|
| |||
பொழிப்புரை : | |||
[ஒருவர்] கொல்வதைப் போன்ற கெடுதலைச் செயினும், அவர் [முன்] செய்த ஒரு நன்மையை நினைக்க அக் கெடுதல் கெட்டு [நீங்கி]விடும். | |||
விரிவுரை : | |||
ஒருவர் கொல்வதைப் போலும் கெடுதலை, துன்பத்தைச் செய்தாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையினை நினைத்த மாத்திரத்தில் அக் கெடுதல் கெட்டு மறக்கப்பட்டுவிடும். ஆக ஒருவர் செய்த நன்மையை நினைக்கவே அவர் செய்த கொடுங் கெடுதல் தானாகவே மறக்கப்படும் திறம் கூறப்பட்டது. ஒன்றை நினைக்க நினைக்க மற்றவை தானகவே மறையும் என்பது இயற்கை எனினும், அதில் நல்லதை நினைக்க அல்லாதவை அது கொலை போன்ற கொடூர பாதகமாயினும் மறக்கும் தன்மையை நல்குவதை வள்ளுவர் உணர்த்துகின்றார். அதாவது ஒருவர் செய்த உதவியை மறவாது இருத்தலின் உச்சம், அவர் பிறகு செய்யும் கொலைபோன்ற பாதகத்தைக் கூடப் பொறுத்துக் கொள்ள வழிவகுக்குமாம். உண்மைதான், அன்பு இதயங்களுக்கும், நன்றி உள்ள மனங்களும் பிறர் செய்யும் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை அடைந்து விடுகின்றன. அவர் கொலையே செய்திருப்பினும் கூட ,அவர் செய்த முன் நன்மையால் அவரை மன்னிக்கும் மனதைத் தந்து விடுகின்றது. கொலையே அல்ல, கொலை போலும் துன்பம் என்பது ஒரு சிறு நுணுக்கம். அதாவது அத்தகைய கொடிய துன்பத்தையும் அலசி, ஆராய்ந்து சீர் தூக்கிப் பார்த்து மறக்கவும், மன்னிக்கவும் ஒரு மனம் வேண்டுமே அதை அவர் முன்னர் செய்த நன்மை வழங்கி விடுகின்றது. பாவம், நல்ல மனிதர் இவர் ஏன் இதைச் செய்தார் என்று எண்ணவும், அவர் அதைச் செய்ததற்கான நற் காரணத்தைக் கற்பிக்கவும், அவரது தீச்செய்கையை முழுவதுமாக மன்னிக்கவும், மறக்கவும் நன்றி உள்ள உள்ளம் செய்யும். இதையே கொடிது, கொடிது உயிர்க்கொலை கொடிது அதனினும் கொடிது செய்நன்றி மறத்தல் அதனினும் கொடிது செய்நன்றி கொல்லல் என்றும் சொல்லலாம். கொலை போலும் தவறுக்குத் தண்டனை என்ன என்பதையோ, நியாயப் படுத்தலோ இங்கே சொல்லப்படவில்லை. மாறாக அத்தகையக் கொடுமையையும் மன்னிக்கும் மனத்திற்கு அவர் முன் செய்த நன்மையை நினைக்க கெடுதலும் கெட்டொழிந்து அகன்று மறக்கப்படும் என்பதே வலியுறுத்தப் பட்டுள்ளது. இது உள நலன் காப்பீடு செய்ய உகந்த ஓர் அடிப்படை உத்தி. | |||
குறிப்புரை : | |||
நல்லதை நினைக்க அல்லாதது மறையும். | |||
அருஞ்சொற் பொருள் : | |||
உள்ள - இருக்க உள்ளு - நினைக்க | |||
ஒப்புரை : | |||
ஔவையார். மூதுரை: நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். 25 | |||
*** |
In English: (Thirukkural: 109. Remember the Good to forget the bad...)
| |
Meaning : | |
Though a deadly harm is induced by one, is dismissed just by the remembrance of his single goodness done prior. | |
Explanation : | |
Though one makes a deadly harm, is dismissed and forgotten simply by just remembering one of his goodness done earlier. | |
Message : | |
Remembrance of the good causes the bad to fade away. | |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...