|
| |
| |
பொழிப்புரை : | |
[நல்] அறத்தைக் கூறாது, [நல்லறம்] அல்லாததைச் செய்பவன் ஆயினும், ஒருவன், புறம் கூறாதவன் என்றால் [அஃது] இனியதாகும். | |
| |
விரிவுரை : | |
நல் அறத்தைப் பேசாது; நல்லறம் அற்றதைச் செய்பவனே ஆயினும் ஒருவன் புறம் கூறாதவன் என்றால் அஃது இனிமையை நல்கும். அதாவது புறம் கூறாமை என்பது நல்லறத்தைப் பேசாது இருத்தலைக் காட்டிலும் நல்லறத்தை ஒழுகாததைக் காட்டிலும் நல்லறம் அற்றதை செய்வதைக் காட்டிலும் உயர்வானது; சிறப்பானது என்பது பொருள். ஆக புறம் கூறுதல் என்பது தீயவற்றிலெல்லாம் தலையாயது என்பது உட்பொருள். அத்தகைய தீயதான புறங் கூறுதலால், புறங் கூறப்பட்டவரைக் காட்டிலும், அதைக் கேட்டு நம்புபவருக்கும், புறம் சொல்பவருக்குமே தீமை பெருகும். இட்டுக் கட்டிச் சொல்லப்படும் வஞ்சனைச் சொற்கள் சொல்பவருக்கே கெடுதலை விளைவிக்கும். கெடுவான் கேடு நினைப்பான். பொய் சொல்லுபவனே ஏமாறுவான். பழியை அநியாயமாகத் தோற்றுவிப்பவனே பிறகு இகழ்ச்சிக்கும் ஏளனத்திற்கும் ஆளாவான். குற்றமுள்ள நெஞ்சு குறு குறுத்து அமைதியை இழக்கும். வெற்றிக்கு மாறாகத் தோல்வியில் தள்ளப் படுவான். பிறன் பால் சொல்லப் படுகின்ற அவதூறுகளால் கேட்பவரை நம்பச் செய்தால் அவரால் பொதுத் தீங்கோ, அல்லது கேட்பவருக்கே தீங்கோ ஏற்படலாம் அல்லவா? அந்தப் பாவமும் புறம் சொல்லியவனையே சாரும். புளுகு மூட்டைகளை உற்பத்தி செய்து கொண்டு, புரட்டல்களையே செய்து கொண்டு, புறம் சொல்லித் திரிபவர், தீய அறங்களுள் எல்லாம் பெரிதான தீமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து திருந்தி இனிமேலும் அவ்வண்ணம் செய்யாதிருக்க முயற்சித்துத் திருந்தட்டும், தங்களின் பாவத்தைக் குறைத்துக் கொள்ளும் காரணத்திற்காகவாவது. | |
| |
குறிப்புரை : | |
நல்லறத்தை ஒழுகாது இருப்பினும் கூட புறம் சொல்லாமை எனும் ஒரே ஓர் ஒழுக்கம் இனிமையைக் கொடுக்கும். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
இனிது - இனியது, இனிமை அல்லது மகிழ்ச்சி தருவது | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 40 குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும் நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும் மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. திருமந்திரம்: 55 ஆறங்க மாய்வரும் மாமறை ஓதியைக் கூறங்க மாகக் குணம்பயில் வாரில்லை வேறங்க மாக விளைவுசெய்து அப்புறம் பேறங்க மாகப் பெருக்குகின் றாரே. திருமந்திரம்: 2513 கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக் கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சே அருந்தர அலைகடல் ஆறசென் றாலே. 2 திருமந்திரம்: 2514 கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனியும்ப ராமே. 3 மாணிக்க வாசகர். திருவாசகம். 1. சிவபுராணம்: நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 ஔவையார். ஆத்திசூடி: 7. எண்ணெழுத் திகழேல். 12. ஒளவியம் பேசேல். (பொறாமை, அழுக்காறு) ஔவையார். கொன்றை வேந்தன்: 12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு (பொறாமை) 14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை ஔவையார். நல்வழி: இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3 பட்டினத்தார். கோயில்திருஅகவல்: 3 ஆணவ மலத்துதித்து அளைந்ததில் உளைந்திடும் நிணவைப் புழுவென ந்நெளிந்திடு சிந்தையும்; படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும், தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும் கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சின ...15 இகலும், கொலையும், இழிப்புறு புன்மையும் பகையும், அச்சமும், துணிவும், பனிப்பும், முக்குண மடமையும், ஐம்பொறி முயக்கமும், இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை உயிர் எனும் குருகுவிட்டு ஓடும் குரம்பையை ...20 குதம்பைச் சித்தர்: கண்ணிகள்: வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச் சஞ்சலம் ஏதுக்கடி? குதம்பாய் சஞ்சலம் ஏதுக்கடி? 4 முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச் சத்தங்கள் ஏதுக்கடி? குதம்பாய் சத்தங்கள் ஏதுக்கடி? 10 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Though one not uttering the good virtue and doing only the non-virtuous deeds, but if keeps up non-slandering, that will yield him happiness. | |
| |
Explanation : | |
Though one never utters the good virtues and ever does only ill things, but when maintains the non-slandering as the virtue, that shall still provide him the happiness. | |
| |
Message : | |
Though not so virtuous on his deeds when one just maintains the non-slandering as the virtue that will yield him the happiness. | |
| |
*** |
அழகாக சொல்லி இருக்கீங்க ..
ReplyDeleteஇனி அடிகடி இந்த பக்கம் வருவேன்
உங்களின் கருத்துப் பதிவிற்கு நன்றிகள் நண்பர் மந்திரன் அவர்களே.
ReplyDeleteதாங்கள் சொல்லியது போலவே நன்றாக வாருங்கள். மிக்க மகிழ்ச்சி.