|
| |
| |
பொழிப்புரை : | |
அறத்தை அழித்து [அறம்] அல்லாதவற்றைச் செய்தலினும் தீதானதே [ஒருவன் பின்] புறத்தே அவனைப் பழித்து அழித்துப் பேசி [அவன் முன் புறத்தே] பொய்யாக இன்முகம் காட்டிச் சிரித்துப் பேசுதல். | |
| |
விரிவுரை : | |
நல்லறத்தைக் கெடுத்து நல்லவை அல்லாதவற்றைச் செய்தலினும் தீதானது ஒருவனின் பின் புறத்தே பழித்து அவனது நற் பெயரை அழித்துப் பேசிவிட்டு அவன் முன்புறத்தே பொய்யாக முகம் மலர்ந்து நகைத்துப் பேசுதல். நல்லறத்தை ஒழுகாது இருத்தலினும் தீங்கானது புறம் சொல்லுதல் என்பதை இக்குறள் மீண்டும் இங்கே வற்புறுத்துகின்றது. அதாவது நல்லறம் ஒழுகாது இருத்தலால் ஒருவனுக்குக் கிடைக்கும் தீங்கைக் காட்டிலும் புறம் சொல்லுவதால் கிட்டும் தீங்கானது அளவிடற்கரியது என்பது பொருள். ஒருவரைக் காணாத போழ்து அவரைப் பழித்து அவர்தம் நற்பெயரை அழித்துவிட்டு அவரைக் காணும்போது நகைத்துப் பேசும் நடிப்பு எப்படி என்றால் ஒருவரைக் கழுத்தறுத்துக் கொலை செய்து விட்டு அவருக்காகக் கண்ணீர் விட்டுக் கதறி அழும் வஞ்சகத்தைப் போன்றது. திசை திருப்புவதற்காக மற்றைய மதத்தின் அடையாளத்தைக் கையில் பச்சை குத்திக் கொண்டு ஒரு மகானைச் சுட்டுக் கொன்று விட்டு மக்களின் நலனிற்காகவே கொன்றேன் என்று வேதாந்தம் பேசும் குதர்க்கத்தைப் போன்றது. குறுக்கு வழிகளும், குதர்க்கங்களும், ஏமாற்றும் நடிப்புக்களும், அண்டப் புளுகுகளும், தீதைச் செய்து விட்டுப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற தீய எண்ணமும் செயலும் எக் காலத்திலும் நல்லறமற்ற குற்றங்களே. அணைகளையோ, பிறர் வணங்கும் பொதுச் சொத்துக்களையோ இடித்து விட்டு இப்போது என்ன செய்ய முடியும் என்று வேதாந்த, சித்தாந்தங்களைப் பேசும் போலிகளால் செய்யப் படும் நடிப்பும், புறப் பேச்சும் அவர்கள் அறத்தைப் பின் பற்றாமல் இருப்பதைக் காட்டிலும் கேவலமான, தீதான மன்னிக்கப் பட முடியாத குற்றங்களே. உண்மைக்குப் புறம்பானவற்றைச் செய்து விட்டு சம்பந்தப்பட்டவர் முன் மிக நல்ல நேர்மையாளரைப் போல் நடிப்பதும், புறம் பேசி மகிழும் கோழைத்தனமும், தமது வல்லமை என்று நினைத்துக் கொண்டு சூதையும், வாதையும் புரட்டுகின்ற வரம்பற்ற நாக்கும், அத்தகையோரின் அகமும், புறமும் தீதானதே. நல்லவர்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஒன்று மனச் சாட்சி, ஒன்று தெய்வத்தின் சாட்சி என்பார் கண்ணதாசன். மனச் சாட்சி இல்லாமையும், நல்லறத்தின் பால் நம்பிக்கை அற்ற அறிவீனமும், தீய எண்ணமுமே பொய் சத்தியங்களையும், உண்மைக்குப் புறம்பானவற்றைத் தூக்கிப் பிடிக்கும் நிலையையும், பொய் முகம் காட்டி பல் இளிக்கும் நிலையையும் ஏற்படுத்தும். பொய்யாலும், புரட்டாலும், ஏமாற்றும் நடிப்பாலும் வெகு காலத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாது. உண்மை எப்போதும் மாறாது இறுதியில் தானாகவே வெளி வந்து விடும். பல நாள் திருடன் நிச்சயமாக ஒருநாள் சிறையில் மாட்டிக் கொண்டு வாட நேரும். அப்போது அவர் முன் செய்த வஞ்சனைகளுக்குப் பெரிய தண்டனைகள் காத்திருக்கும். ஊராரும், உலகமும் அப்போது கை கொட்டிச் சிரிப்பது மட்டுமல்ல கல்லைக் கொண்டு எறியவும் செய்யலாம். காலம் அவர்களை மன்னிக்காது உயிரோடு எரிக்கவும் கூடச் செய்யலாம். எனவே பொய் முகம் காட்டிப் பல்லிளிக்கச் செய்கின்ற புறம் பேசும் வஞ்சகம் என்பது நல்லறத்தை ஒழுகாது செய்யும் தீய வினைகளைக் காட்டிலும் மிகவும் கொடிய தீதே. | |
| |
குறிப்புரை : | |
நல்லறத்தை ஒழுகாது செய்யும் தீய வினைகளிலும் கொடியது புறம் பேசிவிட்டு பொய் முகத்தோடு நகுதல். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
அழீஇ - அழி, அழித்து என்பதின் சொல்லிசையளபெடை. நகை - புன்னகை, சிரிப்பு | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 262 அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந் திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப் புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. திருமந்திரம்: 264 பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயார் கரகத்தால் நீராட்டிக் காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நல்நெஞ்சி னீரே. திருமந்திரம்: 2515 பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும் இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில் கணம்பதி னெட்டும் கழலடி காண வணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே. 4 திருமந்திரம்: 2516 என்னிலும் என்னுயி ராய இறைவனைப் பொன்னிலும் மாமணி யாய புனிதனை மின்னிய எவ்வுய ராய விகிர் தனை உன்னிலும் உன்னும் உறும்வகை யாலே. 5 மாணிக்க வாசகர். திருவாசகம். 8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்) : வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79 நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால் தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80 ஔவையார். ஆத்திசூடி: 14. கண்டொன்று சொல்லேல். 17. ஞயம்பட வுரை. ஔவையார். கொன்றை வேந்தன்: 17. கீழோர் ஆயினும் தாழ உரை 19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் பட்டினத்தார். திரு ஏகம்ப மாலை: 1 அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் இல்லம் துறந்தான்; அவனின் சதகோடி உள்ளத் துறவுடையோன்; மறம் தான் அறக்கற்று அறிவோ டிருந்துஇரு வாதனையற்று; இருந்தான் பெருமையை என் சொல்லுவேன்? கச்சி ஏகம்பனே! 1 பொல்லா தவன், நெறி நில்லா தவன், ஐம் புலன்கள்தமை வெல்லா தவன், கல்வி கல்லாத வன், மெய் யடியவர்பால் செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவிடிக்கன்பு இல்லாதவன், மண்ணில் ஏன் பிறந்தேன்? கச்சி ஏகம்பனே! 6 பாம்பாட்டிச் சித்தர்: அகப்பற்று நீக்கல்: மனமென்னும் குதிரையை வாகன மாக்கி மதியென்னும் கடிவாளம் வாயினில் பூட்டிச் சினமென்னும் சீனியின் மேற்சீராய் ஏறித் தெளிவிடம் சாரிவிட்டு ஆடு பாம்பே! .....78 ஆசையென்னுஞ் செருப்பின் மேல் அடியை வைத்தே ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே காசையெனுந் துர்க்குணத்திலே கனலைக் கொளுத்திக் காலாகாலங் கடந்தோம் என்று ஆடு பாம்பே! ........79 தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்; தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்; பின்னை யொரு கடவுளைப் பேண நினையார் பேரொளியைப் பேணுவார் என்று ஆடு பாம்பே! .....95 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Than the evils of that who destroys the good virtues and carries out only all the evil deeds, the bigger evil is slandering back at one and then pretending a false smile in front. | |
| |
Explanation : | |
Worst evil than that of destroying the good virtues and doing only the evil deeds is slandering one at his back and pretending a false smile talk at his front. | |
| |
Message : | |
Than the evil deeds of not following the good virtues, the worst evil is that of slander followed by pretentious behaviour with false smile. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...