|
| |
பொழிப்புரை : | |
[நல்லன] அல்லாதவை தேய்ந்து மறைந்து அறம் எனும் நலம் பெருகும்; நல்லனவற்றை நாடி, இனிமை உடைய சொற்களைச் சொல்லின். | |
விரிவுரை : | |
பிறருக்கு நன்மை தருபவற்றை நாடித் தெளிந்து, இனிமை உடைய சொற்களை ஒருவர் சொல்லின் அவருக்கு நல்லன அல்லாதவை குறைந்து மறைய, அறமாகிய நல்வினைப் பயன் பெருகும். இது ஒரு உளவியல் தத்துவம். பிறரிடம் பேசும் போழ்து அவருக்கு நன்மைதரும் விபரத்தை அறிந்து, அதை இனிய சொற்களால் ஏதுவாக எடுத்து இயம்பின், ஒருவருக்கு அவரது காரியம் நல்ல விதத்தில் நடந்தேறும், நன்மைகள் நடக்கும். ஒருவரின் நோக்கமறிந்து அவருக்கு நன்மைதரும் விடயத்தை, அன்பொழுக இனிய சொற்களால் சொல்லின், அவர் அதற்கிணங்கி பதிலிற்கு நன்மைகள்தான் செய்வார். இதுவே இனிய சொல்லாலும், குறிப்பறிந்து நன்மையை விளம்பிப் பேசுவதாலும் ஏற்படும் இணக்கத்தின் பயன். இணக்கத்திற்கு இலக்கணம் ஒருவருக்கு நன்மை தருவதை இனிய சொல்லில் எடுத்து இயம்புவதே. இதுவே மனித வாழ்வியலில் தொடர்புகளுக்கும், உரையாடலுக்குமான அடிப்படைப் பாடம். இது அரசியல், வியாபாரம், அலுவலகம், இல்லறம், சமூகம், இவ்வளவு ஏன் ஒருவருக்கு ஒருவரின் அன்றாட உரையாடல்களிலும் பயன்படுத்த உதவும் உத்தி. இதை அறமாகவே பயன்படுத்தினால் நல்லவை அல்லாதவை அதாவது கெட்டவை முற்றிலும் அழிந்துவிடும். எங்கும் இணக்கமான சூழ்நிலைகள் உருவாகி எல்லாம் இன்ப மயமாகவும், நல்லவையாகவும் நிகழும். எனவே எப்போதும் நல்லவற்றைச் சிந்தித்து அவற்றை இனிமையுற எடுத்து இயம்புவது நல்லறத்தை வளர்க்க வழிவகுக்கும் எனபது திண்ணம். | |
குறிப்புரை : | |
பிறர்பால் நன்மை தரும் இனிய சொற்களைச் சொல்லின் ஒருவருக்கு நல் வினை பெருகும். | |
அருஞ்சொற் பொருள் : | |
தேய - தேய்ந்து மறைய | |
ஒப்புரை : | |
| |
திருமூலர். திருமந்திரம்: கர்ப்பத்துக் கேவல மாயாள் .(1).கிளைகூட்ட நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ் சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே. 460 .(1). கிளைக்கூட்ட பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும் பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும் பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும் பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே. 907 சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம் நல்ல மடவார் நயத்துட னேவரும் சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும் சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே. 908 மாணிக்கவாசகர். திருவாசகம். 22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் : சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட்குன்றே திருப்பெருந்துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் வந்துநின் இணையடி தந்தே. 396 ஔவையார். ஆத்திச்சூடி: மொழிவது அறமொழி. 96 ஔவையார். கொன்றைவேந்த்ன்: கூரம்ப்பாயினும் வீரியம் பேசேல். 19 | |
*** |
In English: (Thirukkural: 96)
| |
| |
Meaning : | |
Vice wanes and virtues grow when seek for the good and speak the sweet words. | |
| |
Explanation : | |
When one seeks the goodness for others and speaks of sweet words to them, his vice will vanish and good virtues will grow. | |
| |
Message : | |
Seeking goodness and speaking sweet words to others will grow good deeds for one. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...