கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. | |
|
| புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன. |
|
பொழிப்புரை : |
[பொருள்] கேடும் பெருக்கமும் [நியாயத்திற்கு] இடம் அல்ல; நெஞ்சத்தில் [நடுநிலைமை] தவறாமை சான்றோர்க்கு அணி. |
|
விரிவுரை : |
இலாப, நட்டத்திற்கு நியாயத்தில் இடம் கொடாது, நெஞ்சத்தில் நேர்மை வளையாது இருத்தலே சான்றோருக்கு அணி.
பொருளால் வரும் இலாப, நட்டங்கள் நீதியைப் பாதிக்கக் கூடாது. அதற்காக நியாயத்தை வளைத்தல் அறம் ஆகாது என்பது உட் பொருள்.
சான்றோர் எனப்படுபவர் ஒன்றைச் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டியிருப்பினும், தனக்கு வரும் பொருளின் இலாப, நட்டத்தை நெஞ்சிற் இடம் கொடாது, நேர்மை தவறாது செயல்பட வேண்டுமென்பது கருத்து.
காசுக்கும், பொருளுக்கும், இலாப, நட்டங்களுக்கும் நியாயமும், நேர்மையாளர்களும் விலை போகக் கூடாது. அவ்வாறு போயின் அஃது நியாயமே அல்ல. |
|
குறிப்புரை : |
தமது செல்வ அழிவும், பெருக்கமும் கருதாது, உள்ளத்தில் நடுநிலை தவறாமை இருத்தல் சான்றோருக்கு அணி. |
|
அருஞ்சொற் பொருள் : |
இல் - இடம், வீடு கோடாமை - சாயாமை, வளையாமை, தவறாமை, கொள்ளாமை |
|
ஒப்புரை : |
|
திருமந்திரம்: 268 கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன் நடுவல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான் இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம் படுவது செய்யின் பசுவது வாமே.
திருமந்திரம்: 944 ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள் மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.
திருமந்திரம்: 1457 நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித் தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச் சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக் குறியறி வாளர்க்குக் கூடலு மாமே.
ஔவையார். ஆத்திச்சூடி: 36. குணமது கைவிடேல். 59. தூக்கி வினைசெய். 105. வேண்டி வினைசெயேல்.
ஔவையார். கொன்றைவேந்தன்: 50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை 87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
ஔவையார். நல்வழி: வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து துஞ்சுவதே மாந்தர் தொழில். 5 |
|
*** |
உண்மை
ReplyDeleteஉங்களின் வருகைக்கும், கமெண்டிற்கும் நன்றி கவிக்கிழவன் அவர்களே.
ReplyDeleteஉண்மைகளைத் தொடருவோம்... மீண்டும் வருக...
It's gooooooooooooooooooooooooooood
ReplyDelete