|
| |
| |
பொழிப்புரை : | |
[தம்] அறம் கருதிப் பொறுக்கும் போலும் வையம்; புறம் பார்த்துப் பழிச்சொல்லை உரைப்பவனின் பாரத்தை. | |
| |
விரிவுரை : | |
ஒருவரின் புறம் பார்த்துப் பழிச்சொல்லை உரைப்பவனின் பாரத்தை, தம் அறம் கருதிப் பொறுக்கிறது போலும் வையம். அறம் காப்பது தன் கடனே என்றுதான் பூமி புறம் சொல்லுபவரையும் தாங்கி நிற்கிறது போலும். வேறென்ன? அன்றில் கண்டிப்பாக அவரைத் தண்டித்திருக்க மாட்டாதோ? என்பது இங்கே ஆதங்கம் மற்றும் கூறாப் பொருள். தன்னை அகழ்வாரைத் தாங்கும் நிலம், பிறரைப் பழிபேசும் இழிவானவரையும் தனது அறம் தவறாக் கொள்கையினால்தான் தாங்கி நிற்கிறது. இல்லை என்றால் புறங்கூறும் வஞ்சக மனத்தினர் இந்தப் பூமியில் வாழ்ந்து விடத்தான் முடியுமா? ஆதலின் புறங்கூறும் பழக்கம் உடையவர்களே, அப்பழக்கத்தை விடுத்து, பூமிக்குத் தாய்க்குத் தேவையற்ற பாரமாக இல்லாது நல்லறத்தின் பக்கம் சார்ந்து நில்லுங்கள் என்பது உட்பொருள். | |
| |
குறிப்புரை : | |
பழிச்சொல்லைப் புறங்கூறுபவனையும் பொறுத்துச் சுமக்கின்றதே பூமி, தன் அறத்தைக் காப்பதற்காகவோ? | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
புன்சொல் - பழிச்சொல், அவதூறு, பொல்லாங்கு பொறை - பொறுமை, சகிப்பு, அமைதி, அடக்கம், வலிமை, கனம், பாரம், பூமி, மலை, குன்று, கருப்பம் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 1532 உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. திருமந்திரம்: 1541 வழியரண் டுக்குமோர் வித்தது வான பழியது பார்மிசை வாழ்தல் உறுதல் சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின் றழிவழி வார்நெறி நாடநில் லாரே. திருமந்திரம்: 2523 ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந் தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுடண் டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்கு வானகஞ் செய்யு மறவனு மாமே. 12 திருமந்திரம்: 2524 மாமதி யாமதி யாய்நின்ற மாதவர் தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந் தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக் காமல மற்றார் அமைவுபெற் றாரே. 13 மாணிக்க வாசகர். திருவாசகம். 9. திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்: (தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்) பூவியல் வார்சடை எம்பிராற்குப் பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறநிலாமே குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் தேவியுந் தானும்வந்தெம்மையாளச் செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196 ஔவையார். ஆத்திசூடி: 98. வல்லமை பேசேல். 99. வாதுமுற் கூறேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் பட்டினத்தார். பொது: அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன் எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே! 37 செல்வரைப் பின்சென் றுபசாரம் பேசித் தினந்தினமும் பல்லினைக் காட்டி பரிதவி யாமல் பரமா னந்தத்தின் எல்லையில் புக்குநல் ஏகாந்த மாய் எனக் காமிடத்தே அல்லல் அற்றுஎன்றிருப் பேன் ஆலநீழல் அரும் பொருளே! 38 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Hope the earth is sustaining the load of slanderer who disgraces one in behind only to save its own good virtue. | |
| |
Explanation : | |
Hope this earth is bearing on the load of the slanderer who disgraces one in behind, just to keep up its own good virtue. | |
| |
Message : | |
The earth is bearing on the slanderer's disgrace and load, is it to save its own good virtue? | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...