Thursday, January 14, 2010

திருக்குறள்:187 (புறங்கூறி நட்பைப் பிரிப்பர் திறமற்றோர்...)

அதிகாரம்

: 19

புறங்கூறாமை

திருக்குறள் : 187

புறங்கூறி நட்பைப் பிரிப்பர் திறமற்றோர்...

In English

பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - நகச் சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர்.

பொழிப்புரை :
பிளவுபடப் புறம் சொல்லி நண்பரைப் பிரிப்பர் - இனியவை சொல்லி நட்புத் துன்பமாகிய விரிசலைச் சரிசெய்து தேற்றாதவர்.

புதிய மாறுபட்ட கருத்துக்கள் இவ் விளக்கங்களில் உள்ளன.

விரிவுரை :
இனியவை சொல்லி நட்புத்துன்பமாகிய நட்பு விரிசலைச் சரிசெய்து தேற்றத் தெரியாத நம்பிக்கைத் திறமற்றவரே, நெஞ்சம் பிளவுபடப் புறம் சொல்லி நண்பரைப் பிரிப்பர்.

நட்பு என்பது மனித உறவுகளிலேயே நெடுங்காலம் வருகின்ற அன்னியோன்யமான ஆத்மார்த்தமான உறவு மற்றும் அன்பு உணர்வு. அத்தகைய நட்பும் எல்லாவிதமான மன உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டு, பதப்பட்டு, பண்பட்டுத் தெளிந்து அடிப்படை அன்பில் மாறாது வலுப்பட்டு நிற்கும். ஆதலின் அத்தகைய நட்பிலும் வாழ்வில் சில சமயங்களில் இடையில் நடைமுறை நிகழ்வுகளில் கருத்துணர்வுகளில் புரிதல்களில் வேறுபாடுகளும் விரிசல்களும் ஏற்படுவதும் மறைவதும் இயல்பான ஒன்று. அவ்விதமாக நட்பில் ஏற்படும் விரிசல்களை அல்லது சந்தேகங்களைத் தாமாகவோ அல்லது பொது நண்பர்கள் மூலமாகவோ தீர்த்துக் கொள்வதும் நடைமுறை வழக்கமே.

நம்பிக்கையில், புரிதல்களில் வேறுபட்டு நிற்கும் நட்பு இதயங்களை இணைத்தால் அங்கே இனிமை நிறையும். அன்றில் விளைவது பிரிவால், நினைவால், தொடரும் நிகழ்வுகளால் நெஞ்சைப் பிளக்கும் துன்பமே. எனவே அப்படி இணைக்கும் முயற்சியில் நடந்தவைகளுக்கு நகைச்சுவை ஒத்தடம் கொடுத்து, இனிமையான சொற்களைப் பேசி, தொய்ந்து கிடக்கும் இதயங்களை ஊக்கப் படுத்தி, புண்பட்ட மனதுகளை ஆற்றி, கருத்து மாற்றங்களைத் தெளிவித்துத் தேற்றி, விரிசல்களைக் களைந்து, நைந்து கிழிந்த இதயங்களை மீண்டும் தைத்துப் பிரிந்த நட்பை ஒன்று சேர்த்தல் மற்றும் இணக்கம் ஏற்படுத்துதல் என்பது நற் பண்பு. அஃது நட்பின் மாண்பை அறிந்த நல்லோர் மற்றும் நேர்மையானவர் செய்யும் அறச் செயல்.

அதை விடுத்து எரிகின்ற தீயில் எண்ணெய் விடுவது போலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலும் ஏற்கனவே புரிதல் குன்றி, பேதித்து நிற்கும் மனதினரை இல்லாததையும், பொல்லாததையும் புறம் கூறிப் பகை கொள்ளச் செய்து பிரித்தல் என்பது நட்பின் மேன்மை விளங்காதவர், தேற்றும் நேர்மைத் திறம் அற்றவர், தீய எண்ணம் கொண்டோர் செய்யும் தீவினை ஆகும். நல்ல நட்பைக் கெடுத்தலும் பிரித்தலும் அறமற்றோர் செய்யும் துரோகமே.

பிரிந்து கிடக்கும் இதயங்களை ஒற்றுமைப் படுத்தினால் உலகம் எவ்வளவு இனிமையானதாக இருக்கும். எவ்வளவு நன்மைகள் கிட்டும். அதை விடுத்துப் பிரிவினை வளர்த்து அதில் இலாபம் காண்பது சிறுமதியினரின், உயர்ந்த நோக்கம் அற்றோரின், தீய நோக்கம் கொண்டோரின் தீய செயல் ஆகும். அஃது தீயவற்றுள் எல்லாம் தலையானதும் ஆகும்.

ஆதலின் தங்களது உரைகளால் ஒற்றுமையை, இணக்கத்தை, நட்பை வளர்த்தல் மேலோர் செயல். தமது உரைகளால் பிரிவை, பிளவை, பகையை வளர்த்தல் கீழோர் செயல்.

மொழிவது அற மொழி.

சாலையில் மூலையில் சந்தையில் சந்திப்பில்
ஆலய வாயிலில் அழகுபொன் மண்டபத்தில்
மேடையில் வீதியில் புழக்கடை வாசலில்
தேனீர்க் கடையில் தெருவோரம் முக்கில்
கல்லூரிப் பள்ளியில் காதலில் அலுவலில்
கரம்சிரம் புறம்நீட்டாப் பயணத்தில் ஓட்டத்தில்

கட்டிலில் முட்டத்தில் கண்துயிலும் பஞ்சணையில்
உண்ணும் கூடத்தில் உலவவரும் பூங்காவில்
வண்ணத்திரை அரங்கில் வாய்க்கும் இடைவெளியில்
தண்ணீர்ப் பிடிப்பில் நீச்சலில் குளக்கரையில்
நண்பர்தம் கூட்டத்தில் மணல்வெளியில் மாடத்தில்
நட்ட நடுவீட்டில் முன்னறையில் சாளரத்தில்

நாளெலாம் பேசுகிறார் நாவிருக்கும் மனிதர்கள்
வாய் ஓயாமல் வார்த்தை தேயாமல்
முக்காலம் முழுவதையும் எக்காலமும் தொடர்ந்து
சலியாது வலியாது சக்தியும் குறையாது
சகலமும் பேசிவிட; இன்றுகைத் தொலைபேசியும்...
என்னதான் கதைப்பீர்கள்? எங்கேயும் எப்போதும்?

அன்பின் பகிர்தலா? மனிதம் வளரட்டும்...
ஆசைக் காதலா? கவிதை மலரட்டும்...
மனையவர் கெஞ்சலா? உறவு சிறக்கட்டும்...
மழலைக் கொஞ்சலா? மகிழ்ச்சி நிறைக்கட்டும்...
உறவா? பந்தமா? பாசம் நிலைக்கட்டும்...
உற்றார் சொந்தமா? அமைதி நிலவட்டும்...

ஆசை வினவலா? நேசம் பொங்கட்டும்...
அறிவுத் தேடலா? ஞானம் தளைக்கட்டும்...
வாழ்த்தும் நெஞ்சமா? வளமே தங்கட்டும்...
வாஞ்சைக் கூற்றா? பணிவு இனிக்கட்டும்...
இனிய சொல்லா? இன்பம் பெருகட்டும்...
இசையின் பொழிவா? இதயம் உருகட்டும்...

நட்பில் உரசலா? நம்பிக்கை விரிசலா?
நாளெலாம் பேசட்டும்; சந்தேகம் ஒழியட்டும்...
பிரிவா? விரகமா? துக்கமா? துயரமா?
ஆறுதல் மொழியில் அணையட்டும்; தெளியட்டும்...
வம்பா வாதமா? வற்றாத கோபமா?
வளரட்டும்: நாட்டில் தொலைபேசி நிறுவனம்!

புறமே சொல்லும் போக்கிரிப் பேச்சா?
புத்தியில் வழுவும் புறமொரு பேச்சா?
அகத்தின் புறமா? அறமிலாப் புறமா?
அண்டை அயலார் அழுக்குப் புறமா?
பிளவினைக் வளர்க்கப் பேசும் புறமா?
பழியினைப் பெருக்கும் பாழும் புறமா?

தூயோர் சொல்லும் அறத்தை மறுத்து
துன்பம் கொடுக்கும் புறத்தை நிறுத்து!
நேரில் புறத்தில் நேர்மையை வைத்து
தூய்மை கெடுக்கும் தூற்றலை நிறுத்து!
பொய்மை பெருக்கும் கயமை அறுத்து
அகத்தில் உளத்தில் அன்பை நிறுத்து!

புறத்தில் என்றும் புகழைப் பேசு..
புன்னகை இனிமை தவழப் பேசு...
அழகைப் பேசு; ஆய்வைப் பேசு...
ஆக்கம் தருகிற ஊக்கம் பேசு...
உண்மை பேசு; உயர்வைப் பேசு
உள்ளும் வெளியும் ஒன்றே பேசு...

அனுபவ மொழியின் அறிவைப் பேசு...
அறநெறி தருகிற மாண்பைப் பேசு...
ஆன்மீகம் காட்டும் மேன்மையைப் பேசு...
அகிலம் போற்றும் நன்மையைப் பேசு...
உயரும் வழிகளை உணர்ந்து பேசு...
உதவிடும் மனிதரின் பண்பினைப் பேசு...

சண்டை நிந்தை சஞ்சலம் இல்லா
வஞ்சனை அற்ற சொல்லினைப் பேசு...
வறுமை குறைகள் வாட்டம் இல்லா
வாதுகள் அற்ற மொழியினைப் பேசு...
பொய்யும் பயமும் பூசலும் இல்லா
நச்சிலாச் சொல்லை நயம்படப் பேசு...

மாதொரு பாகம் ஆகிய இறையோன்
உண்ணவும் இலாது உமிழவும் இலாது
நஞ்சினைத் தொண்டையில் தேக்கிய காரணம்
நச்சுச் சொல்லை வாயால் என்றும்
துப்புதல் தவறு; தொடருதல் தவறு;
ஆதலின் அடக்கம் அமரருள் உய்க்கும்!

ஆதலின் மனதே! நாளும் பொழுதும்
நல்லதைப் பேசு; நல்லதே பேசு!

***


குறிப்புரை :
இணக்கமாக இனிய நட்பைத் தேற்றத் தெரியாதவரே புறங்கூறிப் பகை செய்து நட்பைப் பிரிப்பர்.

அருஞ்சொற் பொருள் :
பகு - பிளவுபடு, மாறுபடு, பிரி, பங்கிடு, பிள, வேரறு, பிடுங்கு, வகு, வகைப்படுத்து, கழி, பிரிவினை செய்,
கேளிர் - நண்பர்
ஆடல் - துன்பம், விளையாட்டு, நடனம், கூத்து, நாட்டியம்.
தேற்று - ஆற்று, ஆறுதல் கூறு, தெளிவி, தெளிவுண்டாக்கு, உடலைப் பேணு, ஊட்டமளி, ஊக்கமளி, வலுப்படுத்து, மேம்பாடு அடை, நலப்படுத்து, உறுதிப்படுத்து

ஒப்புரை :

திருமந்திரம்: 586
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே

திருமந்திரம்: 693
பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்
பாரொளி யாகப் பதைப்புறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே

திருமந்திரம்: 1767
ஆதி பரந்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மலர் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

திருமந்திரம்: 2521
போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடி
ஏற்றியே தென்றும் எறிமணி தான்அகக்
காற்றின் விளக்கது காயம் மயக்குறும்
அற்றலும் கேட்டது மன்றுகண் டேனே. 10

மாணிக்க வாசகர். திருவாசகம்.:
8. திரு அம்மானை
(திருவண்ணாமலையில் அருளியது -
தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு )

வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த
வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178

ஔவையார். ஆத்திசூடி:
80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.
89. மிகைபடச் சொல்லேல்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்

பட்டினத்தார். கைலாயம்: 3
சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று
நினைந்ததும் அற்று, நினையா மையுமற்று, நிர்சிந்தனாய்த்
தனந்தனி யேயிருந்து ஆனந்த நித்திரை தங்குகின்ற
அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே! கயிலாயத்தனே!

பட்டினத்தார். பொது:
கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச், செவியொன்று கேட்க, விரும்பும்யான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்வாய்? வினை தீர்த்தவனே! 4

சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலும் மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
கல்லிலும் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே? 6

***

In English:

Chapter : 19

Non-Slandering

Thirukkural : 187

Diffident split the friendship by slandering...




In Tamil

pakach chollik kELirp pirippar - nakach cholli
natpu Adal thERRAthavar.

Meaning :
Only those diffident who know not to resolve the rift in a friendship through pleasant talk will slander against and split the friends.

These explanations contain newer and exclusive messages.

Explanation :
Those who are diffident and incompetent to resolve the rift in the friendship amiably through pleasant words only slander against the friends to severe the hearts and get split.

Friendship is one of the human relationships which lasts long with greater soul intimacy and companionship with sense of love. Such friendship also passes through all emotional syndromes, calming, refining, cleansing and finally emerging as the strong bondage of love in fundamentals. Therefore even in such friendship, in life at times, in between, in trivial day-to-day incidents, in understandings, in views and opinions, it is natural that differences occurs and fades. It is also natural thing that such rifts, doubts and differences occurred in friendship gets cleared either by themselves or through common friends.

Resolving such broken rifted hearts for their differences of understanding, confidence, faith and concepts, will bring back and fill only the pleasant joy. Otherwise only afflictions grow due to heart breaking split, brooding and continuing misconceptions, misunderstandings and lack of confidence. Therefore in such attempt to patch up and resolve, it is good practice to convert the past sober into a good humor, speak pleasant words jovially, energizing the dispirited hearts, healing the hearts of hurt, clearing the misconception and consoling and removing the differences and indifference, stitching together the torn and worn-out hearts and bringing together the rifted friendship to merge and unite again. It is the good virtuous deed exercised by the righteous and wise who know the greatness of friendship.

Instead of that, like rubbing on the wound and pouring oil on the already burning fire, slandering and aggravating on those already in rift with lies and rumors and creating enmity and split is only nothing but the worst deed. It is done by those who do not know the greatness of friendship, dissidents with no morality, incompetent resolvers and those non-virtuous with only bad intentions. Spoiling and splitting the friendship are also nothing but betrayals done by the non-virtuous.

How pleasant it would be in this world if we bring in union of those split hearts resolving all their differences. How many good things will happen? Instead of that growing the differences and dissidents are only the evil deeds. It is made only by the narrow-mindedness, by those who do not have greater visions or ambitions but only
have bad intentions. Such evil deed is the primary evil and worst than all the evil deeds put together.

Therefore, by their speeches that bring cooperation, amiability, togetherness and friendship are the deeds of wise and noble. By their talks that which creates split, rift and growing enmity are the deeds of the low and non-virtuous.

Speak the virtuous speech.

In the street, corner, market or junction
In the temple entrance or the grandeur golden hall
In the stage, the lane or the backyard door
In the tea stall, the road side or the terminus
In the class room of college, in love or in office
In the journey of no hand or head sticking out, or in the running

In the cot or in the slope or in the sleeping spongy bed
In the dining hall or in the strolling park
In the multiplex theatre or in the interval
In the water tank, in swimming, or at the pool side
In the friends meeting, in beach sand or in the upstairs
In the living room, in the visitors lounge or in the window

Day fully talking are those people of tongue
Mouth non stopping and the words not fading
Covering all three tenses, continuing all the time
No wearying, paining and never tiring
Speaking everything; now additionally the mobile phone too...
What would you speak? Everywhere and anywhere?

Is exchange of Love? Let humanity grow...
Is excellence of love? Let poems flow…
Is pleading from home? Let relations shine...
Is childish prattle? Get filled with joy...
Is relative or bond? Let affection remain...
Is the closest or relation? Let peace remain...

Is affectionate enquiry? Let love flourish...
Is search of knowledge? Let wisdom grow...
Is wishing heart? Let prosperity stay on...
Is fondness of elders? Let respect and bow...
Is pleasant word? Let happiness grow...
Is musical flow? Let heart melt...

Is rupture in friendship? Rift in faith?
Let speak the day full; Let suspicion go away...
Is separation? Parting? Is Distress or Affliction?
Let solace comfort and clear it away...
Is falsity or argument? Un-subsiding anger?
Let it grow: the telephone company of the country!

Is the speech of malicious slandering?
Is the speech of mind neglecting slandering?
Is the slander of inner? Or Non-virtuous slander?
Is the slander of darkness on neighbor and distant?
Is the slander to grow the rift?
Is the slander to multiply the sins?

Stop the afflicting slandering
That which denies the good virtues!
Stop the clean spoiling slander
By keeping righteousness the underneath!
Uphold the love inside the heart
Destroying the meanness and lies!

Speak the glory in public...
Speak the pleasant in smile...
Speak the beauty, speak the research...
Speak the positive and encouraging
Speak the truth and speak the eminence...
Speak the same in inner and out...

Speak the language of experience...
Speak the dignity of good virtues...
Speak the greatness of spirituality...
Speak the goodness praised by the world....
Speak the comprehended ways to grow...
Speak the courtesy of the helping people...

With no quarrel, abuse and worry
Speak the words of no cunning...
With no poverty, grievance and sadness
Speak the words of no polemic...
With no lies, fear and cover up
Speak the pleasant the no poison words...

The God that made of half feminine
With no intake or out throw
Reason for retaining the poison in the throat is
Poisonous words utter never by the mouth
Spitting or continuing is offense
Hence self-control redeems the heaven.

Therefore heart! Day and night
Speak the good; speak only the good!

***


Message :
Those diffident who know not to make the pleasant friendship amiably only will slander to create enmity and split the friendship.

***

2 comments:

  1. நல்லாச் சொன்னீங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் நண்பர் அண்ணாமலையான் அவர்களே.

    தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...