|
| |
| |
பொழிப்புரை : | |
கேடு அற்றவன் என்பது அறிக - [ஒருவன்] தடம் வழுவித் தீவினை செய்யாதவன் என்றால். | |
| |
விரிவுரை : | |
ஒருவன் நன்னெறித் தடம் வழுவித் தீவினை செய்யாதவன் என்றால், அவன் கேடு ஏதும் அற்றவன் என்று அறிவில் தெளியலாம். நல்வழித் தவறி பிறர் பால் தீவினை செய்யாதவனிற்குக் கேடு ஏதும் இல்லை என்பது உட்பொருள். தீவினை செய்யாது நன்னெறிகளில் நடப்போரே மக்களால் மகான்களாக, புனிதர்களாகப் போற்றிக் கொண்டாடப் படுகின்றார்கள். பிறருக்கு இன்னல் விளைவிக்காதவரையே பிற உயிர்களும் நாடிச் செல்லும். அன்பும், ஆதரவும் தரும் இதயங்களின் அரவணைப்பில் தான் உயிர்கள் இன்பம் பெறுகின்றன. கேடு இல்லா மனிதர்கள் நன்மையே செய்யாது போயினும் அவர் தம் இயல்பால் நன்மை செய்தவர்களாகவே ஆவார்கள். அத்தகையோரால் தான் இவ்வுலகம் நிலைத்து நிற்கின்றது. நன்மக்கள் நிறைந்த இடத்தில் வாழும் வாழ்க்கை என்பதே கூட ஒருவருக்கு முன் செய்த நல் வினைப் பயனால் விளைவதே ஆகும். தீவினை செய்யாதே நன்னெறி நின்று கேடு அற்றவர்களாக உய்வோமாக. | |
| |
குறிப்புரை : | |
நல் வழித் தவறிப் பிறருக்குத் தீங்கு செய்யாதவனிற்குக் கேடு ஏதும் இல்லை என்று அறிக. | |
| |
அருஞ்சொற் பொருள் : | |
அருமை - அரியது, இல்லாமை, இன்மை மருங்கு - வடிவம், எல்லை, சுவடு, தடம், செல்வம், நூல், இடை, விலாப்பகுதி, பக்கம் | |
| |
ஒப்புரை : | |
| |
திருமந்திரம்: 785 மனையிலஒன் றாகும் மாதமு மூன்றுஞ்f சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி வினையற வோங்கி வௌiச்செய்து நின்றால் தனையுற நின்ற தலைவனு மாமே திருமந்திரம்: 798 தெக்கண மாகும் வியாழத்துச் சேர்த்திசை அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில் துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின் மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே திருமந்திரம்: 806 நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச் சந்தித் திருக்கில் தரணி முழுதாளும் பந்தித் திருக்கும் பகலோன் வௌiயாகச் சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே திருவாசகம்: 5. திருச்சதகம் (திருப்பெருந்துறையில் அருளியது) 1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24 பட்டினத்தார். பொது: 36 விடக்கே! பருந்தின் விருந்தே கமண்டல வீண நிட்ட முடக்கே! புழுவந்து உறையிடமே! நலம் முற்றும் இலாச் சடக்கே! கருவி தளர்ந்துவிட்டால் பெற்ற தாயுந்தொடாத் தொடக்கே! உனைச் சுமந்தேன் நின்னின் ஏது சுகமெனக்கே? ஔவையார். ஆத்திசூடி: 101. வீடு பெறநில். 105. வேண்டி வினைசெயேல். ஔவையார். கொன்றை வேந்தன்: 79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் ஔவையார். மூதுரை: நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று. 8 சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம். 30 ஔவையார். நல்வழி: நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும் பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும் சிவந்த தாமரையாள் தான். 21 | |
| |
*** |
|
| |
| |
Meaning : | |
That who slips not the virtuous path and commits no evil is to be known as the one free from ruins. | |
| |
Explanation : | |
When one does not slip from the good virtuous path and carry out not any evils, then can be comprehended that such is free from ravages. | |
| |
Message : | |
Know that there is no any disaster for that which does not slip from the virtuous path and does not do any evils to others. | |
| |
*** |
No comments:
Post a Comment
குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...