|
| |
| |
பொழிப்புரை : | |
பிறன் பழியைப் புறம் கூறுகின்றவன், தன் பழிகள் அனைத்துள்ளும் அவற்றின் யோக்கியதை அறிந்து [மற்றோரால் புறங்] கூறப்படும். | |
| |
விரிவுரை : | |
பிறன் பழியைப் புறங் கூறித் திரிபவனிற்கு, அவன் தன் பழிகள் அனைத்துள்ளும் அவற்றின் யோக்கியதை வகை அறிந்து மற்றவர்களால் புறம் கூறப்படும். கெடுவான் கேடு நினைப்பான் தனக்கே வரும் பெரும் கேடு என்பது இதைத்தான். முறபகல் செயின் பிற்பகல் விளையும். அதாவது பிறரின் பழியை இகழ்ந்து, ஏளனப்படுத்திப் புறம் பேசித் திரிபவனை, அவனின் தவறுகளுள், பழிகளை ஆராய்ந்து அதில் கொடுமையானவற்றை, மிகவும் கேவலமானவற்றை மற்றையப் பிறரால் புறம் கூறப்பட்டு, எள்ளி நகையாடப் படுவான். அடுத்தவனிற்கு அவமானத்தை அள்ளி வழங்கும் சிறுமதியோர், அவர்தம் குற்றங்களாலேயே பிறரால் எள்ளி நகையாடப் பட்டு அவமானப் படுவர். தான் பிறருக்கு எதை வழங்குகின்றோமோ அதை உலகம் மறக்காமல் பன்மடங்கில் திருப்பிக் கொடுத்து விடும். எதை விதைக்கிறோமோ அதுவே விளையும். இதுவே இயற்கையின் சுழற்சித் தத்துவம். பிறரைச் சிறப்பித்தால், பாராட்டினால் நாமும் மற்றவர்களால் நன்றாகச் சிறப்பிக்கப் படுவோம், பாராட்டப் படுவோம். பிறரை ஏளனப் படுத்தித் தூற்றித் துன்புறுத்தின் அதைவிடப் பெரிய அவமானமும், துன்பமும் மற்றோரால் நமக்குக் காத்திருக்கும்; அஃது வெகுவிரைவில் தம்மைத் தாக்கும் என்பதைப் புறம் கூறுவோர் உணர்ந்து அப் பழக்கத்தை ஒழித்தல் வேண்டும். இதையேதான் நல்லதையே நினையுங்கள், நல்லதையே பேசுங்கள், யாரையும் அவமதிக்காதீர் என்ற நல் அறிவுரைகளாக, நல்லற வழிமுறைகளாகச் சொல்லுவதும் உண்டு. புறம் பேசுவோர் நாளை நமது குறைகளையும் மற்றோர் பேசுவாரே என்கின்ற உண்மை உறைத்தால் அவ்வாறு பேச விளையார் என்பதே இக்குறள் கூறும் கருத்து. தான் யோக்கியவானாக இருப்பவன் பிறர் மீது கல் எரியட்டும் என்று ஏசுபிரான் சொல்வதைப் போல், நம் குற்றத்தை நாமே அறியாது, நமது யோக்கியதை நாமே உணராது பிறரைப் பற்றிப் பேசுவதற்கு நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? | |
| |
குறிப்புரை : | |
மற்றோன் பழியைப் புறங்கூறுபவன் அவனது பழிகளின் யோக்கியத்தால் பிறரால் புறம் கூறப்படுவான். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
உள்ளும் - உள்ளும் புறமும், அனைத்தும் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 463 ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப் பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே திருமந்திரம்: 575 புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே திருமந்திரம்: 2520 ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன் பின்தான் அருள்செய்த பேரருள் ஆளவன் கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத போது புனைபுக ழானே. 9 மாணிக்க வாசகர். திருவாசகம். 8. திரு அம்மானை: (திருவண்ணாமலையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு ) பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176 ஔவையார். ஆத்திசூடி: 74. நொய்ய வுரையேல். 78. பிழைபடச் சொல்லேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை 56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் பட்டினத்தார். திருத் தில்லை: ஓடாமல் பாழுக்கு உழையாமல் ஓரம் உரைப்பவர்பால் கூடாமல் நல்லவர் கூட்டம் விடாமல்வெங் கோபம் நெஞ்சில் நாடாமல் நன்மை வழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று தேடாமல் செல்வம் தருவாய்! சிதம்பர தேசிகனே! 4 முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும் முடிவிலொரு பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு பின்னும் இந்த படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லால்பொன்னின் அம்பலவர் அடிசார்ந்து நாம் உய்ய வேண்டுமன்றே அறி வாரில்லையே! 7 ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றேடொன்றை மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி ஆட்டுவிப் பானும் ஒருவன் உண் டேதில்லை அம்பலத்தே 11 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
That who slanders others for their sins, will get slandered by another for his highest befitting sins. | |
| |
Explanation : | |
That who slanders on others for their sins, gets slandered by somebody else with his worst befitting sins. | |
| |
Message : | |
That who slanders another for his sins will get slandered by others for his sins in appropriations. | |
| |
*** |
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பர் புலவன் புலிகேசி அவர்களே.
ReplyDeleteஉங்களுக்கும் எனது இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
நன்றிகள் நண்பர் கோழிப்பையன் அவர்களே...
ReplyDeleteஉங்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நண்பர்கள், வாசகர்கள், வருகை புரிந்துள்ளோர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களது வாழ்வில் எல்லாம் நலன்களும் பொங்கிப் பெருகட்டும்.
பொங்க வாழ்த்து!
ReplyDelete(எந்த எழுத்தும் மிஸ்ஸாகல)
Super வால்பையன் அவர்களே, நன்றிகள் நன்றிகள்.
ReplyDeleteஉங்களுக்கும் எங்களோட நெஞ்சாரப் பொங்க வாழ்த்து!
பட்டி பளுகப் பளுக; பால் பானை பொங்கப் பொங்க
பொங்கலோ பொங்கல்; சங்கரன் பொங்கல்!!!