|
| |
| |
பொழிப்புரை : | |
தீப் பயன் தருவனவற்றை தான் பிறர் கண் செய்யாது விடுக; துன்பப் பிணிகள் தன்னை வருத்த வேண்டாதான். | |
| |
விரிவுரை : | |
துன்பப் பிணிகள் தம்மைப் பீடித்து வருத்த வேண்டாதாவன், பிறர் பால் தீமை விளைவிப்பதைச் செய்தல் கூடாது. ”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கூறுவதைப் போல, அவரவர் துன்பங்களின் துவக்கம் அவரவரே. ஆதலின் அத்துன்பம் தம்மை முழுவதுமாக வென்றுவிடக் கூடாது என்று விரும்புவோர், முதலில் பிறருக்குத் தீயவை செய்யும் எண்ணத்தை ஒழித்தல் வேண்டும். நாம் நமக்கு எதை விரும்புகின்றோமோ அதையே பிறருக்கு வழங்குதல் வேண்டும். ஏனென்றால் அவையே பன் மடங்கில் பிற்பாடு நம்மை வந்தடையும். முற்பகல் செய்த வினையே பிற்பகலில் பயனை விளைவாய்த் தருகின்றது. பிறர்பால் தீய எண்ணம் கொள்ளாதோருக்குத் தீமைகள் உண்டாவதில்லை. இருந்தும் அவர் மேல் வேண்டுமென்று தீமை செய்வோர் தாமாகவே அழிந்து விடுவர். ஆதலால் எதிர்பாராமல் ஏற்படுகின்ற துன்பங்கள் தாமாகவே மறைந்தும் விடும். உண்மையில் அவர்தம் நல் எண்ண மிகுதியால் அவருக்கு நன்மைகளே பெருகி வரும். ஒருவர் தீயவை எண்ணும் நேரத்தில் நன்மையை எண்ணினால் தேவையற்ற துன்பங்கள் தடுக்கப் படுவதுடன், உண்மையில் நன்மைகளே அதிகமாக விளைய வாய்ப்பு உண்டாகின்றது. ஆதலின் தீயவை, தம்மை அணுகுவதையும், தொடர்வதையும், தம்மைப் பீடித்து மிகுந்து வென்று துன்புறுத்தாமல் இருக்க வேண்டுவோர், அடிப்படை ஒழுக்கமாக எப்போதும் பிறர்பால் தீமை உண்டாவதை, விளைவதை விரும்பாதீர்; செய்யாதீர். | |
| |
குறிப்புரை : | |
தீயவை தன்னை வருத்த வேண்டாதவன் முதலில் தாம் பிறர்பால் தீயவற்றை எண்ணவோ, செய்யவோ கூடாது. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
தீப் பால - தீய பலன்கள் தருகின்ற நோய்ப் பால - நோய்ப் பலன்கள் தருகின்ற, பிணிகள் தருகின்ற நோய் - துக்கம், துன்பம், பிணி, வியாதி, நலிவு, வலி, குற்றம் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 538 ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே ஞானியை வந்திப் பவனுமே நல்வினை யான கொடுவினை தீர்வார் அவன்வயம் போன பொழுதே புகுஞ்சிவ போகமே. திருமந்திரம்: 431 உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை உள்ளமுந் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறி யாதே திருமந்திரம்: 432 இன்பப் பிறவி படைத்த இறைவனுந் துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன் என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை முன்பிற் கொளுவி முடிகுவ தாமே திருவாசகம்: 4. போற்றித் திருஅகவல் : (தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும் கதியது பரமா அதிசயம் ஆகக் கற்றா மனம் எனக் கதறியும் பதறியும் மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் பிறிவினை அறியா நிழல் அது போல முன் பின்னாகி முனியாது அத்திசை என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80 பட்டினத்தார். பொது: 19 மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும் நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே! ஔவையார். ஆத்திசூடி: 65. நன்மை கடைப்பிடி. ஔவையார். கொன்றை வேந்தன்: 69. போனகம் என்பது தான் உழந்து உண்டல் ஔவையார். மூதுரை: சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18 ஔவையார். மூதுரை: கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம். 23 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
That who desires not the afflictions for the self should never do the evil deeds to others. | |
| |
Explanation : | |
That who does not want the afflictions to influence and bring suffering for the self should not commit any evil deeds to others. | |
| |
Message : | |
That who desires not any suffering to the self firstly should not think or do any evil deeds to others. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...