|
| |||
| |||
பொழிப்புரை : | |||
[வேறு] எந்த நன்மையைக் கொன்றவருக்கும் உய்வு இருக்கலாம்; உய்வு இல்லை செய்த நன்றியைக் கொன்ற மனிதற்கு. | |||
| |||
விரிவுரை : | |||
வேறு எந்த நன்மையைக் கொன்றவருக்கும் உய்வு இருக்கக் கூடும்; ஆனால் செய்த நல் உதவியை மறந்து கொன்ற மாந்தருக்கு உய்வு இல்லை. கொலையோ அன்றில் வேறு நன்மையைச் சிதைப்பதோ போன்ற தீயவை கூட மன்னிக்கப்படலாம் அன்றில் பரிகாரம் செய்யப்படலாம். ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்து, தீங்கிழைப்போருக்கு வாழ்வில் முன்னேற்றம் என்பதோ, உயர்ச்சி என்பதோ கிடையவே கிடையாது. அவரது தீய எண்ணங்களும், செய்த தீமையும் அவரை இருக்கும் நிலையிலிருந்து தாழ்த்துமே தவிர உயர வழி தராது. நன்றியை மறக்கும்போதே ஒருவர் கீழ்மை அடைந்து விடுகின்றார். அதிலும் உதவியருக்குக் கெடுதல் செய்யும்போது எல்லா வழிகளையும் அடைத்துக் கொண்டு அடிமட்ட நிலைக்குச் சென்று விடுவார். ஒருவர் செய்த உதவியைப் போற்றி அவருக்கு பதில் நன்மை செய்தல் கடமை. அதை விடுத்து, அவர் செய்த நன்மையை, உதவியை மறந்து அவருக்குத் தீங்கிழைப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. எனவே செய்த உதவியைக் கொல்வதை, மறப்பதை, துறப்பதைப் போலும் பாவம் வேறு ஏதும் இல்லை. அவர் வாழ்வில் உயர்வு அடைய வழியே இல்லை. எனவே மனிதர்காள் !... மறந்தும் செய்த உதவியை எப்போதும் மறந்து விடாதீர்கள். காலா காலத்திற்கும் ஒருவர் செய்த உதவியை நன்றி உணர்வோடு மதித்துப் போற்றுதல் வேண்டும். முடிந்தால் அவருக்கு பிரதிபலனாய் நன்மை செய்தல் வேண்டுமே தவிர அவருக்கு எண்ணத்தால் கூட ஒருவர் தீங்கிழைத்தல் கூடாது. | |||
| |||
குறிப்புரை : | |||
செய்த உதவிக்கு நன்றி மறந்து கொல்பவருக்கு உய்வே இல்லை. | |||
| |||
அருஞ்சொற் பொருள் : | |||
நன்றி் - நல் உதவி, நன்மை உய்வு - உயிர் பிழைத்திருத்தல், நற்கதி, பரிகாரம் | |||
ஒப்புரை : | |||
| |||
ஔவையார். மூதுரை: சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். 30 | |||
| |||
*** |
In English: (Thirukkural: 110. Obliteration of no redemption...)
| |
| |
Meaning : | |
There may be salvation for those who killed any good; but not for those who killed the thanks for the good help received. | |
| |
Explanation : | |
There may be salvation for those who killed any other good; but not for those humans who killed the thanks for the good help received. | |
| |
Message : | |
That who kills the gratitude for the help received will never prosper. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...