|
| |
பொழிப்புரை : | |
சிறுமை உள்நோக்கம் அற்ற இனிய சொல், மறுபிறவியிலும், இப்பிறவியிலும் இன்பம் தரும். | |
| |
விரிவுரை : | |
துன்பம் தரும் இழிய கருத்துக்களை உள்நோக்கம் கொள்ளாத இனிய சொல், இகத்திலும், பரத்திலும் இன்பம் தரும். அதாவது ஒருவர் வஞ்சிப் புகழ்சி இல்லாது பேசும் இனிய சொல், அவர் வாழ்கின்ற போழ்தும், மறைந்த பின்னரும் இன்பத்தைத் தரும். ஒருவருக்கு மறைந்த பின்னரும் கிட்டும் இன்பம் என்பது மாறாத கீர்த்தி, புகழ் ஆகும். மேலும் கேட்பவருக்கும் சொல்லப்பட்ட இனிய சொற்கள் எக்காலத்திலும் நினைவில் நின்று இன்பம் தருவதாகும். எனவே ஒருவரைப் பழிக்காது மாறாக அவரின் நற்குணங்களைப் பாராட்டி இனிய மொழியில் பேசுதல் வேண்டும். பாராட்டுக்கள் உளப் பூர்வமாகவும், உண்மையாகவும் இருத்தல் அவசியம். பாராட்டுக்களை வழங்குவதில் வள்ளல்களாக நாம் இருந்தால், உண்டாகும் இன்பத்தின் பங்குதாரர்களாக என்றென்றும் இருப்போம். | |
| |
குறிப்புரை : | |
சிறுமைக் குணமற்ற இனிய சொல் எக்காலத்திலும் இன்பம் தரும். | |
அருஞ்சொற் பொருள் : | |
சிறுமை - துன்பம் தரும் இழி கருத்து, இழிச் சொல், கீழ்த்தரமானது, தாழ்ந்தது, அற்பம். மறுமை - மறுபிறவி, விண்ணுலக வாழ்வு இம்மை - இக வாழ்வு, இப்பிறவி வாழ்க்கை. | |
| |
ஒப்புரை : | |
| |
திருமூலர். திருமந்திரம்: அளவில் இளமையும் அந்தமும் ஈறும் அளவியல் காலமும் நாலும் உணால் தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல் அளவில் பெருமை அரியயற் காமே. 103 பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப் பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும் சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. 75 மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை கல்லியல் ஒப்fபது காணும் திருமேனி பல்லியல் ஆடையும் பன்மணி தானே. 1082 மாணிக்கவாசகர். திருவாசகம். 28. வாழாப்பத்து - முத்தி உபாயம் : பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 455 பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 456 பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. 457 ஔவையார். ஆத்திச்சூடி: வஞ்சகம் பேசேல். 27 ஔவையார். கொன்றைவேந்த்ன்: ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு. 12 ஔவையார். நல்வழி: 23 வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னார் மனை. | |
| |
*** |
In English: (Thirukkural: 98)
| |
| |
Meaning : | |
An un-mean spirited sweet word yields happiness to this life and the next. | |
| |
Explanation : | |
Mean free sweet words yield happiness to this life and then after. | |
| |
Message : | |
Mean free sweet words yield happiness ever. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...