|
| |
பொழிப்புரை : | |
பணிவு உடையவனாகவும், இன் சொலனாகவும் ஆதலே ஒருவற்கு அழகு; மற்றையவை அல்ல. | |
| |
விரிவுரை : | |
பணிவு உடையவனாகவும், இன் சொலனாகவும் இருத்தலே ஒருவனிற்கு உண்மையான அழகு, மற்றைய வேறு ஏதும் அல்ல. பணிவு என்பது பண்பும், அன்பும் கலந்து பிறரை மதித்துத் தாழ்ந்து வணங்கும் மரியாதை செய்யும் குணம். அதாவது பிறரை மதித்து வணங்கி மரியாதை காட்டி மகிழும் அடக்கம் உடைமை. மரியாதைக்கு உரியோரைப் போற்றும் மனோ நிலை மற்றும் செய்கை. அடக்கம் என்பது தான் எனும் ஆணவம் அடங்கிய உயர்ந்த நிலை. எனவே பணிவு என்பது அன்பையும், பண்பையும், அடக்கத்தையும், நன் மதிப்பையும் கொண்ட உயரிய ஒழுங்கு. எனவே அத்தகைய உயரிய பணிவும், இனிய சொல்லைப் பேசும் பழக்கமும் ஒருவர் கொண்டிருத்தலே அது அவருக்கு அனைவரையும் வசீகரிக்கும் உண்மையான அழகாகும். ஏனையவை வேறு ஏதும் இவற்றின் முன் அழகல்ல. | |
| |
குறிப்புரை : | |
பணிவும், இன் சொல் பேசுதலுமே ஒருவருக்கு உண்மையான அழகு, மற்றவை அல்ல. | |
அருஞ்சொற் பொருள் : | |
அணி - அழகு, இலக்கணம், அலங்காரம் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமூலர். திருமந்திரம்: நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ் சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை இல்வழி யாளர் இமையவர் எண்டிசைப் பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே. 637 அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம் அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம் அமலம் சொல் ஆணவம் மாயை காமியம் அமலம் திருக்கூத்து ஆமிடம் தானே. 895 மாணிக்கவாசகர். திருவாசகம். 9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் : வாள்தடங்கண்மட மங்கைநல்லீர் வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோள்திரு முண்டந் துதைந்திலங்கச் சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202 ஔவையார். ஆத்திச்சூடி: நொய்ய உரையேல். 74 பழிப்பன பகரேல். 76 பிழைபடச் சொல்லேல். 78 ஔவையார். கொன்றைவேந்த்ன்: கீழோர் ஆயினும் தாழ உரை. 17 | |
| |
*** |
In English: (Thirukkural: 95)
| |
| |
Meaning : | |
Humbleness and pleasant speech are the real grace for one and not any other things. | |
| |
Explanation : | |
Humility and pleasant speech towards others are the true ornaments for one and not any other things. | |
| |
Message : | |
Humility and sweet words speaking are the true beauties for one and nothing else. | |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...