|
| |
| |
பொழிப்புரை : | |
நன்மை இலாதவற்றைச் சொல்லினும் சொல்லுக; சான்றோர், பயன் இலாதவற்றைச் சொல்லாமை நன்று. | |
| |
விரிவுரை : | |
சான்றோர் எனும் நல்லறத்தார் நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம் ஆனால் பயன் இல்லாதவற்றைச் சொல்லாமல் இருத்தலே நல்லது. ஒருவர் பயனற்றவற்றைப் பேசினால் எல்லோராலும் இகழப்படுவார்; அவரது பெருமையும் மேன்மையும் கெடும்; மேலும் பயனற்ற பேச்சைப் பாராட்டினால் மேலோர், கீழோர் எனும் எத்தகுதியும் பார்க்காது அவர் பயன் அற்றுப் போய் விடுவார் என்பதை இதுகாறும் சென்ற குறள்களில் வள்ளுவர் கூறியிருப்பதால், பயனற்றவற்றைப் பேசும் சான்றோர் சான்றோராகத் தொடர முடியாது என்பது மிகவும் தெளிவு. பிறகு ஏன் சான்றோர் நலம் அற்றதைப் பேசினாலும் பேசட்டும்; பயன் அற்றதை மட்டும் பேசாது இருக்கட்டும் என்கிறார் என்றால் நல்லவை, அல்லாதவை என்பனவற்றை விளக்க சான்றோர் நன்மை அற்றவற்றைக் கூடப் பேச நேரலாம். ஆனால் அத்தகைய தருணத்திலும் பயன் அல்லாதவற்றை உதாரணத்திற்குக் கூடச் சொல்லுதல் தவறு என்பது உட்கருத்து. அதாவது தவறிக் கூடப் பிழை செய்ய மாட்டாதவர் சான்றோர் என்பது முன்னரே வகுத்தாயிற்று. இங்கே அவர்களை அறநெறி முறையினின்று தவறுவதற்கு அனுமதியோ சலுகையோ வள்ளுவர் கொடுக்க வில்லை. மாறாக பிற உயிர்களின் நன்மைக்காகவே மேலே சொன்னதைப் போன்ற ஒரு தேவை ஏற்படின் சான்றோர் நலம் தராததைக் கூடப் பேசலாம் என்கின்றார். அதாவது கல்விக்கோ, வழக்கிற்கோ, உயிரைக் காப்பாற்றவோ அது போன்ற ஏதோ ஒரு நலன் கருதி, நலமற்றதைக் கூடப் பேசலமாமாம். ஆனால் பயன் அற்றதை மாத்திரம் எந்தப் பயன் கருதியும் பேசலாகாது என்பது கருத்து. நேர்மறை எண்ணங்களோடு திகழ வேண்டிய அற வழி உலகில் அமங்கலமானதைக் கூடப் பேச வேண்டி இருப்பின் பேசலாம் ஆனால் ஒரு போதும் அர்த்தமற்றதை அல்ல என்பது பொருள். சான்றோர்களின் அமங்கல வார்த்தைகளால், கோபத்தின் உச்சியில் சொன்ன அறம் எனும் வார்த்தைகளால், சாபங்களால், வாக்குகள் பலித்ததாய் புராணங்களும், வரலாறுகளும் பேசுகின்றன. அவர்கள் அபத்தங்களைப் பேசியதாய்க் காண்பது அரிது. எனவே சான்றோர்கள் கருத்தற்ற, அர்த்தமற்ற, பொருளற்ற, பொருத்தமற்ற வார்த்தைப் பிதற்றல்களை ஒரு போதும் உதிர்ப்பதில்லை. அவ்வாறான நேரத்தைப் பாழடிக்கும் வீண் பேச்சை அவர்கள் உரைக்கவும் கூடாது என்று கூறுவதன் வாயிலாக ஒவ்வொருவரும் சான்றோராகத் திகழ வேண்டும் என்பதே இக் குறளின் நோக்கம். | |
| |
குறிப்புரை : | |
சான்றோர் நன்மை அற்றவற்றைத் தேவை கருதிச் சொன்னால் கூடப் பரவாயில்லை; பயன் அற்றவற்றை மட்டும் சொல்லாமல் இருத்தலே நலம். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
நயன் - கனிவு, இனிமை, அன்பு, பரிவு, பண்பு, நலம், நாகரீகம், அருள், சிறப்பு, நன்மை, பக்தி, நற்பயன், கொள்கை, நியதி, உள்ளீடு, பசை, உறவு, வழிமுறை | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 392 பயன்எளி தாம்பரு மாமணி செய்ய நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு அயஓளி யாயிருந் தங்கே படைக்கும் பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே திருமந்திரம்: 396 ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார் இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும் பருவங்கள் தோறும் பயன்பல வான திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே திருமந்திரம்: 460 கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ் சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே திருவாசகம். மாணிக்கவாசகர். 5. திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்) சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30 ஔவையார். ஆத்திசூடி: 65. நன்மை கடைப்பிடி. ஔவையார். நல்வழி: பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களும் உளும் ஏவாதே நின்று உணர்வார் தாம் உளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 35 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Let the wise speak even the not good but not the useless words for the good. | |
| |
Explanation : | |
Let the wise of good virtues may even speak of non good but not the useless words for their own good. | |
| |
Message : | |
The wise may even speak the not good when may necessary but not the useless words is for own good. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...