|
| |
| |
பொழிப்புரை : | |
துறந்தவரினும் தூய்மை உடையவராவர் - அத்து மீறியவர் வாய் தீச் சொல்லைக் கவனத்தில் கொள்ளாது பொறுமையுடன் நிற்பவர். | |
| |
விரிவுரை : | |
அறங்களின் வரம்பு கடந்து நிற்பவரின் வாயில் பிறக்கும் தீய கடுஞ் சொல்லைக் கவனத்தில் கொள்ளாது பொறுமை காத்து நிற்பவர், துறந்தவர்களினும் தூய்மை மிக்கவராவர். எல்லையின்றி, அத்துகளை மீறிச் சொல்லப்படும் கொடும் சொற்களைப் பொறுத்துக் கொள்வது துறவு கொண்டவரின் தூய்மை நிலையைக் காட்டிலும் கடுமையானது. துறவு கொண்டவர் கோப, தாபங்களை விடுத்து இருப்பினும், வசவுகளைக் கேட்டுப் பொறுத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் இல்லாதவர். ஆனால் இல்லறத்தில் இருப்பவன் அத்தகைய தன்மையுடன் கோப, தாபமின்றி அறமற்றோர் சொல்லும் இன்னாச் சொல்லைப் பொறுத்துக் கொள்வது என்பது துறவறம் போலும் ஓர் உயர்ந்த நிலைப் பொறுமை என்பது உட் பொருள். ஆக இல்லறத்தானின் இன்னாச் சொல்லைப் பொறுக்கும் தன்மை, துறவறத்தினும் தூய்மையானது என்பது பொருள். ஏட்டிக்குப் போட்டியாய் இழி சொற்களைக் கோபத்தில் சிதற விடுவது பொறுமை இன்மை. அஃது மேன்மக்களின் செயலும் அல்ல. எனவே, அவ்வாறன்றிச் சீர் தூக்கிப் பார்த்து, இனியவை அற்ற சொற்களை உதாசீனம் செய்து, அவற்றைக் கவனத்தில் கொள்ளாது பொறுமையுடன் இருத்தல் என்பது மன வலிமையோடு செய்ய வேண்டிய நல் அறம். நல் மனிதர்கள் இழியவற்றைக் கேட்டுக் கொள்வதுமில்லை; கேட்டால் கவனத்தில் கொள்வதுமில்லை; கவனத்தில் கொண்டாலும் இனியவை அற்றவற்றைப் தங்கள் பதிலாய் உதிர்ப்பதுமில்லை. இதுவே இல் வாழ்வில் கடைப் பிடிக்கவேண்டிய பொறுமை எனும் உயரிய தூய்மை. சமயங்களில் மவுனம் கோபத்தைத் தவிர்க்க உதவும் நல் ஆயுதம். இன்னும் சிறந்த ஆயுதம் இன்னாச் சொல்லைக் கவனத்தில் கொள்ளாமை. அவ்வாறு தம் பால் வரும் சொற்களைக் கவனித்து இனியவை, இனியவை அற்றவை என்று பாகுபாடு கண்டு, இனியவை அல்லாதவற்றைத் தவிர்க்கப் பொறுமையும், கருணையும், அன்பும் தேவை. தீயினால் சுடுவதைக் காட்டிலும் கொடிய தீச் சொற்களால் சுடுபவரின் வார்த்தை வன்முறையை, வன் சொல்லை, வசவை, இழி சொல்லைப் பொருட்படுத்திக் கொண்டால் மனதில் காயத்தை, ஆறா வடுவைப் பெற்றுவிடுவோம். எனவே அதைப் புறந்தள்ளவும், அமைதி காக்கவும் செய்வதே தம்மை மட்டுமல்ல, எதிரியையும் காக்கும் நல்லறம். பதிலுக்கு பதில் வார்த்தை தடிப்பதால் வெற்றியோ, அமைதியோ விளையப் போவதில்லை. எனவே வார்த்தைச் சச்சரவுகளில் பொறுமையுடன் மவுனம் காப்பவரே தவமிருக்கும் துறவியினரைக் காட்டிலும் உலகின் பால் தூய்மையை நிலை நிறுத்தியவராகின்றார். விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போக மாட்டான் | |
| |
குறிப்புரை : | |
பிறர் கூறும் தீயவற்றைக் கவனத்தில் கொள்ளாது ஒதுக்கிப் பொறுமையுடன் வாழ்வதே மிகச் சிறந்த மனத் தூய்மை ஆகும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
இறந்தார் -அத்துமீறியவர், வரம்பு கடந்தவர், மரணமடைந்தவர் நோக்கு - பார், காண், கவனத்தில் கொள், எண்ணிப்பார், ஆராய், பேணு, பாதுகா, படி, ஒத்திரு, கருத்து, நோக்கிற்பவர் - நோக்கு இல் நிற்பவர். | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 447. ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதம் ஆதி படைத்தனன் ஆசில்பல் ஊழி ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை ஆதி படைத்தவை தாங்கிநின் றானே திருமந்திரம்: 527. முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம் விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் அளிந்தமுது ஊறிய ஆதிப் பிரானைத் தளிந்தவர்ககு அல்லது தாங்கஒண் ணாதே. திருமந்திரம்: 533. மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர் சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர் நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. திருமந்திரம்: 1595. பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 6 திருமந்திரம்: 1598. திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந் திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந் திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 9 திருமந்திரம்: 1599. மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் பால்வைத்த சென்னிப் படரொளி வானவன் தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10 திருமந்திரம்: 1611. மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும் மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண் மோனங்கை வந்தைந் கருமமும் முன்னுமே. 7 திருமந்திரம்: 1634 கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற் சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற் சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 2 திருமந்திரம்: 1635 விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார் விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 3 மாணிக்கவாசகர். திருவாசகம்: 4. ஆத்ம சுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்) அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப் பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. 36 அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம் களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும் உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் செய்ததும் இலை நெஞ்சே பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே. 39 ஔவையார். ஆத்திசூடி: 78. பிழைபடச் சொல்லேல். 89. மிகைபடச் சொல்லேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 80. மோனம் என்பது ஞான வரம்பு ஔவையார். நல்வழி: சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம் இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும். 15 கவியரசு கண்ணதாசன்: ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம். | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Those who disregard and bear with the transgressor's mouthed ill words are more pure than the ascetics. | |
| |
Explanation : | |
Those who stand patiently without attention on ill words flowing from the transgressor's mouth are purer than the ascetics. It is very tough to bear with non-virtuous, uncontrolled ill words uttered than the pureness attained by the ascetics. Though the ascetics are liberated from anger and love, they have little or no chance with regard to bearing with such non-virtuous ill words. But one who is on the domestic way of life controlling the emotions of love or hate and bearing with those transgressor's ill words is the forbearance state like renunciation is the implicit meaning here. Therefore the forbearance of the people in domestic order of life is purer than the ascetics purity is the meaning. Uttering and spreading ill words as retaliation in anger is impatience. That is also not the method of the wise. Therefore unlike that but by weighing the words and avoiding unpleasant words and not giving attention to those ill words and staying calm with patience is the virtuousness to be practiced with brave heart. Good people won't hear the ill ones; though heard they won't give attention to it; even if they gave attention they will not return as their reply. This is what the forbearance also known as the pureness of the life which needs to be practiced. At times silence is the good device that helps to overcome the angry. Still better one is not giving attention to the ill words. One requires patience, kindness and love to analyze the ill words spoken on self as pleasant or unpleasant and to avoid the latter. Worst than burning through fire when tongue burnt ill words are fired, for such verbal violence and harsh, evil and abuse of words if we heed we shall get injured in the heart and get incurable internal pain and gain ever un-healing scar. Therefore the best virtue is to reject it and to bear with it such that it saves not only the self but also the opponent. By retorting the abuses no victory or peace is going emerge. Therefore in the quarrel and strife those who maintain calm with forbearance are those who establish the purity and cleanliness to the world than by those of ascetics. That who forgives will not spoil. | |
| |
Message : | |
Disregarding with forbearance all the ill words uttered by others in Life is great purity of the mind. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...