்பர். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
துணை - ஒத்திரு, போன்றிரு | |
| |
ஒப்புரை : | |
| |
ஔவையார். மூதுரை: பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல். 11 | |
| |
*** |
In English: (Thirukkural: 104. Realized help is great...)
| |
| |
Meaning : | |
Though the help rendered is as small as millet that who knows the benefit will consider it as huge as a palm-tree. | |
| |
Explanation : | |
Although the help rendered is as small as millet in size that who knows the benefit will deem it as huge as a palm-tree. | |
| |
Message : | |
Though the help is small, that who realizes shall regard it as big. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...