|
| |
| |
பொழிப்புரை : | |
அரும் பயனை ஆராயும் அறிவுடையோர், ஆராய்ச்சியாளர், சொல்லார் பெரும் பயன் இல்லாத சொல். | |
| |
விரிவுரை : | |
அரும் பயன்களை ஆராய்ந்து தெளிந்து தெரிவிக்கும் அறிவிடையோர் பெரும் பயன் இல்லாத சொல்லைச் சொல்லார். அரிய வழிகளை, சூத்திரங்களை, பொருட்களை, மருந்துகளை, பயன்களை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், அறிவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், சித்தர்கள், மேதைகள், எழுத்தாளர்கள் பெரும் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்காள். வீண் விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள். ஆனால் இங்கே பெரும் பயனற்ற சொற்களை என்று சொல்வதன் மூலம் அத்தகைய மேதைகள் சில சமயங்களில் சிறு பயனற்ற சொற்களைப் பேசலாம் என்பது போல் தோன்றும். இதற்குக் காரணம் அவர்கள் மேதாவிகள். அவர்களின் அதீத சிந்தனை ஓட்டத்தில் வெளிவரும் சில சொற்கள் சாதாரண மானுடர்களுக்கு விளங்காமல் பயனற்றவை போலும் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவர்கள் பேசும் பேச்சிற்கு அர்த்தம் உண்டு. ஏனென்றால் அவர்கள் அடிப்படையில் பயனற்றவற்றைப் பேச மாட்டார்கள். உயிர்கள், இயற்கை, சுற்றுப்புறம், ஆன்மீகம் என்று பலவகைகளிலும் உலக மேம்பாட்டிற்கும், உயிர்கள் உய்வதற்கும் சிந்திக்கும் அத்தகைய ஆராய்ச்சியாளப் பெருந்தகைககள் நேரத்தை வீணடிக்கும் பயனற்றவற்றைச் சிந்திப்பாரா அல்லது பேசத்தான் செய்வாரா? ஆக அவ்விதமாகப் பயனற்றவற்றைப் பேசுவோர், வீண்விவாதத்தில் ஈடுபடுவோர் ஆராய்ச்சியாளர்களாகவோ, கண்டுபிடிப்பாளர்களாகவோ ஆக முடியாது என்பது உட்கருத்து. வீண் விமரிசனங்களுக்குத் தலையைக் கொடுப்போருக்கு நற்பயன் பற்றிய சிந்தனை எப்படி வரும்? தம் கடமைகளைச் செய்யவே தெரியாது பிறருக்குக் கொடிப் பிடித்துப் பாலாபிஷேகம் செய்வோருக்கும் ஊதாரித்தனமாகத் திரிவோருக்கும் அரும் பயன்களை ஆராய்கின்ற தன்மை எப்படி வரும்? குறிக்கோளற்றோருக்கும், முக்கியமானவை, அல்லாதவை என்று தரம்பிரித்து முன்னுரிமை கொடுத்துச் செயலாற்றத் தெரியாதோருக்கும், நேரத்தின் அருமை தெரியாதோருக்கும் அரியவை எப்படிச் சாத்தியமாகும்? புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் அர்த்தமற்ற குப்பைகளை எழுதி தமது நேரத்தையும் படிப்பவர் நேரத்தையும் வீணடித்தல் கூடாது என்பதும் இதிலிருந்து விளங்கும். அத்தகையோர் அரியவற்றை, புதியவற்றை, உயர்ந்த நிலையைப் பெற இயலாது என்பது தெளிவு. பயனற்றவற்றைத் தவிர்த்து, பேசும் சொற்களைச் சுருக்கி, காரியத்தில் ஈடுபடுவோரே அரிய, பெரிய வெற்றிகளை ஈட்டும் சாதனையாளர்களாக ஆக முடியும். உண்மையில் மேதாவிகளின் மவுனம் அல்லது குறைந்த பேச்சு என்பதும் அவர்களின் அறிவின் முதிர்ச்சியே. | |
| |
குறிப்புரை : | |
அரும் பயன்களை ஆராய்ந்து அறியக் கூடியோர் பயனற்ற எந்தச் சொல்லையும் சொல்ல மாட்டார்கள். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
அரும் - அரிய, சிறப்பான, அறிதற்கரிய, காணுதற்கரிய, செய்தற்கரிய, அருமையான | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 486 இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள் தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன் பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன் கெட்டேன் இம்மாயையின் கீழ்மையெவ் வாறே திருமந்திரம்: 520 எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல அம்பவள மேனி அறுமுகன் போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே. திருமந்திரம்: 676 மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன் தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக் கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின் மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே திருவாசகம். மாணிக்கவாசகர். 5. திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்) நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால் தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80 ஔவையார். ஆத்திசூடி: 72. நேர்பட வொழுகு. ஔவையார். நல்வழி: தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்று உணர். 40 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
The research scholars of greater usages will not utter much useless words. | |
| |
Explanation : | |
Those wise who analyze research and tell the greater utilities to the rest of world will tell not much useless words. | |
| |
Message : | |
Those wise who research and understand things of rare usages will not utter any useless words. | |
| |
*** |
வணக்கம் ஐயா,
ReplyDeleteதிருக்குறளில் இல்லாத சொல் எதுவென்று தாங்கள் கூற வேண்டும்
வணக்கம் மதன்மணி அவர்களே,
ReplyDeleteசொல் முக்கியமல்ல; கருத்து என்று சொல்லுங்கள். ஏனென்றால் வள்ளுவர் வார்த்தைகளைச் சுருக்கித்தான் குறளை வகுத்துள்ளார். இங்கே அனைத்து வார்த்தைகளையும் பயன் படுத்த அவர் முனைந்திருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர் தொட்டுப்பார்க்காத கருத்து என்று ஒன்று இருந்தால் அது பொருத்தமற்றதாயும், தேவையற்றதாயும் வேண்டுமானால் இருக்கலாமே தவிர மனித வாழ்விற்குத் தேவையான அனைத்தையுமே, சூழ்நிலைகள் அனைத்தையுமே அவர் திருக்குறளில் சொல்லிவிட்டார் என்று நம்பகமாகச் சொல்லலாம்.
இது கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாகக் கூடத் தோன்றலாம்.
ReplyDeleteஅதாவது வள்ளுவர் காலங்களைக் கடந்து நிற்கும் வரையிலே, மனிதருக்குத் தேவையானவற்றை வகுத்து, தொகுத்து, ஓர் எண்ணிக்கைக்குள் 133 அத்தியாயங்களுக்குள் அடக்கித் திருக்குறளைச் செய்துள்ளார். அவற்றைப் பின்பற்றினாலே மனிதருக்கு ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
இருப்பினும் அவர் இன்றையக் காலத்தில் இருந்திருந்து இவையும் தேவை என்று ஏதாவது தலைப்புக்களில் எழுதியிருப்பாரே ஆனால் எப்படி இருக்கும் என்ற எண்ணத் தொடர்ச்சியில், “குறள் ++’ என்பதை எழுத முனைந்துள்ளேன். ஏற்கனவே இரண்டு அத்தியாயங்கள் ‘தமிழ்க் கவிதைகள்’ பளாக் பக்கத்திலே பதித்துள்ளேன். காலமும், எண்ணமும் வாய்த்தால் இன்னும் தேவையானவற்றை, திருக்குறளின் நீட்சியாகப் பதிக்க எண்ணி உள்ளேன். அவற்றில் ஏதேனும் பொருந்தாதவை, அல்லது பிழையானவை என்று தெரிந்தால் சுட்டிக் காட்டுங்கள். அவற்றை மீள் கருத்தாக்கம் செய்வேன். காரணம் அவையும் காலங்களைக் கடந்து நிற்க வேண்டியவை என்று நானும் உணர்வதால்.
இவை போன்றே பல தலைப்புக்களையும் அவற்றிற்கான பால், இயல் என்பவற்றைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அத்தகைய உயரிய ஒரு பணியை இறைவன் அருள் இருந்தால் நிச்சயம் முடிக்க முயற்சிப்பேன்.
நன்றி.