|
| |
பொழிப்புரை : | |
இனிய சொற்களால் இனிமை பிறத்தலைக் காண்பவன், எதற்காகவோ, [துன்பம் தரும்] வன்மைச் சொல்லை வழங்குவது? | |
விரிவுரை : | |
இனிய சொற்களால் இன்பம் பிறத்தலைக் காண்பவர், [துன்பம் தரும்] கடும் சொற்களை வழங்குவது எதன் பாலோ? இனிய சொல் இன்பம் தருவதை அறிந்திருந்திருந்தும், துன்பம் தரும் கடும் சொற்களைப் பிரயோகிப்பது எதற்காக என்று சொல்லுங்களேன். எனவே இன்பம் தரும் இனிய சொல் மட்டும் போதாதா? போதும். கடும் சொற்களைப் பயன் படுத்தாது இருப்பீர்களாக என்பதை வினாவினால் கேட்டு, அறிவோடு இனிய சொல்லை மட்டும் பயன் படுத்துங்கள் என்கின்றார் வள்ளுவர். அறியாமல் வன் சொற்களைப் பயன் படுத்தின் கூட அறியாமையால் சொல்லப்பட்டது எனக் கொள்ளலாம், ஆனால் இனிய சொல் இன்பத்தையே தரும் என அறிந்திருந்தும் அதைப் பயன் படுத்தாது துன்பத்தைத் தரும் வன் சொல்லைப் பயன் படுத்துதல் அறிவுடையோர் செய்யும் செயல் அல்ல என்பது பொருள். இனிமையான பேச்சு என்பது நேர்மறையானது. அது உறவையும், நலனையும் நல்கும். அவை யாரையும் காயப் படுத்துவதில்லை. தீய சொற்கள் என்பது எதிர்மறையானது. அவற்றால் துன்பத்தையும், எதிர்ப்பையும், எதிர்களையும், கெடுதலையும் மட்டுமே சம்பாதிக்க முடியும். வள்ளுவர் அதிகாரம் 13.அடக்கம் உடைமை. திருக்குறள்: 129 : தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு. இதை இவ்வாறு சொல்லி இருக்கின்றார். இதுவரையில் நாம் பேசிய தீய சொற்கள் அறியாமையால் ஏற்பட்டவை என்று கொண்டு, இனிமேல் வாழ்வில் இனிமையானவற்றை மட்டுமே பேசுவோம் என உறுதி எடுத்துக் கடைப்பிடிக்க முன்வருவோமாக. பேசும் சொற்கள் நாம் பெற்றெடுப்பவையே. எனவே ஏன் கெட்டவற்றைப் பெற வேண்டும்? நாம் உதிர்க்காத சொற்களுக்கு நாம் அதிபதி. நாம் உதிர்த்த சொற்கள் நமக்கு அதிபதி. எனவே நல்ல சொற்கள் நம்மை ஆள, இனிமை நிறைக்க அவற்றை மட்டுமே பெற்றெடுப்போம். | |
குறிப்புரை : | |
இனிய சொல் இன்பமென அறிந்தும் துன்பம் தரும் கடும் சொல்லை பயன் படுத்துவோர் அறிவற்றோர். | |
அருஞ்சொற் பொருள் : | |
எவன்கொலோ - எதற்காகவோ, என்ன பயன் கருதியோ, எதன் மாட்டோ. | |
ஒப்புரை : | |
| |
திருமூலர். திருமந்திரம்: யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. 85 அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 1109 சொல்லஒண்ணாத அழற்பொதி மண்டலம் சொல்லஒண் னாத திகைத்தங்கு இருப்பர்கள் வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி மல்லஒண் ணாத மனோன்மணி தானே. 1164 பகையில்லை கௌமுத லயது வீறா நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு மிகையில்லை சொல்லிய பல்லுறு எல்லாம் வகையில்லை யாக வணங்கிடம் தானே. 1339 வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம் நலங்கிடும் காம வெகுளி மயக்கந் துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே. 1340 தானே கழறித் தணியவும் வல்லனாய்த் தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த் தானே தனிநடங் கண்டவள் தன்னையும் தானே வணங்கித் தலைவனும் ஆமே. 1341 மாணிக்கவாசகர். திருவாசகம். 36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு : செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும் அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே. 529 காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே. 530 ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன் வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான் பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே. 531 மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும் போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ் சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே. 532 அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே. 533 ஔவையார். ஆத்திச்சூடி: ஆறுவது சினம்.2 கடிவது மற. 32 | |
*** |
In English: (Thirukkural: 99)
| |
| |
Meaning : | |
Who sees sweet words yield happiness, why should utter harsh and unpleasant words? | |
| |
Explanation : | |
While one could see the happiness yielding through pleasant words, why would they speak harsh and unpleasant words? | |
| |
Message : | |
Knowing that kind words only yield happiness, hurting harsh words users shall be the fools. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...