|
| |
| |
பொழிப்புரை : | |
மற்றையோர் குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தைக் காணத்தெரிந்த பிறகு, தீது தான் உண்டோ, உயர்வுடைய உயிருக்கு? | |
| |
விரிவுரை : | |
பிறர் குற்றம் காண்பதே போல் தம் குற்றம் காண்பவர் என்ற பிறகு தீதுதான் ஏதுமுண்டோ அத்தகைய உயர்வுறும் உன்னத உயிருக்கு? மனிதர்களின் பெரும் பிரச்சினையே அடுத்தவரின் குற்றத்தைப் பேசுவதுதான். அவர்கள் மாத்திரம் ஒவ்வொருவரும் தங்களது சொந்தக் குறைகளைக் காணத் தெளிந்து விட்டால், வேறு தீது என்பதுதான் உயிர்களுக்கு உண்டோ? இல்லை என்பதே இக்குறளின் கருத்து. தத்தமது குறைகளைக் காணத் தெரிந்த பிறகு மனிதர்கள் அவற்றைக் களைவதில் தான் கவனம் செலுத்துவார்கள். பிறர் குற்றம் காண அவகாசமும், வாய்ப்பும் இல்லாது போகும் என்பது ஒரு புறம் இருக்க, தமது குற்றங்களே இவ்வளவு இருக்கும் போழ்து பிறரைப் பற்றிக் கவலையோ, பிறரின் குறை பற்றிப் புறமோ எதற்குப் பேச வேண்டும் எனும் அறிவை அடைந்து நல் வழி நடப்பார்கள். தன்னை அறிந்து ஒழுகுவது என்பதும், ஆத்ம சுய பரிசோதனை செய்து கொள்வது என்பதும் இதைத்தான். ஒவ்வொருவரும் பிறரைப் பற்றிப் புறம் கூறுவதற்கு முன்பு, தான் குற்றமற்றவனா என்று ஒரு வினாடி சுய கேள்வி கேட்டுத் தெளிந்தால் கூட அப்பாவச் செயலை விட்டு விலக எண்ணம் வந்து விடும். பிறர் முதுகைக் காண்பது எளிது; தன் முதுகைக் காண்பது அரிது. எனவே எளிதென்று பிறன் முதுகின் பிறகு புறம் பேசினால், நமது முதுகின் பின்னர் பிறரும் பேசத்தானே செய்வார்கள்? தூற்றல்களைப் பேசுவதாலும் கேட்பதாலும் துன்பம் தானே மிகும்? எனவே நமது குற்றத்தை நாம் அறிந்து திருந்த முயல்வதே நமக்கும், பிறருக்கும், ஏன் உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் நல்லது. | |
| |
குறிப்புரை : | |
பிறரின் குற்றம்போல் தம் குற்றம் அறியும் உயர்வுடைய உயிர்களுக்குத் தீங்கே இராது. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
ஏதிலார் - பிறர், அன்னியர், அயலார், பகைவர், பரத்தையர் மன்னும் - பேரளவில், பெரும்பான்மையாக, அதிக அளவில், பெருமளவில், மண்டி மன் - உயர்வு, பெருமை | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 1549 வழிசென்ற மாதவம் வைகின்ற போது பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே வழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட் டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே. திருமந்திரம்: 1560 சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற் பவனவன் வைத்த பழிவழி நாடி இவனவன் என்ப தறியவல் லார்கட் கவனவ னங்குள தாங்கட னாமே. திருமந்திரம்: 2525 பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட் டிதமுற்ற பாச இருளைத் துரந்து மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே. 14 திருமந்திரம்: 2526 சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன் சுத்தாசுக் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே. 15 மாணிக்க வாசகர். திருவாசகம். 6. நீத்தல் விண்ணப்பம்: (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயினொப்பாய் விழைதரு வேனை விடுதிகண்டாய் விடின் வேலைநஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய்மதியன் பழைதரு மாபரனேன்றென் றறைவன் பழிப்பினையே. 150 பழிப்பில்நின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண்டாய் வெண்மணிப்பணிலம் கொழித்துமந்தார மந்தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர் தரு தாரவனே. 151 ஔவையார். ஆத்திசூடி: 104. வெட்டெனப் பேசேல். 108. ஓரஞ் சொல்லேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் 80. மோனம் என்பது ஞான வரம்பு பட்டினத்தார். பொது: அஞ்சக் கரமெனுங் கோடாலி கொண்டிருந்த ஐம்புலனாம் வஞ்சப் புலக்கட்டை வேர் அறவெட்டி வளங்கள் செய்து விஞ்சத் திருத்திச் சதாசிவம் என்கின்ற வித்தையிட்டுப் புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே! 46 ஆங்காரப் பொக்கிசம்; கோபக் களஞ்சியம்; ஆணவத்தால் நீங்கா அரண்மனை; பொய்வைத்த கூடம்; விண் நீடிவளர் தேங்கார் பெருமதில் காமவிலாசம் இத்தேகம் கந்தல்; பாங்காய் உனைப்பணிந்து எப்படி ஞானம் பலிப்பதுவே! 55 ஆவி யொடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவி யென்று நாமம் படையாதே! மேவியசீர் வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே! செத்தாரைப் போலே திரி. 7 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Will there be any afflictions to those noble souls that which can scan the defects of the self similar to the finding of faults with others? | |
| |
Explanation : | |
Similar to finding faults with others for those noble souls which detect their own defects, will there be any afflictions there after? | |
| |
Message : | |
Like finding faults with others the noble souls which can detect their own defects will never get agonies. | |
| |
*** |
தம் குற்றம்
ReplyDeleteஅறிவோருக்குத்
தீங்கில்லை
என்றேன்...
நான் தான் ‘தம்’
அடிப்பதில்லையே
என்றான்
நண்பன்
என் செய்வேன்
பராபரமே!