Saturday, February 13, 2010

திருக்குறள்: 207 (செய்வினைப் பாவம் நின்று கொல்லும்...)

அதிகாரம்

: 21

தீவினையச்சம்

திருக்குறள் : 207

செய்வினைப் பாவம் நின்று கொல்லும்...

In English

எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்.

பொழிப்புரை :
[வேறு] எத்தகையப் பகையை உடையவரும் அதனின்று தப்பிவிடுவர்; [ஆனால் தீ] வினைப் பகை [அழியவே] அழியாது தொடர்ந்து பின் சென்று வருத்தும்.

விரிவுரை :
எவ்வளவு கொடிய பகையை உடையவரேனும் அதனின்று எவ்விதமேனும் முயற்சித்துத் தப்பித்து விடுவர். ஆனால் ஒருவர் செய்த தீ வினையால் விளைந்த பகைமை எனும் பலன் அழிக்க இயலாதவாறு, அவரைத் தப்பிக்க விடாது, பின் சென்றுத் துன்புறுத்தி வருத்தி நிற்கும்.

அதாவது ஒருவர் வேறு எப்படிப்பட்டப் பகையினின்றும் அல்லது இடர்களிலிருந்தும் முயற்சித்துத் தப்பிக்க இயலலாம்; ஆனால் அவர் பிறர் பால் செய்த தீ வினைப் பயனால் விளைந்த பகைமையிலிருந்து தப்பிக்கவே முடியாத வகையில் அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு வருத்தித் துன்புறுத்திக் கொல்லுமாம்.

வினையாலன்றி வருகின்ற எந்தப் பகையையும் இடரையும் ஒருவர் எவ்விதமேனும் வென்றோ அன்றில் தப்பித்தோ தவிர்க்கலாம். ஆனால் முன் வினைகளிலிருந்தும் பிறருக்குச் செய்த செய் வினைகளிலிருந்தும் தப்புவதற்கு வழியே இல்லை. “ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்” . எனவே செய்கின்ற ஒவ்வொரு வினையையும் சீர் தூக்கி நல்லதையே செய்ய வேண்டும் என்பது இக்குறளின் உட் கருத்து.

செய்து விட்ட வினையைத் திருத்துவது கடினம். சமயங்களிலில் இயலாமலே கூடப் போகலாம். ’விதியை மதியால் வெல்ல முடியாது’, ‘எல்லாம் விதிப்படித்தான் நிகழும்’ என்பவை, முன் வினைகளைத் திருத்த இயலாது என்பதன் சுருக்கமே. உதாரணத்திற்குத் தவறி ஒரு கொலையைச் செய்து விட்டால், மீண்டும் உயிர் தர இயலுமா?

ஆதலின் எப்போதும் தீய வினையைச் செய்வதில்லை எனும் கொள்கையுடன், சிந்தித்துப் பணி ஆற்றினால் இவ்விதமான மாற்ற இயலாத குற்றங்களிலிருந்து ஒருவர் தப்பிக்கலாம்.

எப்போதும் கருமங்களை எண்ணித் தெளிந்து துணிந்து, துவக்க வேண்டும். நடக்கும், நிகழும் நிகழ்வுகளை நாம் மதியால் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். ஒருவேளை அவை விதி வசத்தால் மாறான பலனைத் தர நேரினும் கூட நாம் மாறாது நல்லதை மட்டுமே செய்தலை ஒழுகுதல் வேண்டும்.

முன், பின் வினைகள் என்பதில் முன் வினைகளின் பலனையே விதி வசத்தால் ஆனது என்பது. பெற்றோர், உற்றார், சுற்றம், இற்றைய வாழ்வின் பலன்கள் எல்லாவற்றிலும் விதியின் தாக்கம் உண்டு. ஒவ்வொரு செயல் பாட்டின் முடிவிலும் முன் வினைகளின் தாக்கம் பிரதிபலிக்கும். அவையே எதிர் பாராத முடிவுகள் தோன்றுவதற்கான காரணமும் ஆகும்.

எனவே நன்மையே செய்வோருக்கு, முன் வினைகளிலும் நன்மை செய்திருப்போருக்கு எல்லாமே கூடி வரும். இன்பங்கள் நிறையும்.

”வினை விதைத்தவன், பலன்களை அடையாமல் ஓடித் தப்பிக்க முடியாது”. “முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்” , என்பதனால், செய்யும் ஒவ்வொரு செயலையும் எப்போதும் சீர் தூக்கிப் பார்த்து நல்லனவற்றை மட்டுமே செய்தல் அன்றிச் செய்வித்தல் வேண்டும்.

குறிப்புரை :
ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.

அருஞ்சொற் பொருள் :
உற்றார் - சிறப்பு அடைந்தவர்கள், உறவினர், நண்பர்
உய் - உயிர் வாழ், நற்கதி அடை, துன்பம் நீங்கப் பெறு, இருள் நீக்கு
வீயாது - அழியாது, நீங்காது, இறக்காது, மாறாது, ஓயாது, ஒழியாது
அடும் - காய்ச்சும், சமைக்கும், வருத்தும், அழிக்கும், கொல்லும், உருக்கும், குத்தும்.

ஒப்புரை :

திருமந்திரம்: 435
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

திருமந்திரம்: 667
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே

திருமந்திரம்: 744
மனைபுகு வீரும் மகத்திடை நீராடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே

திருவாசகம்:
4. போற்றித் திருஅகவல் :
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

பட்டினத்தார். பொது:
விட்டேன் உலகம்; விரும்பேன் இருவினை; வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய் கெடாத நிலை
தொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே! 24

என் செயலாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே!
உன் செயலே யென்று உணரப் பெற்றேன்; இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை இறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே! 22

அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே! 37

ஔவையார். ஆத்திசூடி:
59. தூக்கி வினைசெய்.

ஔவையார். கொன்றை வேந்தன்:
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஔவையார். மூதுரை:
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

ஔவையார். நல்வழி:
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஔவையார். நல்வழி:
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

***

In English:

Chapter : 21

Fear for Evil Deeds

Thirukkural : 207

The sin of evil deed afflicts undying...




In Tamil

enaip pakai uRRArum uyvar; vinaip pakai
vIyAthu, pin senRu, adum.

Meaning :
Whatever enmity one have may escape from it; but not from the sin of evil deed done as that would never die but afflict only after.

Explanation :

Whatever and however bad the enmity one has may strive and escape from it somehow. But one cannot from the sins of committed evil deeds on others as that would stay forever undying and afflicting with no room for them to escape.

It means that one can strive and escape somehow from the enmity or troubles and problems cropping up in life without much damage. But one cannot from the committed sins of evil deeds to others as that won't allow escaping but will give only hardships and afflictions later without any way to destroy it.

The enmity and any trouble coming out not though the past deeds may be escaped or redressed. But there is no way for one to escape one's own prior deeds. The prior deed reaps and feeds. Therefore one must weigh one's each and every action and should carry out only the good ones is the implied meaning here in this Kural.

It is very difficult to correct the already committed deed. Sometimes it may not be possible to rectify at all. "The destiny cannot be changed", "All will happen as per the fate" and all such are only summarizes that the prior deeds cannot be altered for its results. For example, after committing a murder, Is it possible for anyone to provide back the life?

Therefore with the firm mind that not to do any evil deeds as the policy, if one thinks and does one's work at always, one can escape from committing such unchangeable offenses.

Always we must think well, plan and start any work. We must address thoughtfully and act on the current events and happenings. By any chance of the fate even if they result unfavorably, we must not change from our stand but only should carry on with only the good deeds and virtues.

Among the deeds of the prior and past the prior one is what also known as the fate. Parents, relatives, environment, the result of current life deeds all have the impact of fate. It reflects at the end of each and every deed. In fact it is the actual reason for any improper results.

Therefore for those who do only good deeds, for those who have done good deeds prior all will happen favorably. Happiness gets filled.

It is because "That who sowed the evil deed cannot escape from its fruits." "Whatever done in the forenoon only results in the afternoon", one should really weigh one's each and every action and perform or make others to perform only the good deeds at always.


Message :
One can never escape from the sin of evil deed committed. That would ever stay undying to afflict and suffer later.

***

No comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...