|
| |
| |
பொழிப்புரை : | |
பொருள் அற்ற சொற்களை மறந்தும் சொல்லார் - மயக்கம் தீர்ந்து மாசறத் தெளிந்தவர். | |
| |
விரிவுரை : | |
மயக்கம் தீர்ந்து மாசற்று அறிவுநிலை தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொற்களை மறந்தும் சொல்லார். குழப்பமற்று, குற்றமிலாத தூய சிந்தனைத் தெளிவு பெற்றவர்கள் சுய நினைவோடு விழிப்பு நிலையில் இருப்பார்கள். அவர்களால் மறந்தும் அர்த்தமற்ற சொல்லைச் சொல்ல முடியாது என்பதே உண்மை. விழித்திருக்கும் போது விழிப்பு நிலையிலும், ஆழ் நிலைத் தூக்கத்திலும் உணர்வுநிலை தூங்காது சுய நினைவோடு விளங்குவோருக்கு பயனற்றவற்றைத் தவிர்ப்பது என்பது ஆச்சரியம் அற்றது. அவர்களுக்கு அது இயற்கையாகவே அமையும். ஆதலின் இக்குறளின் உட்கருத்து சந்தேகம், மயக்கம், குழப்பம், குற்றம் அற்ற சிந்தனைச் செம்மல்களாக, விழிப்பு நிலையில் சுய நினைவோடு திகழ விரும்புவோர் மறந்தும் பொருள் அற்ற பிதற்றல்களை, அபத்தங்களைப் பேசுதல் கூடாது என்பதே. அதற்கு பொருளற்றவற்றை மறந்தும் பேசுதல் கூடாது என்று மனிதர்களின் ஆழ்மனத்தில் பதித்துவிட்டால், இனி எல்லாச் சமயங்களிலும் தன்னியல்பாகவே அர்த்தமற்றதைப் பேச மாட்டார்கள் என்பது உளவியல் அறிஞர்கள் அறிவார்கள். அதைத்தான் இங்கே வள்ளுவர் வலியுறுத்திச் செய்கின்றார். அதாவது அவ்வாறு ஆழ்மனதில் பதிக்கப் பெற்றவர்கள் ஆழ்நிலைத் தியான மயக்கம் தீர்ந்து, மாசற்ற அறிவு நிலையில், தூய சிந்தனை பெற்றுத் தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொற்களை இனி மறந்தும் எப்போதும் சொல்லார். அவர்கள் அர்த்தமற்றவற்றைப் பேசக் கூடாது எனும் சுய நினைவோடு எப்போதும் விழிப்போடு திகழ்வார்கள். வள்ளுவர் மிகப்பெரிய உளவியல் அறிஞர் என்பதை விளக்கும் குறள்களில் இதுவும் ஒன்று. ஞாபகத்தில் வையுங்கள் ‘பொருள் இல்லார்க்கு இவ் வையம் இல்லை’; அதாவது அர்த்தம் அற்றோருக்கு இந்த உலகம் இல்லை. | |
| |
குறிப்புரை : | |
மயக்கம், கலக்கம், மாசு அற்றுச் சிந்தனை தெளிந்தவர்கள் பொருள் அற்ற சொல்லை மறந்தும் சொல்ல மாட்டார்கள். | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
பொச்சா - மற, இகழ் மருள் - மயங்கு, மனம் கலங்கு, தடுமாறு, மிரளு, வெருவு, வியப்படை, ஒப்பாகு, ஆவேசம், வெறி, மாசு - தூசி, அழுக்கு, அசுத்தம், தூய்மைக்கேடு, களங்கம், இருள், தீமை, குற்றம் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 694 காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற் காலது அக்கொடி நாயகி தன்னுடன் காலது ஐஞ்நூற் றொருபத்து மூன்றையங் காலது .(1). வேண்டிக் கொண்டஇவ் வாறே திருமந்திரம்: 698 ஒன்றது வாகிய தத்துவ நாயகி ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடில் ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம் ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே திருமந்திரம்: 699 முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன் முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின் முன்னுறும் ஐம்பத் தொன்றுடன் அஞ்சுமாய் முன்னுறு வாயு முடிவகை யாமே திருவாசகம். மாணிக்கவாசகர். 6. நீத்தல் விண்ணப்பம் (திருஉத்தரகோசமங்கையில் அருளியது- கட்டளைக் கலித்துறை) கொள்ளார் பிளவக லாத்தடங் கொங்கையர் கொவ்வைச்செவ்வாய் விள்ளேன் எனினும் விடுதிகண்டாய் விழுத்தொழுப்பின் உள்ளேன் புறமல்லேன் உத்தர கோசமங் கைக்கரசே கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டாண்டதெக் காரணமே. 106 ஔவையார். ஆத்திசூடி: 83. பேதைமை யகற்று. பட்டினத்தார். பொது: 22 என் செய லாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே! உன் செய லேயென்று உணரப்பெற்றேன்; இந்த ஊனெடுத்த பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே. | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
Those who are conscious and have clear vision will never utter meaningless words even by mistake. | |
| |
Explanation : | |
Those who have clear vision with free from bewilderment and defects will not utter meaningless words even by mistake of forgetting. | |
| |
Message : | |
Those who have clear mental vision free from bewilderment, perplexity and defects will never utter meaningless words even by mistake. | |
| |
*** |
உங்கள் சேவை மகத்தானது. குறை கூற ஒன்றும் இல்லை.. குரளுக்கு மேல் உள்ள படத்தைத் தவிர...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பிரகாஷ் அவர்களே.
ReplyDeleteபயனில சொல்லாமைதானே அதிகாரத்தின் தலைப்பு. அதைக் காட்டும் விதமாகவும், ”விழித்திருப்போர் பொருளற்றதைப் பேசமாட்டார்...” என்பதை விளக்கவும் பொருத்தமாகத்தானே தெரிகிறது.
அகத்திலே விழித்திருந்தால் புறப் பார்வையில் தேவையற்றவை தெரியாது என்று நினைக்கிறேன். இதையும் ஒரு சோதனையாகவே கொள்ளலாமே...
நண்பர் பிரகாஷ் அவர்களே,
ReplyDeleteஉங்களின் உணர்வுகளை மதிக்கின்றேன். வேறு படம் கிட்டி விட்டது. மாற்றி விட்டேன். இப்போது பரவாயில்லையா? மகிழ்ச்சியா?
Slotyro Casino, Cabazon | Mapyro
ReplyDeleteWelcome to 문경 출장안마 Slotyro Casino, Cabazon. The main 군산 출장샵 attraction for gamblers is the slot machine. 공주 출장안마 Enjoy a 당진 출장샵 great selection of table games such as roulette and 평택 출장샵 blackjack.