Wednesday, December 9, 2009

அதிகாரம்:16. பொறையுடைமை - முடிவுரை

அதிகாரம்

: 16

பொறையுடைமை

முடிவுரை

Chapter : 16

Forbearance

Summary

அதிகாரத்தில் பெற்றவை

குறள் எண்

Kural No.

குறள் குறிப்புரை (Kural Message)

151 தம்மை இகழ்பவரைப் பொறுத்தல் தலையாய அறம்.

To bear the scornful men is the prime virtue.
152 அத்து மீறலைப் பொறுத்தல் எப்போதும் நன்று; அதனை மறத்தல் அதனினும் நன்று.

Forgiving trespasses is good always; Forgetting them is still better though.
153 அறிவிலார் செயலைப் பொறுத்தல் வலிமையுள்ளும் வலிமையாகும்.

Mightiest among the might is to bear with the ignorant's acts.

154 பொறுமை இழக்காத மாந்தரே நிறைவுறு மாந்தராய்த் திகழ முடியும்.

One who does not lose the patience only can stand as the person of integrity.
155 பொறுமையற்று இகழ்பவரை யாரும் விரும்புவதில்லை; பொறுமையுடன் திகழ்பவருடன் எல்லோரும் விரும்பிச் சேர்ந்து இன்புறுவதோடு மதித்துப் போற்றுவர்.

No one likes those who reproach with impatience; everyone likes the company with those who have patience and also esteem them high.
156 குற்றவாளியைப் பொறுத்து மன்னிக்கும் குணம் அழியாப் புகழைத் தரும்.

The trait of forbearance and forgiving the offender yield undying glory.
157 தனக்கு வரும் துன்பத்தைப் பழி தீர்க்காது, பொது நலன் கருதிப் பொறுத்துக் கொள்ளுவது என்றும் நலம் பயக்கும்.

Whatever the sufferings one gets, without revenging for it, showing forbearance for the public cause will certainly yield goodness always.
158 பொறுமை எனும் பண்பால் செருக்குள்ளவரை வெல்க.

By the virtue of Patience win those with hauteur.

159 பிறர் கூறும் தீயவற்றைக் கவனத்தில் கொள்ளாது ஒதுக்கிப் பொறுமையுடன் வாழ்வதே மிகச் சிறந்த மனத் தூய்மை ஆகும்.

Disregarding with forbearance all the ill words uttered by others in Life is great purity of the mind.
160 பசி பொறுத்து உண்ணாது இருக்கும் நோன்பினும் பிறர் கூறும் இன்னாச் சொல்லைப் பொறுத்தல் உயர்வான தவமாகும்.

Than the fasting by abstaining from food, the forbearing the ill words of others is greater penance.

குறிப்புரை

தம்மை இகழ்பவரையும், அத்துமீறித் துன்பம் இழைப்பவரையும், அறிவிலார் செயல்களையும் பொறுத்தல் நன்று. இன்னல்களையும், தூற்றலையும் அப்போதே மறத்தல் அதனினும் நன்று.

பொறுமை என்பதே உயரிய வலிமை. பொறுமை உடையவரே நிறைவுறு மாந்தர். அவரையே அனைவரும் விரும்பிச் சேருவர், பொறுமை அற்றவரை வெறுப்பர். பொறுமையுடன் குற்றவாளியை மன்னித்தல் அழியாப் புகழ் தரும். இன்னல்களுக்குப் பழி தீர்க்காது பொது நலன் கருதிப் பொறுத்துக் கொள்வது என்றும் நலம் தரும். செருக்குள்ளவரை அடக்க பொறுமையே நல் மருந்து. பிறர் கூறும் தீயவற்றை ஒதுக்கிப் பொறுத்துக் கொள்ளும் அறம் மிகவும் தூய்மையானது. அத்தகையப் பொறுமையே உயர்வான தவமாகும்.

Message

Bearing with scornful men, transgressors, ignorant acts is good. Forgiving and forgetting the ill words and ill doings are still better.

Forbearance is the mightiest strength. People with patience only are complete with full integrity. All will love to join only them; all hate reproaching impatient people. Forbearance with forgiving the offender yield undying glory. Forbearance is the good medicine to win the hauteur. The virtue of rejecting the ill words uttered by others is divine and pure. Such patience is considered as the high penance.

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...